Jump to ratings and reviews
Rate this book

சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை

Rate this book
உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்த மந்திரிசபை (கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றுக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்த முறிக்க முடியாத உறவு நூலிழையாக நைந்து இற்றுப்போக ஆரம்பிக்கிறது — புத்தக வாழ்விலிருந்து, வாழ்க்கையை வாழும்வரையான, இந்தத் துணிச்சலான, ஆனால் வேதனை நிரம்பிய பயணத்தின் அத்தாட்சிப் பதிவேடு இ்ந்நாடகம்.

100 pages, Paperback

First published October 1, 1978

9 people want to read

About the author

Surendra Verma

98 books29 followers
शिक्षा: भाषाविज्ञान में एम.ए.।

प्रकाशित कृतियाँ:

उपन्यास: अँधेरे से परे, मुझे चाँद चाहिए, दो मुर्दांे के लिए गुलदस्ता।

कहानी-संग्रह: प्यार की बातें, कितना सुन्दर जोड़ा।

व्यंग्य-संग्रह: जहाँ बारिश नहीं।

नाटक: तीन नाटक, सूर्य की अन्तिम किरण से सूर्य की पहली किरण तक, आठवाँ सर्ग, छोटे सैयद बड़े सैयद, शकुन्तला की अँगूठी, एक दूनी एक, कश्ैद-ए-हयात तथा नींद क्यों रात-भर नहीं आती।

सम्मान: केन्द्रीय संगीत नाटक अकादेमी, साहित्य अकादेमी तथा भारतीय भाषा परिषद द्वारा।

सम्प्रति: स्वतंत्र लेखन।

सम्पर्क: 631, शान्तिवन, न्यू लिंक रोड, अँधेरी (प.), मुम्बई-400088

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (55%)
4 stars
3 (33%)
3 stars
1 (11%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
April 10, 2025
புத்தகம் வாங்கிய நாள்: 10 ஜனவரி 2024
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 181 - க்ரியா பதிப்பகம்

மூல மொழி : ஹிந்தி
எழுதியவர்: சுரேந்திர வர்மா
தமிழில் மொழியாக்கம் செய்தவர்: வி.சரோஜா

வாசிப்பனுபவம்:

கட்டுரை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு, குறுநாவல் மற்றும் புதினம் (நாவல்) போன்ற நூல் வகைமைகளை மட்டுமே வாசித்த எனக்கு நாடக வடிவத்தில் எழுத பட்டிருக்கும் இந்த கதையை வாசித்தது சிறிது வேறுபட்ட அனுபவத்தையும் சிறிது பரிச்சயமானதொரு உணர்வுகளையும் தந்தது. இந்த வடிவம் கடித இலக்கியத்திற்கு சற்று நெருக்கமாக உள்ளதாகவும் எனக்கு புலன்பட்டது.

கேரளாவின் நிகழ்த்துக் கலையான கதகளியில் இரண்டு வகையான சாஹித்யம் உண்டு. ஒன்று பதம் மற்றது சுலோகம். சுலோகம் என்பது விவரணை அல்லது எழுத்தாளனின் குரல். பதம்தான் கதைமாந்தர்களின் குரல்.

நாடகத்தில் உள்ளது கதைமாந்தர்களின் குரல் மட்டுமே!

பொதுவாக சிறுகதைகளிலும் நாவல்களிலும் உரையாடல்கள் மட்டும் இல்லாது ,கதாபாத்திரத்தின் மனவோட்டம், கதை சொல்லும் கதை சொல்லியின் அவதானிப்பு , முன்கதை சுருக்கம் , வரையறையற்ற அகவெளி மற்றும் புறவெளி பற்றிய விவரணைகளும் உரையாடலின் நீட்சியாக காணப்படும்.

இதற்கு மாறாக நாடகம் என்ற வடிவம் மேடையில் அரங்கேற்றத் தக்கதொரு வெளியில் அமைக்கப்பெற்று அதிலுள்ள கதைமாந்தர்களின் உரையாடல் கொண்டு மட்டுமே முன்னகர்கிறது. இந்த வரையறையில் எழுத்தாளர் தன் பாய்ச்சலை தெறித்திருப்பதுதான் நாடகத்தின் சிறப்பு.

