இன்று இயல்பாகவே அவசரமும் பரபரப்பும் நம் வாழ்க்கை முறையில் வந்து விட்டது அதற்கேற்றார் போல் அவசர காதல் அதே வேகத்தில் அவசரமாக பிரேக்கப்பில் முடிந்து விடுகிறது. இரண்டாயிரத்தில் பிறந்த குழந்தைகள் கூட இன்று சர்வ சாதாரணமாக இரண்டு மூன்று பிரேக்கப் சந்தித்து இருக்கிறார்கள் அப்படியான விதவிதமான பிரேக் அப் கதைகளை சிறிய சிறிய கதைகளாக எழுதப்பட்டதுதான் இந்த நூல். ஆணாய் பிறந்த அத்தனை பேரும் காதலித்தே ஆக வேண்டும் தனக்கு ஒரு ஆள் இருந்தே தீர வேண்டும் என்று நினைக்கிறார்கள் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருவதால் அவரவர்கள் தங்களது முயற்சிக்கு ஏற்றார் போல் காதலிகளை கண்டுபிடித்து டார்ச்சர் செய்து, மிரட்டி ,ஏன் கொலை கூட செய்து காதலிக்கிறார்கள். ( வெட்டியே போடுவேன்டி, கொண்டே போடுவேன்டி போன்ற தமிழ் திரைப்படங்களின் வசனங்களை நினைவு கூறுக) ஒரே கருவை கொண்ட கதைகளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது ஏழு எட்டு கதைகளை குறைத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும். இந்த கதைகள் அனைத்துமே உண்மையான கதைகள் தங்கள் நண்பர்கள் மூலம் கதைகளை திரட்டி எழுதி இருக்கிறார் .உண்மையில் சிலரிடம் இப்படியான கதைகள் இருக்கும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமே ஒரு பிரேக்கப் காண கதைகள் இருக்கத்தான் செய்கிறது.