Jump to ratings and reviews
Rate this book

அக்காளின் எலும்புகள்

Rate this book
தாமிரபரணிக் கரையின் செம்மண் புழுதியெல்லாம் பரவியிருக்கும் அக்காள்களின் துயரப் பெருங்கதைகளை, மென் சந்தோஷங்களை, உயிர் எழுத்துக்களை தலைப்பாகவும், பின் மெய்யெழுத்துகள், பின்னர் உயிர்மெய் எழுத்துகள் என்று தலைப்பின் வழியே அக்காள்களின் உணர்வுகளை காட்சிப்படுத்துயிருக்கிறார் கவிஞர் வெய்யில். கோணங்கியின் நூல்வாழ்த்து தொகுப்பின் உக்கிரப்பக்கங்களில் நுழைந்து வந்ததைக் காட்டுகிறது. நூல் திறப்பிலேயே நமது கொடுப்பினையற்ற கையறு நிலை புலப்படுகிறது.

எத்தனை விதமான அக்காள்கள்.. காதல் முகிழும் பருவ வயதினள், சுற்றம் ஏற்காத காதல்வயப்பட்டவள், ரத்த பந்தங்களின் கொலைவாளுக்கு பலியானவள், புதிதாய் திருமணம் ஆனவள், கணவனைப் பிரிந்தவள், கணவனை இழந்தவள்.. அவரவருக்கு சொல்வதற்கு ஆயிரம் கதைகள்.. அதைக் கணவரின் கல்லறையில் இருந்து எடுத்து வந்த முயலிடம் சொல்கிறாள் ஒருத்தி. பேசும் குருவியை தோழியாக்கியிருக்கிறாள் மற்றொருத்தி. காதல் நாய்களுக்கு மறைவிடம் சொல்லித்தரும் கருணைகொண்டிருக்கிறாள் ஒருத்தி. புத்தி காணாத சிறுவனான தம்பிக்காக, கண்களை மூடும் அக்காவின் வெட்டுண்ட தலை வாசிக்கையில் உள்ளூர ஒரு நடுக்கம்.

அக்காளின் எலும்புகள் தட்டுப்படுவதையும், முகூர்த்த புடவை எத்தனை வண்ணங்களில் எரிந்தது தெரியுமா என்று கேட்பதையும், கண்ணீர்த்துளி சொட்டவும் ஆனந்தம் பெருகுகிறது குருதியாய் என்பதையும் நெஞ்சின் அடியாழத்து கத்திக்குத்தென வாசகருக்கு கடத்தியிருக்கிறார் வெய்யில். பனை மரங்களின் வாசனை, புழுதியின் வெம்மை எல்லாம் கவிதையினூடே காட்சியாய் விரிந்து கொண்டே வருகிறது.

எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம் என்ற வெய்யிலின் வரிகள், தாமிரபரணியில் பாய்ந்து செல்வது அக்காள்களின் செந்நீரும், கண்ணீருமே என்று அழுத்தமாய் உக்கிரமாய் சொல்கின்றன.

- ரஞ்சனி பாசு

80 pages, Paperback

Published January 1, 2019

3 people are currently reading
14 people want to read

About the author

வெய்யில்

5 books4 followers
வெய்யில் (இயற்பெயர்: வெயில்முத்து) தமிழ் நவீனக் கவிஞர். தமிழ் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். ‘கொம்பு’ எனும் சிற்றிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர்: பெருமாள் - தமிழ்செல்வி. மனைவி: பிரியா, மகள்: மாயா. தற்போது ‘ஆனந்த விகடன்’ குழும இதழில் பணிபுரிந்து வருகிறார். கவிதை குறித்தும் கவிதையின் அழகியல் குறித்தும் பல்வேறு தளங்களில் தொடர்ந்து பேசியும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தும் வருகிறார். கவிதை குறித்து தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுப்பதில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் பாடத்திட்டக் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (15%)
4 stars
10 (76%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Ananthaprakash.
90 reviews2 followers
October 28, 2024
அக்காளின் எலும்புகள் - வெய்யில்

எப்போதும் ஆயிரம் மின்மினிகளால் மட்டுமே சூழப்பட வேண்டிய அக்காக்கள் சமுகத்தாலும், ஆணவத்தாலும், சாதியத்தாலும் அதை விடாது தூக்கிச் சுமக்கும் உறவுகளாலும் சூழப்பட்டுப் படும் வேதனையின், இன்னல்களின், வலிகளின் கடக்க முடியா, இயலா துயர சித்திரம் தான் அக்காளின் எலும்புகள்.

பேய் பிடித்ததாய், பித்தானதாய், காக்கா தூக்கிச் சென்றதாய் காணாமல் போன அக்காக்கள் - சாதியின், ஆணவத்தின் வெறிகொண்டு நிகழ்த்தப்பட்ட வேட்டையின் பரிசாய் கழுத்தறுக்கப்பட்ட துயரத்தையும், பின் பிராயச்சித்தமாய் சுடுமண் சிற்பமாய், நிரப்பித் தைத்த பிண்டமாய், பிறந்த பிள்ளைகளின் பெயராய் உருமாறி நின்ற அவலத்தையும், உயிராக அன்பு செய்த அக்காக்கள், மெய்யாக வீட்டினுள் அலைந்து திரிந்த அக்காக்கள் - உயிரும் இல்லாமல், உடலும் இல்லாமல் ஒன்றுமில்லா சருகாகி, ஆழப் புதைக்கப்பட்ட எலும்பாகி எஞ்சி நின்ற வலியையும் பாடித் தீர்க்கிறது வெய்யிலின் கவிதை.

