கொஞ்சம் கொஞ்சமா உடம்பெல்லாம் பரவுற விஷம் போல, படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமா மூளையில் இருக்கும் அத்தனை நியூரான்களையும் இந்தக் கதை தன்வசமாக்கி கொள்வது போல ஒரு மாயை. விவரிக்கப்படமுடியாத, அனுபவிச்சா மட்டுமே புரியுற ஒரு ப்லேதோரா ஆப் தாட்ஸ் மனச சும்மா புரட்டிபோட்டுச்சு. என் வாழ்நாள்ல சத்தியமா இந்த கதையை இன்னும் பல தடவை படிக்க போறேன்னு மட்டும் தெளிவா தெரியுது.
டாப் ஸ்லிப்பில் டாக்டர் கேவோட பார்வையில இருந்து அந்த காட்டையும் அதனுள் வாழும் உறுப்பினர்களையும் பார்க்குற அனுபவம் எனக்கு ஒரு ஐ ஓபன்ர்ன்னு தான் சொல்லணும். இந்த கதையின் நரேட்டரை போலவே நானும் இந்த கதையோடவே வளர்ந்து, முடிவுல ஒரு முற்றிலும் மாறுபட்ட பெர்ஸ்பெக்டிவோட தான் போகிறேன்.
"ச்ச..என்ன கேவலமான பிறவிங்க ல நாமெல்லாம்" ன்னு இறைவி படத்துல ஸ்.ஜே.சூர்யா சொல்லுறாமாதிரி ஒரு புறம் தோனிட்டே இருக்க, டாக்டரை நினைக்கும் போது மனிதநேயம் எங்கேயேயும் போய்விடல ன்னு நரேட்டரை போலவே மனசும் ஒரு புறம் அமைதி கொள்ள- இந்த இரண்டு முரண்பட்ட எண்ணமும் மாறி மாறி வருவது இந்த கதையோட நரேஷனின் பலம்.
இந்த கதையில் என்னை கவர்ந்த சில வசனங்கள்-
"மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார்."
"அழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்னை உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில் பாய்ந்துசெல்லவேண்டும். இந்த காற்றும் இந்த வெயிலும் என்னை அன்னியமென ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும். அங்கே வலி உண்டு நோய் உண்டு மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒருதுளிகூட கீழ்மை இல்லை. ’உன்னை நன்கறிந்த எவரும் அருவருத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்ததரப் புழுதியே நீ’ நான் விசும்பி அழுதபடி ஜீப்பை நிறுத்திவிட்டேன்."
"எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு…என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார்."
"இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர் வளந்து வர்ரான். அவன்தான் ஐடி கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேல பாக்கறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான். அதனால தான் பெரிய பிறவி மேதைன்னு நினைச்சுக்கறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம் இருக்கு."