Kalki Krishnamurthy’s Ponniyin Selvan is a masterpiece that has enthralled generations of Tamil readers. Many authors have written phenomenal books in Tamil literature after Kalki Krishnamurthy, but Ponniyin Selvan remains the most popular, widely-read novel. It has just the right mixture of all things that makes an epic – political intrigue, conspiracy, betrayal, huge dollops of romance, infidelity, seduction, passion, alluring women, unrequited love, sacrifice and pure love.
Tamil language Novel Writer, Journalist, Poet & Critic late Ramaswamy Aiyer Krishnamurthy also known as ‘Kalki’. He derived his pen name from the suffixes of his wife name Kalyani and his name Krishnamurthy in Tamil form கல்யாணி and கிருஷ்ணமூர்த்தி as Kalki (கல்கி). His name also represents “Kalki avatar”, the tenth and last avatar of the Hindu God Vishnu.
His writings includes over 120 short stories, 10 novelettes, 5 novels, 3 historical romances, editorial and political writings and hundreds of film and music reviews. Krishnamurthy’s witty, incisive comments on politics, literature, music and other forms of art were looked forward to with unceasing interest by readers. He wrote under the pen names of ‘Kalki’, ‘Ra. Ki’, ‘Tamil Theni’, ‘Karnatakam’ and so on.
The success that Krishnamurthy attained in the realm of historical fiction is phenomenal. Sixty years ago, at a time when the literacy level was low and when the English-educated Tamils looked down on writings in Tamil, Kalki’s circulation touched 71,000 copies – the largest for any weekly in the county then – when it serialised his historical novels. Kalki had also the genius to classify the historical and non-historical events, historical and non-historical characters and how much the novel owes to history.
The thing that was most interesting about this book was the exploration of the shades of grey of various characters. By far the most intriguing of these were Nandini and Adhitha Karikalar. Adhitha Karikalar is as harsh as he is vulnerable. The more irrational he became, the more sympathy I felt for him. As cruel as Nandini's actions were, given her circumstances, she was justified in her flawed behaviours. The thing I found a bit annoying though was the fact that Azhwarkadiyan happened to always be in the right place, at the right time, to gather all the important information. It’s a plot convenience that’s used quite repetitively. Other than that, it was an enjoyable read.
This book was undoubtedly my favourite so far! Can't believe the extent Nandhini can go at times, she is unbelievable. Vandhiyandhevan at his best as always. Onto the next part! Can't believe the journey is about to end :(
Ponniyin selvan story is about Sundara chola’s children Rajaraja Chola,Kunthavi,Athitha karigala. It has 5 parts.written by kalki
In this my favourite is kunthavi. The brave and intelligent woman in this story. And I like vanthiyadevan also. Because i like his travelling, character and everything
புத்தகத்தின் பெரும்பாலான பகுதி கதையின் மையக்கரு சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி அமைந்திருக்கிறது. ஆங்காங்கே சிறு அலுப்பு தட்டினாலும், ஆதித்ய கரிகாலன் தோன்றும் இடம் அதை சரி கட்டுகிறது.
கரிகாலன் பேசும் வசனங்கள் எல்லாம் அக்மார்க் பஞ்ச் வசனங்கள். :-) ஒரு கதாபாத்திரம் புத்தகத்தில் பேசும் வசனங்களுக்கு இவ்வளவு வன்மை உண்டு என்பதற்கு கரிகாலன் வசனங்கள் ஒரு உதாரணம்.
Part 4 of the book, for no fault of anybody, is that part that has to focus on the background, history and back-story that is relevant. Hence it has 75% of the story without any of our favorite characters including Ponniyin Selvan and Vandhiyathevan.
The reader is allowed to become impatient since the characters are left at an interesting point and you are to wait for almost an entire book to pick up the story. The part being explained is something that you might have put together along with the characters in the last book and hence there is no anticipation or suspense. Without the 'fortune' that favours the brave in the adventure component or the witty one-liners of Vandhiyathevan it trudges on like a history book.
I'm complaining much because of the expectation that the previous part set! And still I give it a 4/5 since i know this is necessary much like the health food and exercise though one might not really enjoy it.
Starting the finale without much of a break since this book left me hungry.
Simply Awesome, fast moving unputdownable book crafted with lovely style of writing. All characters are set for final book. Cant wait to start the last part.
It feels like, after setting up the story and characters for three books, we're finally getting into the meat of the plot, with various machinations, conspiracies, misunderstandings, betrayals, and misfortunes all coming together in a spectacular, and of course dramatic manner.
Kalki entered the fourth entry in the series on several uncertain notes, which makes you all the more interested in delving into the behemoth 1200+ pages long conclusion to this so far, entertaining and enthralling series.
Looking forward to what surprises are in store in the final tome, as well as how many of the convoluted yet intriguing strings of mystique might get unraveled.
Compared to Ponniyin Selvan - The Killer Sword, which was thrilling from start to end, this had a dip in the pace... probably due to characters behaving quite as they were expected to.
பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் பராக்! பராக்! பராக்! பாட்டனுக்கும் பேரனுக்குமான சம்பாசனையுடன் தொடங்குகிறது நான்காம் பாகம். பெரியவர்கள் என்றாலே அறிவுரைதான் போலும். ஆனால் விளைவுகளை முன்கூட்டியே ஆராய்ந்து சொல்கிறார். வழக்கம்போல் இளங்கன்று கேட்பதில்லை. அப்பாடா! இப்போதாவது மளதிலுள்ளதை பெரியவரிடம் பகிர்ந்தாரே ஆதித்தர். ஆனாலும் பயனற்றதாகிவிடுகிறது. அட அப்பா! காதல் மன்னா! எத்தனை காதல் நாடகங்களை நடத்துவாய்! அது மட்டுமா! வழக்கம்போல் ஆபத்தில் சிக்கிக்கொண்டாயா? ஆள்வார்க்கடியன் வரவேண்டுமே இப்பவும். ஆகா! மணிமேகலை! சுட்டி எனினும் கொஞ்சம் தைரியமான பெண்தான். நமது ஊமை ராணியை, படிப்போர் அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. அவளுக்கு ஒரு சங்கடமென்றால் நமக்கும் அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த பினாகபாணிக்கு வேறு வேலையே கிடையாதா என்ன? ஏன் இப்படி தேவையில்லாத காரியங்களில் எல்லாம் ஈடுபடுகின்றான்? அப்படித்தான் நினைக்கத்தோன்றுகின்றது. இவ்வளவு தூரம் வந்த நமது ஊமை ராணி ஏன் பக்கத்தில் வந்ததும் மனதை மாற்றிக்கொண்டுவிட்டாள்? ஆகா! அதனாலல்லவோ வரப்போகும் ஆபத்தை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அதை ஏன் ஒருவரிடமும் சொல்லாமல் காலம் கடத்துகிறாள்? கடம்பூரில் அனைவருக்கும் ஆதித்த கரிகாலரைப் பார்த்து ஏன் இவ்வளவு பயம்? ஆகா! இந்த வீரக்கிழவர் இளைய ராணியின் முன்னால் மறுபடியும் சுயமிழந்தாரே! பெண்பிள்ளைகளின் நீர் விளையாட்டு ஆண் மகன்களின் வீர வேட்டையுமாக சிறிது நேரம் செல்கிறது. அப்பாடா! ஒரு வழியாக நந்தினியிடம் அந்த மாபெரும் உண்மையை சொல்லியே விட்டாரப்பா! இது உண்மையா என்கிற சந்தேகம் நமக்கே வருகிறது. பார்க்கலாம் அடுத்த பாகத்தில் அனைத்தும் விளங்கிவிடும் அல்லவா.
The masterpiece of Kalki, the Ponniyin Selvan though being fictitious the plot reveals many interesting stories based on some historic facts and characters. Hence it is imperative to focus on the history behind the fiction.With the expansion of medieval Chozha kingdom founded by Vijayalaya Chozha, the Chozha empire spreads over by capturing the Pallavas and the Kongu kingdom. Later on, his successors (Parantaka I, Aditakarikala alias Aditya II and Rajarajachozha) do elaborate the dynasty with the victory over Banas, the Ganges, the Pandya, and the King of Ceylon.The sources of historical information for PS have been through stone inscriptions, copper plates and a host of books.Then Rajarajachozha enthroned after his death and his reign is a golden era for the Chozha Empire as it was witnessed with the greatest prosperity, glory and remarkable fame.
Part 4 of Ponni's beloved is fast-paced. More story is covered in this part and readers get to know the inner intentions of characters. Characterization is always a plus in all the parts of the story.
I like that we get to see more of the deaf and mute woman and learn details about her past. It's good to read more about Crown Prince Aditya and the enchantress Nandini. The story has enough twists and interesting turns. I liked part 1 and Part 4 than other parts. I am eagerly waiting to read the next part and the climax.
In a few places, I can find some typos. Editing might have taken care of those.
Finally, Kalki picks up the pace in the fourth book of ‘Ponnniyin Selvan.’ I loved this one despite the misogynistic comments throughout the book. Sigh. The action here never flags and I couldn't really predict any character’s actions - that was a master writer’s craft at its best.
Oh my god the tension has peaked. So much awesomeness in this book aaaa
The characters are brilliant because they aren't one-dimensional and have a lot of gray shades. Which is especially good because there's like seven hundred characters. Also I love Manimekhala and she literally just showed up in this part. And she's not amazing either (truly the girl has messed up at every turn) but she's endearing. Nandini continues to be an A level manipulator and this book ends with her seeming to trick Aditya Karikalan against Vandiyadevan so I reaaally hope that doesn't actually work out (btw less Vandiyadevan in this book that was sad).
The whole politics business is a completely different story and I have no idea what's going to happen there with so many different people having their own motivations. The climate and usual story conventions seem to point to war. And then it would make sense that Aditya Karikalan dies there and Arulmozhi becomes king. But then I think at some point the history chapters mentioned that Madhuranthaka would become king too so WHATS GONNA HAPPEN?
புத்தகம் : பொன்னியின் செல்வன் பாகம் 4 ஆசிரியர் : கல்கி பக்கம் :329 பதிப்பகம் :சரண் புக்ஸ்
பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் முன் அவசர அவசரமாக மூன்று பாகங்கள் மறுவாசிப்பு செய்து விட்டு, இந்த பாகம் சற்று நிதானமாக வாசித்தேன். படம் பார்த்த தாக்கமாக இப்போது புத்தகம் வாசிக்கும் போது, திரைப்பட கதாப்பாத்திரங்கள் கண்முன் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை.
நான்காம் பாகம் அதிகமாக கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலும், தஞ்சை கோட்டையிலுமே கழிகிறது. இதுவரை அதிகம் கதையில் காணப்பெறாத மந்தாகினி தேவி, ஆதித்த கரிகாலன் ஆகியவர்கள் இந்த பாகத்தில் அதிகம் இடம் பெறுகிறார்கள் கதையும் அவர்களைச்சுற்றி நகர்கிறது .
சுந்தர சோழர் முன் மந்தாகினி தேவி நிஜ உருவமாக வந்து கதை முன் நகர்கிறது.அருள்மொழியை பல சமயங்களில் காத்து வந்த ஊமை ராணி, சுந்தர சோழரை காக்க முற்படுவதில் வெற்றி கொள்வாரா என்ற கேள்விக்கு அடுத்த பாகம் தான் பதில் சொல்லும்.
