அனைவருக்கும் வணக்கம். "நிசப்த மொழி" கடந்த டிசம்பர் மாதம் 2020-ஆம் ஆண்டு, "கண்மணி" வார இதழில் பிரசுரமானது. கதைக்களம் : ------------------------ தோல்வியில் முடிந்த ஒரு காதல்… காதலின் முடிவு என்னவாய் இருக்கும் என தெரிந்ததாலோ என்னவோ, வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் ஒதுங்கி சென்ற காதல்... வார்த்தைகளால் தானே வெளிப்படுத்தவில்லை? அடி மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறதே! அதன் நிலை? அதன் எதிர்பார்ப்பு? நேரில் பார்க்கும் வரை கூட, அவ்வப்பொழுது உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம்? நேரில் கண்ட பின்னால்? அதிலும் நலமாக இல்லை என்று தெரிந்த பின்னால்? அநாதரவாக இருக்கும் நிலையை தெரிந்து கொண்ட பின்னால்? மனம் எத்தனை பாடு படும். முதலில் மெல்லிய சோகம் இழையோடியது போல தொடங்க&#