ஒரு அரச தம்பதியுடைய அந்தரங்கத்தை ஊரறிய செய்து, மீறளுக்கான கோட்பாடுகளை உள்ளடக்கிய பொதுபத்தியில் அந்த மீறலுக்கு ஒரு நெறி சார்ந்த இலக்கை காரணமாக காட்டி முலாமும் பூசி அந்த மீறலை புனிதப்படுத்தி அந்த தம்பதியின் விருப்பத்திற்கு எதிராக அவர்களை கொண்டே அந்த மீறலை அரசவை நிகழ்த்துவதே எனக்கு சற்று புதுமையாக இருந்தது.

கடமைப் பாவை என்ற சொல் தமிழரகாதியில் இதற்கு முன் நான் கேட்டிராத ஒன்று. இந்த நாடகத்தின் நாடியே இந்த சொல்லைச் சுற்றி தான் நகர்கிறது.

இழிவான செயல் என்று கற்பிதம் செய்யப்ப்பட்ட எதையுமே சமூகம் அல்லது அரசவையால் அனுமதிக்கப்படும் போது புனிதம் என்ற படிமத்தை பெற்று தன்னை புதுப்பித்து கொள்கிறது. அதாவது, நம் தேவைக்கேற்ப நியமங்களை மாற்றிக்கொள்ளலாம். லிஜோ ஜோசின் சுருளி திரைப்படத்தில் பின் வரும் வசனங்கள் நினைவிற்கு வருகிறது

"ஷாப்பு பள்ளி ஆயதானோ? அதோ பள்ளி ஷாப் ஆயதானோ? இதன் அர்த்தம் கள்ளு கடை தேவன் கோவிலாக மாறியதா? அல்லது தேவன் கோவில் கள்ளுக் கடையாக மாறியதா?

தன்னியல்பால் இருமனமும் உடன்பட்டு இருபாலினர் ஒரு அறையில் புணரும் ஒரு தருணம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணத்தின் பின் நிகழும் பொருட்டு அதற்கு சாந்தி முகூர்த்தம், முதல் இரவு என்ற பெயர்களால் திருமணச் சடங்காக பின்பற்றுவர். அதாவது சமூகத்தாலும் அரசாலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறவாக கருதப்பட்டது.

ஒரு வேளை இருவரும் மணமாகாமலோ அல்லது வேறொவருடன் மனமானவர்களாக இருந்தால் அதற்கு நம்மூரில் கள்ளக் காதல், திருமணத்திற்கு புறம்பான உறவு போன்ற இழி சொல்லால் அறியப்படும்.

என் நினைவுக்கு வந்த சில மீறல்களின் முரண்கள்

ஒரு முஸ்லீம் ஆணுக்கு ஒரே பெண்ணை இரண்டு முறை விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொள்ளும் சுதந்திரத்தை இஸ்லாம் தருகிறது. ஆனால் மூன்றாம் முறை திருமணத்தை முறித்து மீண்டும் அந்த பெண் தனது முதல் கணவனுக்குத் திரும்புவதற்கு முன் மற்றொரு ஆணுடன் திருமணம் செய்து அவருடன் ஓர் இரவைக் கழிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது . மேலும் அந்த ஆண் இறந்தாலோ அல்லது விருப்பத்துடன் விவாகரத்து கேட்டாலோ மட்டுமே, அந்தப் பெண் தன் முதல் கணவனிடம் சென்று மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இன்று இயற்கை முறையில் குழந்தை பெறமுடியாத சில தம்பதியினருக்கு விந்தையோ அல்லது கருமுட்டையையோ தானமாக பெறுவதற்கு மருத்துவர்களால் அறிவுரை செய்யப்படுகிறது. சிலர் அதை ஒப்புக்கொண்டு செயற்கை முறையில் உருவான கருவை ஒரு மருத்துவரின் உதவியால் தனது கருப்பையில் செலுத்தி கொண்டு அதன் மூலம் குழந்தையும் பெற்று கொள்கின்றனர். காரணம் இந்த முறையில் பொதுபுத்தியிலிருக்கும் கண்ணியம் காக்க படுகிறது.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வேறொருவரை நேரடியாக புணர்ந்தால் மட்டுமே குழந்தை பெறுவது சாத்தியம். இதை விருப்பத்துடன் செய்பவரும் உண்டு விருப்பமில்லாமல் செய்பவரும் உண்டு. Romance X என்ற பிரெஞ்சு மொழிப்படத்தில் முகமூடி அணியாமல் இரு பாலினரும் ஒரு துளையின் வழியாக புணரும் ஓர் காட்சி வரும். இதற்கு Glory Hole (மகா துளை ) என்ற ஒரு வரலாற்று பெயரும் உண்டு. மகிமை துளை என்பது ஒரு சுவர் அல்லது தடுப்பின் வழியாக வெட்டப்படும் துளை ஆகும், தடுப்பின் இருபுறமும் உள்ளவர்களுக்கு இடையே அநாமதேய பாலியல் செயல்பாடுகளின் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டது இந்த துளை. மகிமை துளை வழியாக சுவரின் இரு பக்கங்களையும் இணைக்க ஒரு பாலமாக மேடை பொருத்தப்பட்டிருக்கும்

