முதல் கதை போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களின் கதைகளடங்கிய தொகுப்பு. போட்டியின் சுவாரஸ்யம் யாதெனில் முதல் பரிசு பெற்றவர் யாரென்பது தெரியாது. மின்னஞ்சலில் கதை வந்தது. போட்டியில் தேர்வானது. வெற்றி பெற்றவருக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரைக் குறித்த தகவல் கேட்டபோது தான் யாரென்பதை சொல்ல விரும்பவில்லை என்றார். வங்கிக் கணக்கை மட்டும் வாங்கி பரிசுப்பணத்தை அனுப்பி வைத்தேன். அதேபோல் Tyler turden என்கிற நபரின் உண்மையான பெயரும் தெரியாது. இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையுமே தனித்துவமானதுதான். இவர்கள் எல்லோருமே எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளர்களாய் பரிணமிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.