இது ஒரு விருவிருப்பான குறுநாவல். மதுரையை களமாக கொண்டு புனையப்பட்டுள்ள கதை.
முதல் அத்தியாயத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர், அவர் குடும்பம், கொலை செய்தவன், அவன் பின்னணி என நகரும் இந்த நாவலின் இடையே புறாகள் வளர்க்கும் ஒரு மனிதன் பற்றிய கதையும் வருகிறது. அதுவும் சாதாரண புறக்கள் இல்லை. ரேஸ் புறா.
இந்த மனிதனின் உணர்வும், புறாக்கள் மீதான பாசமமும் நம்மை ஏதோ செய்கிறது.
இந்த இரண்டு தனித்தனி கதைகளையும் ரேஸ்க்கு சென்று திரும்பாத ஒரு புறா இணைக்கிறது.
பந்தயத்திற்குகாக வளர்க்கப்படும் பறவைகள் குறித்து நிறைய தகவல்கள் எனக்கு பிராமிப்பாக இருக்கிறது.
ஒரு புறா ரேஸ்க்கு எவ்வளவு செய்யவேண்டும், அதை செய்பவனின் உழைப்பு, அவன் மனநிலை ஆகியவை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். புறா ரேஸ்யில் ஒரு அரசியல் உள்ளது, அது தன் எதிரியின் புறாக்களை ஈவு இரக்கமின்றி கொல்லவும் தயங்காது என்பதையும் கதையில் காட்டி இருக்கிறார்.
முழு கதையையும் ஒரே மூச்சை படித்து முடிக்க வைக்கும் வகையான எழுத்து.
ஒரு சூப்பரான திரைக்கதை மெட்டீரில்.
இவரின் பிற நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தருகிறது.