தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி, அஜித், விஜய் கடந்து தனுஷ், சோனியா அகர்வால் காலம் வரை நான் சினிமா நிருபராக இருந்து பலரிடம் பழகிய அனுபங்களின் தொகுப்பு இது. சில எனக்கும் சம்பந்தப்பட்ட சினிமா பிரபலம் மட்டுமே அறிந்தவை. வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாத இந்த உண்மைத் தகவல்கள். சினிமா கிசு கிசு போன்றவையோ, சினிமா துணுக்குகள் போலவோ இல்லாமல் சுவாரஸ்யமான ஒரு பக்க பேட்டிகள் போலவோ, ஒரு பக்க அளவிலான உண்மைச் சம்பவம் போலவோ அமைந்தவை. வாசகர்கள் சுவாரஸ்யம் உணர்ந்து சுருக்கமாக எழுதப்பட்டவை.
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.