நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான என் இலக்கியப் பயணத்தில் அவ்வப்போது சில புத்தகங்களுக்கு எழுதிய மின்னுரைகள், சில புத்தகங்களுக்கு எழுதிய மதிப்புரைகள் என 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம், ஓவியம், சிற்பம், திரைப்படம், காலம், சமூகம், வாழ்வு, கனவு பற்றிய என் பார்வைகளினால் உருவான கட்டுரைகள் இவை. ஓரளவாவது பெறுமதியானவை எனக் கருதியவை மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. 1977இல் ‘வைகை’ முதல் இதழில் இடம்பெற்ற ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைக்கதைப் புத்தகம் பற்றி வெங்கட் சாமிநாதனுக்கு எழுதிய கடிதம் முதல், 2018 ஏப்ரலில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் சுமதி தங்கப்பாண்டியனின் ‘நிழல்வெளி’ ஆய்வு நூலுக்கு எழுதிய மதிப்புரை வரையானவை இவை. நாற்பது ஆண்டுகாலப் பார்வைகளின் தடங்கள் இவ
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.