அதாவது, துளையின் ஒரு பக்கம் கருத்தரிக்க விருப்பமுள்ள பெண் மேடையில் படுத்திருக்க, தனது தொடைகள் இரண்டையும் துளையின் மறுபக்கம் விரித்து யோனியை தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் வைத்திருக்க, அந்த கூடத்தில் உள்ள ஆடவர்கள் வந்து முகம் பார்க்காமல் நின்றவாறு புணரலாம்.

சில ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு, இந்த மகிமை துளை, புணரும் இணையரை பாலியல் ஆசைக்கான ஜடப்பொருளாக பார்க்க உதவுகிறது. 1707 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள "தாமஸ் வாகன் மற்றும் தாமஸ் டேவிஸின் சோதனைகள்" என்று அழைக்கப்படும் நீதிமன்ற வழக்குதான் , மகா துளைக்கான முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வு. அங்கீகரிக்கப்படாத உறவில் முகந்தெரியாதவரைப் புணரும் போது ஒரு வகையில் குற்றவுணர்ச்சியும் குறைந்தவாரு இருக்கும். உயிர் மற்றும் உடல்தேவைக்கான ஒரு கருவி போலவே கருதத்தூண்டும். முகத்தின் தரிசனத்தில் தான் சங்கோஜமும் உள்ளது, காரணம் முகம் ஒருவரின் அடையாளம் மற்றும் உணர்வுகளை பரிமாறும் முகப்பு.

மலட்டுத்தன்மையுள்ள கணவருடன் தனது திருமணத்தை காப்பாற்றும் முயற்சியில், ஒரு கவர்ச்சியான புலம்பெயர்ந்த தொழிலாளியுடன் ஆபத்தான உறவைத் தொடங்கும் மனைவி இறுதியில் தனது உண்மையான சுயத்தை கண்டெடுக்கும் கதையை சொல்லும் Never Forever திரைப்படத்திற்கும் சுரேந்திர வர்மா எழுதிய இந்த நாடகத்திற்கும் நிறைய ஒற்றுமையை காண்கிறேன்.

Never Forever திரைப்படத்தில் சோஃபீ லீ தன்னிச்சையாக ஒரு இணையரை தேடி உடலுறவின் மூலம் கருவுருகிறாள். ஆற்றொணா நிலையில் இதை தான் நிகழ்த்தினாலும் மிகுந்த வேதனையுடன் தனது உணர்வுகளை வன்முறைக்கு உட்படுத்தியே இதை நிகழ்த்துகிறாள். அவளது இலக்கை அடைவதற்கு தானே இந்த பாதையை தேர்ந்தெடுக்கிறாள்.

சீலாவதியின் கதையும் ஏறத்தாழ இதுதான். இருவருக்கும் ஒரு அழுத்தம் இருந்தது. ஆனால் சோஃபியின் தேர்வு தனது முடிவு. அவள் பாலியல் சுகத்தை அனுபவித்த பெண். சீலாவதியின் இந்த அயல் தொடர்பு அவளது முடிவல்ல. அவள் மேல் அரசவையால் திணிக்கப்பட்ட முடிவு. .

சீலாவதி (நன்னடத்தையுள்ள என்று பொருள் கொண்ட பெயர் ) தனக்கு
நிகழ்த்தப்பட்ட மீறலில் வேண்டா வெறுப்பாய��� அதில் பங்குபெற அங்கு எதிர்பாரா திருப்பங்களுடன் நடந்தேறும் நிகழ்ச்சிகள் வாசிக்கும் சுவார்யசத்தை கூட்டுகிறது.

