Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).
Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.
Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.
Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.
புத்தகம் : குழந்தைகள் நிறைந்த வீடு ஆசிரியர் : நா. முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 80
ஹக்கூக்கள் நிறைந்த புத்தகம் இந்த குழந்தைகள் நிறைந்த வீடு.
நா. முவின் மற்றுமொரு யதார்த்தமான கவிதைப்புத்தகம்.மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல் மூன்று வரிகளில் ரசிக்க, சிந்திக்க, சிலிர்க்க வைக்கிறார்.
"ரொம்ப நாளுக்குப் பிறகு காக்கை எச்சமிட்டதால் சூரியனைப் பார்த்தேன்."
அவசர வாழ்க்கையில் ரசிக்க மறந்த இயற்கையை பார்க்க வைக்கிறார் கவிதையாக.
"கடற்கரையில் ஊற்று தோண்டியதும் கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை"
புத்தகம் : குழந்தைகள் நிறைந்த வீடு எழுத்தாளர்: நா. முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 78
🔆 கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் கவிதை தொகுப்பு வரிசையில் - குழந்தைகள் நிறைந்த வீடு அவரின் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு.
🔆 " கடற்கரையில் ஊற்று தோண்டியதும் கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை" கடலின் இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்றாலும் கூட குப்பைகளுக்கு மத்தியில் தான் ரசிக்க வேண்டும்.
🔆 " சாமியின் முகத்தில் சந்தனக் காப்பு பல்லக்கு தூக்கிகளின் சாராயநெடி" " தெய்வம் வந்து ஆடும் பெண்ணின் விலகிய முந்தானையை யாரோ திருத்துகிறார்கள்" குடிமகன்கள் எல்லாம் பக்கமும் தான் இருக்கிறார்கள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
போன மாதம்(May 2025)நா.முத்துக்குமார் அவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ஜப்பானிய கவிதைகளின் தொகுப்பை வாசித்த எனக்கு,இந்த மாதம்(June 2025)மலையாளத்திற்கு கவிஞர் டாக்டர் ரகுராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள,நா.முத்துக்குமாரின் கவிதை தொகுப்பான,”குழந்தைகள் நிறைந்த வீடு”வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.இக்கவிதை தொகுப்பு மதுரை தியாகராசர் கல்லூரியின் முதுகலை தமிழ் இலக்கிய மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பது புத்தகத்தின் இறுதியில் அமைந்துள்ள ஆசிரியரின் உரையில் கண்ட விஷயம்😱
Best Haiku kavithaigal, based on our daily life. Very sarcastic and beautiful vision towards life. His perspective towards life is very simple and he definitely adores little things in life, which he expressed in his poetry.
More close to 7 to 8 words, he makes us think for about 5 minutes about that after reading.
இந்த ஹைக்கூ தொகுப்பு ஞாபகங்களின் ஒரு தொகுப்பு என்றே சொல்லவேணும். பல ஹைக்கூக்கள் நம்மை வியக்க வைக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன, இந்த ஹைக்கூக்களை குழந்தைகளாக பாவித்து இந்த புத்தகத்தை குழந்தைகள் நிறைந்த வீடென்று பெயர் வைத்திருக்கிறார் போலும்.
நா. முத்துக்குமாரை ஓர் பாடல் ஆசிரியராக பல தருணங்களில் என்னுடைய மனவலிகளுக்கு மருந்தாக இருந்திருக்கிறார். ஆனால் இவரின் எந்த ஒரு எழுத்தையும் வாசித்ததில்லை, பாடல் ஆசிரியர் என்றாலே கவிதைதான் என்ற எண்ணம் மனதில் தோன்றியதில் இவரின் கவிதை தொகுப்பு ஏதாவது ஒன்றை வாசிக்கலாம் என்று இருந்த நிலையில் இந்த புத்தகம் என்னுடைய கையில் அகப்பட்டது. இதில் இருக்கும் கவிதைகளின் வடிவம் 'ஹைக்கூ' என்பதை இத்தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையை வாசிக்கும் போது தான் அறிய நேர்ந்தது. கவிதையில் அப்படி ஒரு வகை வடிவம் இருக்கிறது என்பதை அப்போது தான் அறிந்தேன். அந்த ஹைக்கூ என்பது எப்படிப்பட்ட வடிவம் எதனால் இப்படி அழைக்கப்படுகிறது என்றும் அதனின் வரலாறும் அந்த வடிவத்தை பற்றிய புரிதலும் அந்த முன்னுரையை வாசித்தபோது ஓரளவு அறியமுடிந்தது.
திருக்குறளுக்கு எப்படி இரண்டு அடிகளோ அதேபோல் ஹைக்கூவின் வடிவம் மூன்றே வரியில் உருவாகும் கவிதைகள். அது எப்படி என்று ஆச்சரியத்தோடு தான் வாசிக்க தொடங்கினேன். கவிதையில் உள்ள முதல் இரண்டு வரிகளை வாசிக்கும் போது உருவாகும் படிமம் மூன்றாம் வரியை வாசிக்கும் போது முற்றிலுமாக வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது. அப்போது தரும் உணர்வெழுச்சிகள் அருமையாக இருந்தது. இந்நூலை வாசிக்கும் போது, நான் இருந்த மனநிலையில் இருந்து என்னை மீட்டெடுக்க பேருதவியாக இருந்தது, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதை போல் என்னை வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைத்தது. இதில் பேசப்பட்டுள்ள கவிதைகள் எல்லாம் நம்முடைய அன்றாட வாழ்வியலில் நம்மை சுற்றி இருக்கும் நிகழ்வுகளும் பொருட்களும் சம்பவங்களும் மனிதர்களும் இப்படி நம்மை சுற்றியுள்ளவைதான். வாசிப்பின்பத்திற்காகவே இந்நூலை வாசிக்கலாம். இவரின் மற்ற சில படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தது.