மணிமேகலை அறிமுகமாகிறாள். சம்புவரையர் மனோரதம் நிறைவேறுமா? ஆதித்த கரிகாலனை சூழ்ந்திருக்கும் ஆபத்துகளில் இருந்து தப்புவாரா? நந்தினியின் சூழ்ச்சி வெற்றி பெறுமா? என்ற விறுவிறுப்பாக பல கேள்விகளை எழுப்பு அடுத்த புத்தகம் வாசிக்க ஆர்வத்தை அதிகரித்து இந்த பாகம் நிறைவு பெறுகிறது.
The Crown Prince Aditya Karikalan has arrived at Kadambur as per the request of Nandini. He is advised by his grandfather to be careful.
Meanwhile Vandhiyadhevan and Nambi have also reached Kadambur with messages from Kundavai & Aniruthar to be delivered to the Prince. Though both the messages asked him not to go the palace, explaining who Nandini is to him, he still goes.
Manimegalai, another interesting strong woman, Kandanmaran's sister is introduced in this part. She is kind of attracted to Vandhiyadhevan but yet to wait and see which side she's in !
Almost everyone crack who the old woman in Lanka could be and her relationship with Nandini. And she's brought to the palace to meet the King.
Ponniyin Selvan is still at Nagapattinam & the information about him is not yet revealed to the subjects.
What happens in Kadambur Palace ? Will Nandini convince Karikalan to give up the crown or will she kill him?
Most anticipated meeting between Karikalan & Nandini happens and it was exciting. A good book before the climax where all the questions in the 4 books are expected to have answers. Though the pace slowed a little at the beginning, it became very thrilling at the end.
The much expected encounters and meetings happen in this book. That's the good part. Apart from that nothing drastic happens in this part of the series. Although the plot becomes interesting towards the end of this book, it never fully recovered from its sluggish start. Kalki has set us up for a thrilling finale to this series.
நந்தினி செய்யும் சிறிதும் ஊகிக்க முடியாத சூழ்ச்சிகள் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது. பொன்னியின் செல்வன் கடைசியில் அரசரானது தான் எப்படி? மற்ற கதாபாத்திரங்களுக்கு நேர்ந்தது தான் என்ன? யார் அந்த தியாகச் சிகரம் என்பதை அறிய ஆவலுடன்...
More and more of the picture gets revealed and some of the revelations are so shocking, you wouldn't even expect it, also Kalki writing puts bits of humor even in the most serious of situations, The spoilers in this book are too damn high, Read it and Enjoy.
I could never ask for a better detail-oriented historical fiction series than Ponniyin selvan. This part is not a page turner or full of twists and turns. It's more about unfolding truths from the past very gradually. So many realisations and complexities in relationships. It showed how a person would turn into based on the situations they face in their lives. It's so rare to see any novels that portrays a raw image of a person you can totally relate to. Already on the next / final part!!!!
Probably the best in the series so far. I thought the plot moved faster in this book than the previous one, and it seems like everything is leading up to a point. I’m excited to see how this story ends.
Cliff hanger, beautifully setup for last part. Particularly like the Tamil transliteration words n some explanations from Ms.Pavithra to be closer to the original text. Waiting for the 5th.
ஆதித்த கரிகாலர் இருக்கும் காட்சிகள் வரும்போதெல்லாம் உடலிலும் உயிரிலும் ஏதோ எல்லையற்ற பரவசம் ஏற்பட்டன… ஏனெனில் என் இதயத்தில் குடிக்கொண்டிருக்கிறார் அல்லவா? ❤️👑
பொன்னியின் செல்வன் - மணிமகுடம் - பாகம் 4 (குமரன் பதிப்பகம் )
காஞ்சியிலிருந்து கெடில ஆற்றங்கரை வழியாக கடம்பூருக்கு ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திரன், கந்தமாறன் வருவதில் தொடங்கி, திருவக்கோவலூர் மலையமான் வழியிலேயே பேரனுக்கு அறிவுரை கூறி பிரிந்து செல்வது, அவரை தடுத்து நிறுத்த வந்தியத்தேவன் முயன்றும் முடியாமல், கரிகாலனுடனேயே கடம்பூரில் தங்கியது.
ஊமைராணி, அருள்மொழி வர்மரின் உடல் நிலையை அறிய கோடியக்கரைக்கு வந்தது. அநிருத்தர், ஊமைராணியை தஞ்சைக்கு பல்லக்கில் அழைத்துவர செய்தது. அவருக்கு பதிலாய், அப்பல்லக்கில் பூங்குழலி அதில் ஏறிச்சென்று அரண்மனை அந்தபுரத்தை அடைந்தது.
அதித்த கரிகாலனை ச���்புவராயர் மாளிகையில் நந்தினியும், சுந்தர சோழரை தஞ்சை அரண்மனையில் சோமன் சாம்பவானும், அருள்மொழி வர்மனை நாகையில் யானைப் பாகனும் கொல்லும் சதிவலை பின்னப்பட்டது. அது குறித்து அநிருத்தர்-குந்தவையின் உரையாடல். மேலும் நந்தினி - ஊமைராணி(எனும் மந்தாகினி) குறித்து அவர்களது உரையாடல்.
சுந்தர சோழரை கொலை செய்ய ரவிதாசன்-சோமன் சாம்பவன் சதியாலோசனை.,நிலவறை வழியாக செல்லும் சோமன் சாம்பவனை, ஊமைராணி தொடர்ந்து செல்வது. ஊமைராணி பற்றியும் நந்தினி பிறப்பின் ரகசியத்தை பற்றியும் சுந்தர சோழருக்கும் நந்தினிக்கும் தெரிவிக்கப்பட்டது*. மணிமேகலையை கரிகாலருக்கு மணம் முடிக்க இருந்த கடம்பூர் சம்புவரையர், மதுராந்தகர் சிங்காதனம் ஏறப்போகும் சதியை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது. மணிமேகலைக்கு வந்தியத்தேவன் மேல் ஏற்படும் ஈர்ப்பு. ஆதித்த கரிகாலருக்கும் -நந்தினிக்கும் இடையே தீக்கனல் தெறிக்கும் உரையாடல்கள்.
