மனம் என்பதென்ன? மனம் மூளையிலிருந்து செயல்படுகிறதா அல்லது மூளைக்கும் வேறான ஒரு சூக்குமமான பொருளா? மனம் எப்படிச் செயல்படுகிறது? நான் என்பது மனத்தில் எப்படி உருவாகிறது? நினைவுகள், உணர்வுகள், அறிவு, மறதி, கனவு, உறக்கம் எப்படி உண்டாகின்றன? மனதின் நோய், புத்தியின் நோய்கள் என்னென்ன? மனநோயிலிருந்து மீள்வது எப்படி? இறந்தபின் மனம் என்னவாகும்? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனதைக் கொண்டு எப்படி முக்தி அடைவது? ஆகிய கேள்விகளுக்கான அறிவியல் பூர்வமான, வேதாந்த ஆதாரமான பதில்கள்.