தன் இணையை இழந்த அக்காக்கள், தன்னை இழந்த அக்காக்கள், ஆழப் புதைக்கப்பட்ட அக்காக்கள் உயிரும், மெய்யும், உயிர்மெய்யுமாய் அலைந்து திரிகிறார்கள் வெய்யிலின் கவிதைகளுக்குள்.

சிலர் சுடுமண் சிலையாக உயிர்த்தெழுகிறார்கள், நூற்றாண்டுக் கதைகளை ரகசியமாய் முனகித் தீர்க்கிறார்கள், அலர் தூற்றும் ஊரை வேடிக்கையாய் கடக்கிறார்கள், கடல் கடந்த மச்சானின் வருகைக்காகக் கண் விழித்துக் காத்திருக்கிறார்கள், இல்லாத மச்சானின் வாசனையாய் சிகரெட் வாசனையை தனக்குள் நிரப்பி ஆசுவாசம் கொள்கிறார்கள், குருதியின் கறைகண்டு ரசித்துச் சிரிக்கிறார்கள், காதல் நாய்களின் ரத்தச் சிராய்ப்பை வருடிக் கொடுக்கிறார்கள், தம்பியின் அன்புக்குத் தன்னையே ஒப்புக் கொடுக்கிறார்கள், சன்னதம் எடுத்து ஆடுகிறார்கள், துர் கனவுகளை ஏவுகிறார்கள், துடிப்பேரிய அணங்காய் மாறி நிற்கிறார்கள், மத்தியானக் காட்டில் நீலியாய் உருவெடுத்து அலைந்து திரிகிறார்கள் - இருந்தும் அடங்குவதாய் இல்லை அக்காள்களின் ஆதாளி.

அத்தனை எளிதில் கடக்க  முடியவில்லை ஒரு துயரிலிருந்து மற்றொன்றுக்கு, ஆழப்புதைத்த அக்காளின் எலும்புக் கரங்கள் இறுக்கமாய் பற்றிக் கொள்கின்றன - ஒவ்வொரு வாசிப்பிலும். அத்தனை எளிதில் விடுவதாய் இல்லை ஏதேதோ சமாதானம் சொல்லிக் கடக்கிறேன்  ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு.

ஒவ்வொரு கவிதையையும் வாசிக்க, வாசிக்க ஆழப் புதைத்த அக்காள்களின் எலும்புகளுக்குள் மீண்டும் ஒரு முறை உயிர் துடித்து அடங்குகிறது. ஒவ்வொரு கவிதையின் வழியாக எப்படியேனும் மீண்டெழத் துடிக்கிறாள் அக்கா.

எப்படிச் சொல்வது அவளிடம் - அவளைத் தான் நாங்கள் மீண்டே எழ முடியாத ஆழத்தில் புதைத்து விட்டு வந்தோம் என்பதை.

முழுவதும் வாசித்து முடிக்கையில் ஆழப்புதைத்த அக்காளின் எலும்புகளுக்குள் சட்டென்று இருகண்கள் முளைத்து அகல விரித்து என்னைப் பார்ப்பதைப் போன்றதொரு உணர்வு. அதன் மிரட்சியை, வெம்மையைத் தாங்க முடியாமல் செய்வதறியாது மூடி வைக்கிறேன் புத்தகத்தை -  அக்காளுக்குச் சொல்லப் பதில்கள் ஏதுவுமின்றி.

நீங்களேனும் சொல்லுங்கள் அப்பா,

அப்படி அமாவாசை இரவன்று அக்காளுக்கு என்னதான் நடந்ததென்று..?

குருதி வழிந்து குற்றுயிராய் கிடக்கும் அக்காக்களும்,  இணை இழந்த அக்காக்களும், ஆழப்புதைக்கப்பட்ட அக்காக்களும் படையென வந்திருக்கிறார்கள் - இம்முறை என்ன சமாதானம் சொல்லித் திருப்பி அனுப்பி வைக்கட்டும், அதையும் சொல்லுங்கள்.
Profile Image for Unmaththan உன்மத்தன்.
Author 3 books18 followers
April 12, 2021
அக்காளின்எலும்புகள் படிக்கையில், என் முதுகெலும்பின் குறுகுறு மென்தண்டுகள் பற்றிபற்றி மேலேறுகிறது ரணம்.

உயிரெழுத்து, மெய்யெழுத்து மற்றும் உயிர் மெய்யெழுத்துக்களை கவிதையின் வரிசையெண்களுக்கு மாற்றாக உபயோகித்திருப்பதே, ரசிப்பதற்கான‌ ஆதிப்புள்ளியை வைத்து விட்டது.

'இணையிழந்த அக்காள்களுக்கு' என்று துவங்கியதன் அர்த்தம், படிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆழமாக புரிகிறது.
ஆணவப்படுகொலைகளை நினைக்காமல் எந்த பக்கத்தையும் தாண்ட‌ முடியவில்லை. மொத்த புத்தகத்தின் வலியையும், ஒரு சின்ன கவிதையில், சொல்லிவிட்டார் வெய்யில்.

அது,
"அக்காவை காக்கா
தூக்கிச் சென்றுவிட்டது
அவ்வளவுதான்."
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.