வீரநாராயண ஏரியில் பன்றி மற்றும் புலியை ஆதித்த கரிகாலனும் வந்தியத்தேவனும் வேட்டையாடியது போன்ற நிகழ்வுகளுடன் முற்று பெறுகிறது இப்பாகம்.
*இதில், சுந்தர சோழருக்கு ஊமைராணி எனும் மந்தாகினியை பற்றி அனைத்து உண்மையும் தெரிவிக்கபட்டபின், ஊமைராணியின் மேல் கடும் சினமும் வெறுப்பும் கொள்கிறார். இது வாசகர்கள் எதிர்பாராத திருப்பம். சுந்தர சோழருக்கு உண்மை அனைத்தும் தெரிந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்" என வாசகர்களை எதிர்பார்க்கும்படி இட்டு சென்று, பின் அதற்கு நேர்மாறான போக்கில் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அநிருத்தர், குந்தவையுடனான சுந்தரசோழரின் உரையாடலின் மூலம், வாசகர்களுக்கு சுந்தரசோழன் மீது எத்தகைய அளவுக்கு வெறுப்பை திணிக்கமுடியுமோ, அந்த அளவிற்கு திணித்துள்ளார், திரு கல்கி அவர்கள்.
அதேபோல, கடம்பூரில் நந்தினியை ஆதித்தகரிகாலன் சந்தித்து, அவளது பிறப்பின் ரகசியத்தை கூறியபோது, நந்தினி அதை நம்ப மறுக்கிறாள். நந்தினி கூறிய மறுமொழியும் கேள்விகளும், ஆதித்த கரிகாலருக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கதைமாந்தர்களுக்குள் சில ஒற்றுமைகள்:
* சுந்தர சோழரின் குணமும் , அதித்த கரிகாலனின் குணமும் கிட்டத்தட்ட ஒரே குணமாக, அதாவது குதர்க்கமான சிந்தனையும், மனதை புண்படுத்தும்படியான கேள்விகளுமாக சுற்றியிருப்பவர்களை வதைப்பது.
* சுந்தர சோழர் உண்மையை நம்பாதது போலவே, நந்தினியும் உண்மையை நம்பவில்லை.
* குந்தவை-வானதி நட்பு போல, இப்பாகத்தில் நந்தினி-மணிமேகலை நட்பு,
*போலவே, குந்தவை-வானதியின் அரசலாற்றங்கரை படகு பயணம் போல, நந்தினி-மணிமேகலையின் வீரநாராயண ஏரியில் படகு பயணம், அங்கு முதலை என்றால், இங்கு பன்றி-சிறுத்தை புலி.
பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களில், இதுவே சிறியது.
புத்தகத்திலிருந்து...
\ஆதித்த கரிகாலனைப் பார்த்து மலைநாடு உடையாராகிய திருக்கோவலூர் மலையமான் சொல்லலுற்றார்:-
“ஆதித்தா! இன்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நீ பிறந்தாய்! திருக்கோவலூரில் என்னுடைய அரண்மனையிலேதான் பிறந்தாய்!" /
\ உனக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றிக் குதூகலமான சர்ச்சை நடந்தது. சிலர் உன் குலத்து முன்னோரில் மிகப் புகழ் பெற்ற கரிகால் வளவன் பெயரை இடவேண்டும் என்றார்கள். நானும் இன்னும் சிலரும் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்தியர் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். கடைசியில் இரண்டையும் சேர்த்து ‘ஆதித்த கரிகாலன்’ என்று உனக்கு நாமகரணம் செய்தார்கள்.” /
\ கெடில நதிக் கரையில் பாட்டனும் பேரனும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருக்கானாட்டுமுள்ளூர் என்னும் ஊரில் பழைய நண்பர்களான ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் ஒரு விநோதமான காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில் வட காவேரியாகிய கொள்ளிடமும் தென் காவேரியைப் போலவே புண்ணிய நதியாகக் கருதப்பட்டு வந்தது. துலாமாதத்தில் தினந்தோறும் கானாட்டுமுள்ளூர் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் இடபாரூடராகக் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளி ஸ்நானத்துக்கு வந்துள்ள பக்தர்களுக்குச் சேவை தருவது வழக்கம். மத்தியான வேளையில் ஒவ்வொரு நாளும் உற்சவமாகவே இருக்கும். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரண்டு வருவார்கள். விஷ்ணு கோயில் அந்த ஊரில் சிறிதாக இருப்பினும் அந்தக் கோயிலிலிருந்தும் பகவான் கருட வாகனத்தில் ஆரோகணித்துக் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளுவார். /
\ சுந்தரமூர்த்தி நாயனார் க்ஷேத்திர யாத்திரை செய்து கொண்டு வந்த பொழுது திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்துக்கு வந்தார். வழக்கம் போல் அந்த ஊர் சிவாலயத்துக்குச் சென்றார். பட்டர்கள் நாயனாருக்கு சுவாமி தரிசனம் பண்ணுவித்து, “எங்கள் ஊர் இறைவன் பேரிலும் பதிகம் பாடி அருள வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார்கள்.
“பார்ப்போம், இந்த ஆலயத்திலுள்ள சுவாமியின் பெயர் என்ன?” என்று சுந்தரர் கேட்டார். திருமுதுகுன்றம் என்ற பெயரைக் கொண்டு அந்தச் சிவாலயத்திலுள்ள சுவாமிக்கு விருத்தகிரீசுவர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் பட்டர்கள். அந்தப் பெயரைச் சொன்னார்கள்.
நாயனாரின் முகம் சுருங்கிற்று; போயும் போயும் கிழவரையா பாட வேண்டும் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு, “போகட்டும், அம்மன் பெயர் என்ன?” என்று வினவினார்.
“விருத்தகிரீசுவரி” என்றார்கள் கோவில் பட்டர்கள்.