இந்த மீறலை எந்த மனநிலையில் அணுக வேண்டும் என்று தனக்கு கற்பித்த முதல் மந்திரி, ராஜகுரு மற்றும் சேனாதிபதியின் முகங்களில் சாணியை வாரி அடிப்பது போல் அமைந்த நாடகத்தின் இறுதிக்காட்சி நான் எதிர்பாராதது.

சற்று பிசகிரியிருந்தால் இந்த நாடகம் பொதுப்புத்தியில் மலிவு இலக்கிய வரிசையில் இடம்பெற்றிருக்கக்கூடும். ஆனால் சொற்களை மிக பாந்தமாக பிரயோகித்து அழகியலோடும் கையாண்டதால் விரசம் தெரியவில்லை. சீலபதி தன்னையும் மனித உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உணர்ந்து உதிர்க்கும் சொற்களை திறம்பட கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் .

எல்லாம் சரி - இந்த கதையை ஏன் எழுத்தாளர் சரோஜா தமிழுக்கு கொண்டுவர விரும்பவேண்டும் என்று நினைக்கும் போதுதான் பின்வரும் தத்துவம் புலப்பட்டது.

கடமைப் பாவையாய் (பவனி வரும் அந்த நிகழ்வை ) தன் அந்தரங்க மீறலை அரசவை மற்றும் சமூகமுத்தினரால் இயல்பாக்கப்படுவதை அவரால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. சீலபதியின் உளவியல் சிக்கலை சற்று உற்று நோக்கின், அவள் இந்த சந்தர்ப்பவாதிகளின் அதிகாரத்தினால் தனக்கு அளிக்கப்படும் மீறலில் இருந்து விலக்கப்பட்ட ஒரு மாற்று வழியையே வெறுக்கிறாள். மாறாக அந்த வழியை தனக்கு தானே ஏன் வழங்கிக்கொள்ள முடியாது என்ற கேள்வியும் எழுகிறது. பாலியல் இன்பம் என்ற ஒன்று இருப்பதை உணராத சீலாவதி அதை உணர்ந்தபின் அவள் தன்னை மறுவரையறை செய்துகொண்டு, தன் புதிய பதிப்பை கட்டவிழ்த்துவிடுகிறாள்.

தன்னை கடமைப் பாவையாக்கி அவளது முதலிரவை மந்திரி சபை நிகழ்த்தியது. ஆனால் இனி வரும் இரவுகளை சீலாதேவி தன்னிச்சையாக நிகழ்த்துவதாக முடித்திருபது (அதுவும் மந்திரி சபையின் விதிகள் மற்றும் வரையறைக்கு உட்பட்டு ) பெண்ணியத்தின் வெளிப்பாடாகவே எனக்கு புலன்படுகிறது. காரணம் அவள் எப்படி உணர வேண்டும், அவளுக்கு என்ன தேவை என்று கட்டளையிடும் திணிப்பு வலையிலிருந்து தன் முனைப்போடு தற்காலிகமாக விடுபடுகிறாள் சீலாவதி

மன நிறைவையளித்த புத்தகம்
10 reviews
June 7, 2025
Rough thoughts.

Unfortunately, this is quite literally the best play I’ve read so far. Even while reading it, each dialogue left me spellbound—so vivid and precise that it required no imaginative effort to envision the acting. Yet the moral dilemma it presents, and the way the situation grows increasingly complex towards the end, left me deeply unsettled.

I had some prior understanding of what Niyoga entailed, and assumed it to be a completely detached, passionless exercise. I began the play with that mindset, which made the second and third acts all the more shocking. The name Okkaak itself reads like a cruel, intentional joke.
This entire review has been hidden because of spoilers.
250 reviews4 followers
March 25, 2025
An unprecedented writing in Indian literature that I have read so far. Such a bold topic , that could have gone to vulgarity or obscenity but the author has kept it to the point where the question is of personal needs , desire over the larger organisational goal for which one had not even signed up.

The way female lead sheelavati opens in the last act and sheds her light on this perspective is writing at its very best. One may feel for okakaak who actually was helpless in all situations alike.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.