இணையத்தின் #1 சமூக ஊடகம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!இன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள்மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும், எதைச் சாதித்தாலும் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிப்பிக்கிறோம். ஃபேஸ்புக் லைக்குகள் ஒவ்வொன்றும் தலைக்குள் கைதட்டல்களாகக் கேட்கின்றன. எதையேனும் வாங்குவதென்றால் முதலில் ஃபேஸ்புக்கில்தான் கருத்து கேட்கிறோம், ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்திகள், குழுக்கள், வீடியோக்கள், இன்னும் அவர்கள் அறிமுகப்படுத்துகிற புதுப்புது வசதிகள் ஒவ்வொன்றும் உடனடியாக நம்முடைய புதிய தகவல் தொடர்புக் கருவிகளாகிவிடுகின&