“சுவாமிக்குத்தான் கிழவர் என்று பட்டம் கட்டினீர்கள். அம்மனையும் கிழவியாக்கி விட்டீர்களே? கிழவனையும் கிழவியையும் என்னால் பாட முடியாது போங்கள்!” என்று சொல்லி விட்டுச் சுந்தரமூர்த்தி நாயனார் கோபமாகக் கோவிலை விட்டுக் கிளம்பி விட்டார்.
சுந்தரமூர்த்தி நாயனரால் பதிகம் பாடப் பெறாவிட்டால் தங்கள் ஊர் ஆலயத்துக்கு மகிமை ஏற்படாது என்று பட்டர்கள் கருதினார்கள். ஆகையால் ஆலயத்தில் இன்னொரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து “பாலாம்பிகை” என்று பெயர் சூட்டினார்கள்.
மறுபடியும் சுந்தரமூர்த்தி நாயனார் இருந்த இடத்துக்குப் போய் அவரிடம் மேற்படி விவரத்தைச் சொல்லித் திரும்பவும் திருமுதுகுன்றம் ஆலயத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் பெரிய மனது செய்து மீண்டும் அந்த ஊருக்குச் சென்று பாலாம்பிகை சமேத விருத்தகிரீசுவரர் மீது பதிகம் பாடித் துதித்தார். /
\ சிரித்து ஓய்ந்த பிறகு பார்த்திபேந்திரன், “கடவுள் முதுமை என்பதாக ஒன்றை, எதற்காக ஏற்படுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வயது வரையில் ஒரே மாதிரி இருந்துவிட்டுச் சாவது என்று ஏற்படுத்தியிருக்கக் கூடாதோ?” என்றான்.
“கடவுள் என்ன ஏற்படுத்தினால் என்ன? முதுமை அடைவதும் அடையாததும் தம்முடைய கையிலே தானே இருக்கிறது?” என்றான் கரிகாலன்.
“அது எப்படி முடியும்?” என்று கந்தமாறன் கேட்டான்.
“அபிமன்யுவையும், அரவானையும் கிழவர்கள் என்று நாம் எண்ணுவதுண்டா?” மற்ற இருவரும் ஒன்றும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள்.
“தஞ்சாவூர் அரண்மனைச் சித்திர மண்டபத்தில் என் மூதாதையர்களின் சித்திரங்கள் எல்லாம் எழுதியிருக்கின்றன. விஜயாலயச் சோழர், ஆதித்த சோழர், பராந்தக சக்கரவர்த்தி எல்லோரும் முதிய பிராயத்தவராகக் காட்சி அளிக்கிறார்கள். ஆனால் என் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் எப்படி இருக்கிறார்? நவயௌவன வீர புருஷராக விளங்குகிறார்! இராஜாதித்தர் இளம் வயதில் இறந்து போனார். அதனால் என்றைக்கும் அவர் யௌவனம் நீங்காத பாக்கியசாலி ஆனார்! நம்மில் யாருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டுகிறதோ, தெரியவில்லை!”
மற்ற இருவருக்கும் இந்தப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.
“ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்கள்? சாவு என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்? இந்த உடம்பு போனால் இன்னொரு புத்தம் புதிய உடம்பு கிடைக்கிறது. எதற்காக மரணத்துக்கு அஞ்ச வேண்டும்? என்னுடைய நண்பன் வந்தியத்தேவன் இங்கே இருந்தால் என்னை ஆமோதிப்பான். அவனைப் போன்ற உற்சாக புருஷனைக் காண்பது அரிது. யமலோகத்தின் வாசலில் கொண்டு போய் விட்டாலும் அவன் குதூகலமாய் சிரிப்பான்!” என்றான் இளவரசன் கரிகாலன்.
அச்சமயத்தில் அவர்களுக்கு எதிராக சாலையில் இரண்டு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வெகு வேகமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அக்குதிரைகள் அவர்களை நெருங்கி வந்து விட்டன. அவை வந்த வேகத்தைப் பார்த்தால் இளவரசர் கோஷ்டி எதிரில் வருவதைக் கூடக் கவனியாமல் தாண்டிப் போய்விடும் எனத் தோன்றியது. அவ்வளவு அகம்பாவம் பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்காகக் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் வேல்களை நீட்டிச் சாலையின் குறுக்கே வழி மறிக்க ஆயத்தமானார்கள். ஆனால் வந்த குதிரைகள் அவர்களுக்குச் சிறிது தூரத்தில் தடால் என்று பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டன.
வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரைகள் மீதிருந்து கீழே குதித்தார்கள். /
\ “அப்படித்தான் செய்ய வேண்டும், தாத்தா! இனிமேல் எப்போதும் அப்படியே செய்யுங்கள்! மூடுபல்லக்கில் மட்டும் அழைத்துவர வேண்டாம். அதனால் பல விரஸமான வதந்திகள் ஏற்படுகின்றன. ஒரு வேடிக்கையைக் கேளுங்கள்; பழுவூர் இளையராணியின் மூடுபல்லக்கில் சில சமயம் என் சித்தப்பன் மதுராந்தகன் இரகசியமாக ஏறிக் கொண்டு ஊர் ஊராகப் போய் வருகிறானாம்! இப்படி ஒரு வதந்தி நாடெங்கும் பரவியிருக்கிறது!” என்று கரிகாலன் கூறி இடி இடி என்று சிரித்தான்.
ஆனால் அங்கிருந்த மற்றவர்கள் யாரும் சிரிக்கவில்லை. ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதக் கலக்கம் ஏற்பட்டது.
வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் “ஐயோ! எப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோ ம்! இந்த வெறி பிடித்த மனிதரிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டோமே! ஒன்றையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் பகிரங்கப்படுத்தி விடுவார் போலிருக்கிறதே!” என்று எண்ணிக் கலங்கினான்.
