நண்பர் ஜோஸ் இதுவரை தான் கடந்த வாழ்வில், கனவுகள் தந்த, ஆசைகள் தந்த, பயணங்கள் தந்த, பணியிடம் தந்த நிகழ்வுகள் மற்றும் நினைவுகளில் மின்னும் சிலவற்றை இப்புத்தகத்தில் தூவி இருக்கிறார்.. கனவுகள் என்பது நாம் உணர்ந்து வாழாமல் நம்மையே அறியாமல் ஆரம்பமும் முடிவும் தெரியாமல் விடுபட்டச் சங்கிலித் தொகுப்புகளை கொண்ட ஒரு அனுபவம்.. இவ்வனுபவத்தில் கற்றுக்கொள்ளவோ, பெற்றுக் கொள்ளவோ நினைவுகள் கூட முழுமையாக மிஞ்சாது.. ஆனால் நண்பர் ஜோஸ் கனவுகளை மனதில் தொகுத்து எழுத்திலும் வடித்திருக்கிறார்... தான் கனவுகளில் கண்ட காட்சிகள் மட்டுமல்லாது தான் கனவில் கண்ட காட்சிகள் துரத்தியதால் பாதிக்கப்பட்ட சக உறவுகளையும் அந்த நிகழ்வுகளோடு அருமையாக விளக்கியிருக்கிறார்..