உன் காதல் என் தேடல் இது தொலைந்துபோன ஒரு உண்மையான காதலுக்கான தேடல். கதை நாயகி முகில்நிலா தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணம் செய்ய, அவள் லட்சியத்தில் வெற்றி பெற அவளின் உயிருக்கு உயிரான காதலை பலி கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அவள் லட்சியமா இல்லை உயிர் காதலா என்ற நிலையில் தன் லட்சியம் தான் பெரிது என்ற முடிவுக்கு வருகிறாள் நிலா. உயிர் காதலை துறக்கும் அளவுக்கு அப்படி என்ன தான் அவளின் லட்சியம். தன் தாய்க்கு தாயாக மாறிய ஒரு மகளின் கதை இது. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்கள் மனதோடு விழியை சற்று நனைக்கும். அதேபோல் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும்.கதையை படித்து தங்க கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றியுடன் ரூபாவதி