பெரிய பழுவேட்டரையரின் உள்ளம் எரிமலையின் உட்பிரதேசத்தைப் போல, தீயும் புகையுமாகக் குழம்பிக் கொதித்துக் கனன்றது. தீயும் புகையும் எரிமலை வாயின் வழியாக வருவதற்கு முன்னால் உண்டாகும் பயங்கர உறுமலைப் போல் அவர் மீண்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். /
\ “நீ உன் தாயாரோடு பேசுவதில்லையா? அமுதா!”
“ஜாடையினால் பேசுவேன் பிறந்தது முதல் பழக்கம். அப்படியும் புதிய விஷயம் ஒன்றைப் பற்றிச் சொல்வதாகயிருந்தால் கஷ்டந்தான்!”
“ஒரே குடும்பத்தில் அக்கா, தங்கை இருவரும் ஊமையாகப் பிறந்தது எவ்வளவு கஷ்டமான விஷயம்? அவர்களைப் பெற்றவர்களுக்கு அதனால் எவ்வளவு துன்பமாயிருந்திருக்கும்?”
“அது மட்டுமல்ல சிறு வயதில் அக்காவும், தங்கையும் ஓயாமல் சண்டை போட்டுக் கொள்வார்களாம். அதனால்தான் பாட்டனார் பெரிய அத்தையை மட்டும் அழைத்துக் கொண்டு போய்த் பூதத் தீவில் குடியேறி வசித்து வந்தாராம். பெரிய அத்தையின் பேரில் தாத்தாவுக்கு ரொம்ப ஆசையாம். குழந்தை பிறந்தவுடன் இராணியாகும் யோகம் இருக்கிறது என்று யாரோ ஜோசியன் ஒருவன் சொன்னானாம். அதனால் குழந்தை ஊமை என்று தெரிந்ததும் அவருடைய மன வேதனை ரொம்ப அதிகமாயிருந்ததாம்…” /
\ நானும், மலையமான் கொடும்பாளூர் வேளானும் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம், ‘இளையபிராட்டி மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், இந்த அகில உலகத்தையும் சோழர்களின் வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டு வந்து தனியரசு செலுத்தி ஆண்டு வருவாள்’ என்று.”
“அந்த மாதிரி எண்ணம் எனக்கு இருந்தது உண்மைதான். நான் பெண்ணாகப் பிறந்திருந்த போதிலும் என் சகோதரர்கள் மூலமாக அந்த மனோரதம் நிறைவேறும் என்ற ஆசையுடன் இருந்தேன். அந்த ஆசையை இப்போது விட்டுவிட்டேன், ஐயா! இராஜ்ய விஷயங்களில் பெண்கள் தலையிடவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன்! பாருங்கள், என் சகோதரனை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கும்படி செய்தேன் அதன் விபரீதப் பலனைப் பாருங்கள்!” /
\ "...சக்கரவர்த்தி எனக்கு அந்தப் பழைய வரலாற்றைக் கூறினார், ஈழ நாட்டை அடுத்த தீவில் தாம் ஒதுங்க நேர்ந்த போது, கரையர் மகள் ஒருத்தி தம்மைக் கரடிக்கு இரையாகாமல் காப்பாற்றியது பற்றிச் சொன்னார். பின்னர் அத்தீவிலேயே சில மாத காலம் சொப்பன சொர்க்கலோகத்தில் வாழ்வது போல் அந்தப் பெண்ணுடன் வாழ்ந்திருந்ததைப் பற்றிச் சொன்னார். பின்னர் இந்தத் தஞ்சைபுரிக்கு அவர் அழைத்து வரப்பட்டதையும் கூறினார். அரண்மனை வாசலில் கூடியிருந்த கூட்டத்தின் மத்தியில் கரையர் மகளைப் பார்த்ததையும், ஆருயிர் நண்பராகிய தங்களை விட்டு அவளைத் தேடிக் கொண்டு வரச் சொன்னதையும், தாங்கள் தேடிப் போய்த் திரும்பி வந்து அவள் கடலில் விழுந்து இறந்தாள் என்று தெரிவித்ததையும் கூறினார். அதுமுதல் அடிக்கடி அந்தக் கரையர் மகள், ஆவி வடிவத்தில் வந்து தம்மைத் துன்புறுத்துவதாகவும் சமீப காலத்தில் அவள் வருகை அதிகமாயிருப்பதாகவும் சொன்னார்…” /
\ மற்ற இருவரும் யார், ஐயா?”
“மற்ற இருவரும் பேசத் தெரியாத ஊமைகள். சேந்தன் அமுதனின் அன்னையும் பெரியன்னையுந்தான். இவர்களில் அமுதனுடைய அன்னையிடமிருந்து நாம் ஒன்றும் தெரிந்து கொள்ள இயலாது. செம்பியன் மாதேவியிடம் அவள் அளவிலாத பக்தி உள்ளவள். அந்தத் தேவி உயிரோடிருக்கும் வரையில் இவள் ஒன்றும் தெரிவிக்க மாட்டாள். ஆகையினால்தான் அவளுடைய தமக்கை மந்தாகினியை ஈழ நாட்டிலிருந்து அழைத்து வருவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்… ஆகா! அந்தக் கரையர் மகளின் பெயர் மந்தாகினியா? அவள் உயிரோடிருப்பது தங்களுக்கு எப்போது தெரிந்தது.?”
