வீரப்பன் பிறந்து வாழ்ந்த செங்கப்பாடி எனும் கோபிநத்தம் என்ற ஊரின் நிலை. அங்கு வாழ்ந்த மக்களின் சமூகச் சூழ்நிலை, அவருடைய இளமைப் பருவம், வறுமையான குடும்ப சூழல், காடும், வேட்டையுமே அவருக்குத் தொழிலாகப் போனது. யானை வேட்டையில் கால் வைத்தது, பின்னார் அவருக்கு உள்ளூரில் எதிரிகள் உருவானது. எதிரிகள் வீரப்பனைக் கொல்ல திட்டம் போட்டது. அவர்களுக்கு முந்திக்கொண்டு வீரப்பன் அவர்களைக் கொன்றது. பின்னர் வனத்துறை மற்றும் காவல்துறையினர் அவரைப் பிடிக்கவும், பிடித்துக் கொல்ல முயற்சித்தது என வீரப்பன் அவர்களைப் பற்றிய பெருமளவிலான தரவுகளை அந்த நூலில் எழுதியிருந்தேன். “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்-2”ஆம் தொகுதியில் 1992 முதல் 1999 ஆண்டின் இறுதிவரை நடந்த நிகழ்வுகளின்