நீங்களும் நானும் மண்ணில் பிறந்து, மண்ணில் வாழ்ந்து, மண்ணிலேயே மரணித்துக் கொள்கிறோம். இந்த மண்ணில்தான் சந்தித்திருக்கிறோம். இப்போதும் இந்த மண்ணை நேசிக்கிறோம். எம்மைச் சூழவும் கட்டியெழுப்பப்பட்டுள்ள வர்த்தக வாணிபக் கொண்டாட்டங்கள், எமது பிள்ளைகளை, இந்த மண்ணுக்குள் மூடி மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைவிட்டுத் தொலைவாக்கியுள்ளன. இடர் மிகுந்ததெனினும் கௌரவத்துக்குரிய கடந்த காலத்தின் ஞாபகங்களை மறக்கச் செய்யக்கூடிய கொண்டாட்டங்கள் நிறைந்த இவ்வுலகை நோக்கி, பலம் மிக்க கரங்கள் எம்மைத் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன. எப்போதும் தமிழ் எழுத்துக்களைக் காண்கையில், அவற்றுள், இம்மண்ணில் கலைந்துபோன விடுதலையின் கனவு, தவிர்க்கவே முடியாமல் எனக்குத் தென்படுகிறது. தமிழ் எழுத்துக்களை வாசிக்கும், தமிழ் எழுத்துக்களை எழுதும், தமிழ் மொழியால் சிந்திக்கும், உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.
இலங்கைத் தமிழர் வரலாறு பற்றியோ, போரைப் பற்றிய ஒரு படைப்போ அல்ல. அங்குள்ள வாழ்வியல், காதல், உறவுகள் பற்றிய ஒரு படைப்பு (About sinhalese, mainly). ஒரு சிறிய, அழகிய, மனதை பிசையக்கூடிய உணர்வுகள் அடங்கிய புத்தகம். Highly recommended.