“தேவி! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அது எனக்குத் தெரிந்த விஷயந்தான்.” /
\ அந்தக் கரையர் மகள் பெரிய பிராட்டியின் அரண்மனைத் தோட்டத்தில் வந்து சில நாள் தங்கியிருந்ததாகவும், இரட்டைக் குழந்தைகள் பெற்று அங்கேயே போட்டுவிட்டு ஓடிப் போனதாகவும் கூறினார். எப்போதாவது நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவள் இரகசியமாக வருவதுண்டு என்றும் தெரிவித்தார். குழந்தைகள் என்ன ஆயின என்று கேட்டேன், அவர் சொல்ல மறுத்து விட்டார். அது செம்பியன் மாதேவிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்று கூறினார். நானும் அதைப்பற்றி அதிகம் கிளறாமலிருப்பதுதான் நல்லது என்று சும்மா விட்டு விட்டேன். தேவி! அருள்மொழி குழந்தைப் பிராயத்தில் காவேரி நதியில் விழுந்து விட்டபோது, அவனைக் காவேரி அன்னை காப்பாற்றினாள் என்று எல்லாரும் சொல்லுவார்கள் அல்லவ���? அப்படிக் காப்பாற்றியவள் உண்மையில் கரையர் மகள்தான் என்று என் மனத்தில் அச்சமயமே தோன்றியது….” /
\ "...சுந்தர சோழனுடைய வாழ்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடையும்! இம்மாதிரியே நீங்களும் உங்கள் காரியத்தைச் செய்யுங்கள்” என்றான் சாம்பவன்.
“இளையராணி கரிகாலனைப் பார்த்துக் கொள்வாள் அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குட்டிப் புலி கடலிலிருந்து தப்பி வந்து நாகைப்பட்டினத்தில் இருப்பதாகக் காண்கிறது. ஆனால் இந்த தடவை அவன் தப்ப முடியாது. அவனைக் காப்பாற்றி வந்த இரண்டு பெண் பேய்களும் இப்போது இத்தஞ்சையில் இருக்கின்றன. ஓடக்காரப் பெண்ணையும், ஊமைச்சியையும் கூட்டத்தில் பார்த்தேன். அந்த வீர வைஷ்ணவத் துரோகிகூட இங்கேதான் இருக்கிறான். ஆகையால் குட்டிப் புலியும் இனித் தப்ப முடியாது. நாகைப்பட்டினத்துக்குக் கிரம வித்தனை அனுப்ப போகிறேன். சுந்தர சோழனுடைய குலம் இந்த வெள்ளிக்கிழமை நசிந்துவிடும்…” / \ “பெண்ணே! நீ கரையர் மகள் மந்தாகினியா? அல்லது அவளுடைய ஆவி வடிவமா? அல்லது அவளுடன் பிறந்த சகோதரியா? நில், நில்! போகாதே! உண்மையைச் சொல்லிவிட்டுப் போ!…”
இவ்விதம் சுந்தர சோழர் பெரும் குரலில் கூவிக் கொண்டிருந்த போது தடதடவென்று பலர் அந்த அறைக்குள் புகுந்தார்கள். மலையமான் மகள், குந்தவை, வானதி, பூங்குழலி, முதன்மந்திரி, அவருடைய சீடன், அத்தனை பேரும் அறைக்குள்ளே வருகிறார்கள் என்பதைச் சுந்தர சோழர் ஒரு கண நேரத்தில் தெரிந்து கொண்டார்.
“நிறுத்துங்கள்! அவள் ஓடிப் போகாமல் தடுத்து நிறுத்துங்கள்! அவள் யார், எதற்காக வந்தாள் என்பதைக் கேளுங்கள்!” என்று சுந்தர சோழர் அலறினார்.
உள்ளே வந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒரு கணம் வியப்பினால் திகைத்துப் போய் நின்றார்கள். சுந்தர சோழரின் வெறி கொண்ட முகத் தோற்றமும், அவருடைய அலறும் குரலில் தொனித்த பயங்கரமும் அவர்களுக்குப் பீதியை உண்டாக்கின. மந்தாகினி தேவியை அங்கே பார்த்தது அவர்களை வியப்பு வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்தது. இன்னது செய்வது என்று அறியாமல் எல்லாரும் சற்று நேரம் அசைவற்று நின்றார்கள். முதன்மந்திரி அநிருத்தர், நிலைமை இன்னதென்பதையும் அது எவ்வாறு நேர்ந்திருக்கக் கூடும் என்பதையும் ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொண்டார். அவர் பூங்குழலியைப் பார்த்து, “பெண்ணே! இவள்தானே உன் அத்தை?” என்றார்.
“ஆம், ஐயா!” என்றாள் பூங்குழலி. /
\ எப்போதோ ஒரு காலத்தில் மனித சஞ்சாரமற்ற தீவாந்தரத்தில் நான் தன்னந்தனியே தங்கியிருந்தபோது இந்த ஊமைப் பிச்சியைப் பார்த்தேன். அச்சமயம் இவளிடத்தில் பிரியம் கொண்டதும் உண்மைதான் இல்லை என்று சொல்லவில்லை. அதனாலேயே இன்னமும் நான் இவளை நினைத்து ஏங்கித் தவிப்பதாக நீங்கள் எண்ணினால் அதைவிடப் பெரிய தவறு செய்ய முடியாது. அப்போது இவள் பேரில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரியத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. அந்தப் பிரியம் இந்த இருபத்தைந்து வருஷ காலத்தில் முற்றும் மாறித் துவேஷமாகவும் அருவருப்பாகவும் உருவெடுத்திருக்கிறது. கனவிலும் நினைவிலும் என்னை அவ்வளவாக இவள் கஷ்டப்படுத்தி இருக்கிறாள். இவள் இந்த அரண்மனையில் இருக்கிறாள் என்னும் எண்ணத்தையே என்னால் சகிக்க முடியவில்லை. உடனே இவளை இங்கிருந்து அனுப்பி விட்டு மறுகாரியம் பாருங்கள். இவளைப் பேய் என்று நினைத்தபடியால் இவள் பேரில் விளக்கை எடுத்து எறிந்தேன். உயிரோடும் உடம்போடும் இருப்பவள் என்று அறிந்திருந்தால், என்ன செய்திருப்பேனோ, தெரியாது!” /
\ இவ்வாறு சுந்தர சோழர் குரோதம் ததும்பிய குரலில் கூறிய குரூரமான வார்த்தைகளைக் கேட்டுச் சக்கரவர்த்தினியும் முதன்மந்திரியும் கதிகலங்கிப் போனார்கள். சக்கரவர்த்தி இவ்விதம் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அநிருத்தர் தாம் செய்த பழைய குற்றத்துக்காக மட்டுமே தம்மைச் சக்கரவர்த்தி கண்டனம் செய்வார் என்று கருதியிருந்தார். மகாராணியோ சக்கரவர்த்தி வாய்விட்டு வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனத்திற்குள் மகிழ்ந்து பூரித்துத் தன்னுடைய பெருந்தன்மையான செயலை ரொம்பவும் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாள்.
