நாலாந்தர எழுத்து குடும்பத்திலிருந்து வரும் மற்றொரு புத்தகம் வியனின் விமானப் பயணம். இது பயணக் குறிப்புகள் அல்லது விவரங்கள் அல்ல. பயணத்தில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு.நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் அதே வேளையில் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் எழுதவும்.அமேசான்.காமில் ஆங்கிலத்தில் உங்கள் கமெண்ட்களை இடவும்.என்றும் அன்பும், நன்றியும்.வியன் பிரதீப்
வியனின் விமானப் பயணம், Viyan Pradheep அவரது பயண அனுபவங்களையும், அவர் சந்தித்த சிக்கல்களையும் உதவிய மனிதர்களையும் பற்றிய சிறு நூல்.
விமான பயணங்கள், வெளிநாட்டு சூழல் பற்றிய செய்திகள் புதியதாகவும், அனுபவிக்க தூண்டுவதாகவும் இருந்தன.
பயண கட்டுரைகளுக்கே உரிய அனுபவ பகிர்வை வாசகனுக்கு கடத்துவதில் அவர் வெற்றி அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அட்டை பட வடிவமைப்பு அருமை. மேலும் இது போல் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துகள்.
ஸ்விட்சர்லாந்தின் Lucrene ல் இருந்து இத்தாலியின் Milan வருவதற்குள் தம்பி Viyan பிரதீப்பின் பயணப்புத்தகமான “வியனின் விமான பயணத்தை” படித்து முடித்துவிட்டேன்.
பயண புத்தகங்கள் மூலம் பல நுண்ணிய கருத்துகளை பரப்பிவிட முடியும். அதற்கு சான்றாக இரண்டு எழுத்தாளர்களை சொல்லலாம். ஒருவர் மருத்துவர் அருணா அவர்கள். இன்னொருவர் தம்பி வியன். இந்த புத்தகத்தை வாசித்த பின் எனது ஐரோப்பிய பயணத்தை புத்தகமாக எழுத வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெற்று இருக்கிறது!
வியனின் பலமாக நான் கருதுவது அவரது எளிமையான எழுத்து நடை தான். அதுவே நம்மை வேகமாக வாசிக்க வைக்கிறது. இதே பாணியில் அவர் எழுதி, பல்வேறு படைப்புகளை உருவாக்க வேண்டும்.
இது தன் வெளியீடாக வந்த புத்தகம் என்பதும் முக்கியமானது. தானே எழுதி, தானே வெளியிட்டு - பலரையும் இந்த புத்தகத்தை வாசிக்கவும் வைத்திருக்கிறார். புதிதாக எழுத நினைப்பவர்கள் வியனை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். புத்தகங்கள் எழுதவும், பதிப்பிக்கவும் ஆர்வம் இருப்பவர்கள் வியனை தொடர்ப்பு கொள்ளுங்கள்!