"திகட்டாத திமிரே".பாகம்: 2 தங்க கூண்டிற்குள் மனமுடைந்த கிளியாய் நானிருக்க... நீல வானில் சுதந்திரமாய் திரியும் பட்டாம்பூச்சியாய் நீ இருக்க... உன்னையே அடைய நினைத்தேன் நானும்... உன்னவனாய் மாற நினைத்தேன் நித்தமும். பாதை மாறிய என் வாழ்வதனை மீட்டு செல்ல வரமாய் வந்தவள் எனதிரு மித்திரர்கள். அவர்களின் அரவணைப்பதனில் நிலைபெற்ற நானும் முழுதாய் கரையேர துடிக்க... என்னை மீட்க வந்த விடிவெள்ளி நீயடி. என்று உன்னைப் பார்த்தேனோ அன்றே உணர்ந்தேன் நீதான் எனக்கானவளென. ஆனால் நீயோ என்னை நம்ப மறுத்தாய் உயிரோடு என்னை கொன்று புதைக்கிறாய். என்று நீ என்னை பார்த்து நல்லவன் அல்லன் என உரைத்தாயோ அன்றிலிருந்து இன்றுவரை உத்தமனாக வாழ்கிறேனடி உன்னையே நினைத்து எனக்கு கடிவாளமிட்டு உன்பின