சுந்தர சோழரின் கொடிய வார்த்தைகள் அவர்களுக்கு ஏமாற்றமளித்ததோடு ஓரளவு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின. சக்கரவர்த்தி இத்தனை நேரம் பேசியதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், “சீச்சீ, இந்த ஊமைப் பைத்தியக்காரி உலகில் உயிரோடு வாழ்ந்திராவிட்டால் என்ன நஷ்டம் நேர்ந்து விடும்? இவள் கடலில் விழுந்த போது உண்மையாகவே செத்துத் தொலைந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! எந்தப் பரம முட்டாள் மெனக்கட்டு இவளை எடுத்துக் காப்பாற்றினான்?” என்றார்.
இதற்குப் பிறகு மலையமான் மகளால் பொறுக்க முடியாமல் போயிற்று. உருக்கம் ததும்பிய ஆவேசத்துடன் அவள், “சுவாமி! தங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள்! மகாபாவம்! நன்றி மறத்தல் எவ்வளவு கொடிய பாதகம் என்று பெரியோர்கள் எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்களே? தங்கள் உயிரை இந்த மாதரசி காப்பாற்றியதை வேணுமானாலும் மறந்து விடுங்கள். ஆனால் நம் அருமைக் குமாரன் அருள்மொழிவர்மனை இவர் காப்பாற்றியதை மறக்கலாமா? தாங்கள் மறந்தாலும் நான் மறக்க முடியாது. பதினாலு ஜன்மத்துக்கும் இந்தத் தெய்வ மகளுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருப்பேன்!” என்று சொன்னாள். / \ மந்தாகினி தேவியின் ஆவி தங்களை இரவு நேரங்களில் வந்து இம்சிப்பதாக எண்ணித் தாங்கள் வேதனைப்பட்டு வந்தீர்கள்…”
அவளுடைய ஆவி வரவில்லை, அவளே வந்தாள் என்று சொல்கிறீரா?”
“இல்லை, இல்லை பழுவூர் இளைய ராணி, மந்தாகினியின் ஆவியாக நடித்துத் தங்களை இம்சித்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.”
சுந்தர சோழர் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கோப வெறி பொங்க, “நீங்கள் இப்போது சொல்வது மட்டும் உண்மை என்று ஏற்பட்டால், அந்த ராட்சஸியை என் கையினாலேயே கழுத்தை நெரித்து…” என்று கூறுவதற்குள், முதன்மந்திரி குறுக்கிட்டு, “வேண்டாம், சக்கரவர்த்தி! தங்கள் வாயால் அப்படியொன்றும் சபதம் கூற வேண்டாம்!” என்று பரபரப்புடன் சொன்னார்.
“ஏன்? அவள் பேரில் என்ன தங்களுக்கு அவ்வளவு இரக்கம்? என்னை அவ்வளவு தூரம் வேதனைப் படுத்தியவளை என்ன செய்தால்தான் என்ன?” என்று சுந்தர சோழர் பொங்கினார்.
“எவ்வளவு கஷ்டப்படுத்தியிருந்தாலும், கஷ்டப்படுத்தியவர் நெருங்கிய பந்துவாயிருக்கும் பட்சத்தில்… ஒருவேளை சொந்தப் புதல்வியாயிருக்கும் பட்சத்தில்…”என்று முதன்மந்திரி கூறித் தயங்கி நின்றார்.
“முதன்மந்திரி! இது என்ன பிதற்றல்?” என்றார் சுந்தர சோழர்.
“சக்கரவர்த்தி! தங்களுடைய பொறுமையை உண்மையில் சோதித்துவிட்டேன். அதற்காக எனக்கு உசிதமான தண்டனையைக் கொடுங்கள். ஆனால் நந்தினி தேவியைத் தண்டிப்பது பற்றிப் பேச வேண்டாம். நந்தினிதேவி தனாதிகாரி பழுவேட்டரையரின் இளைய ராணி மட்டும் அல்ல; மூன்று உலகமும் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வி. அவரை எந்தக் குற்றத்துக்காக யார்தான் தண்டிக்க முடியும்?” என்றார் அநிருத்தப்பிரம்மராயர்.
இதைக் கேட்ட சக்கரவர்த்தி சிறிது நேரம் முதன்மந்திரியை அளவில்லாத வியப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ‘கலீர்’ என்று சிரித்தார்.
“சக்கரவர்த்தி! இன்றைக்கு மிகவும் ஸுபதினம். இரண்டு தடவை தாங்கள் சிரிக்கக் கேட்டேன்” என்றார் அநிருத்தர்.
“பிரம்மராயரே! இந்த அரண்மனையில் இப்போது ஒரு பெண் ப���த்தியந்தான் இருக்கிறது என்று நினைத்தேன். நீர் அவளை விடப் பெரிய பைத்தியம் என்று இப்போது அறிந்தேன். அவள் பேசாத ஊமைப் பைத்தியம்; நீர் பேசிப் பிதற்றும் பைத்தியம்!” என்று கூறிவிட்டுச் சுந்தர சோழர் மறுபடியும் நினைத்து நினைத்துச் சிரித்தார். /
For a book that doesn't have much incidents or happenings throughout the story, Kalki does a phenomenal job fleshing out characters and letting them carry the plot. It acts as an amazing set up for the last book. Will most likely be jumping into Book 5 right away.
The thoughts of characters and the actual events are very seamlessly written. Kalki is magical