நளன் என்கிற பேர், சமையலுடன் சேரும் போது வர வார்த்தை நளபாகம். எஸ், இந்த கதையில் நளன் ஒரு சமையல் கலைஞர், சமையலை நேசிப்பவர், சுவாசிப்பவர் அப்படி எல்லாம் சொல்லிகிட்டே போலாம்..அப்போ தமைந்தி யாரு..அவளும் ஒரு சமையல் கலைஞரே..என்ன, சமையலில் உப்பு, புளியுடன் கொஞ்சம் தன்னோட குறும்பையும் சேர்த்து கலப்பா...நளன் எதிர்பார்க்கும் நேர்த்தி, தீவிரம் இதெல்லாம் நம்ம நாயகிக்கு சுட்டு போட்டா கூட வராது.. பி சீரியசுன்னு நளன் சொன்னா, அவ எந்த ஹாஸ்பிடலில் போயி சீரியஸ் ஆகணும்னு கேப்பா, அதுவும் அப்பாவியா.. அப்பேற்பட்ட இரு துருவங்கள் சேர்ந்து வேலை செய்யும் காலத்தில், அவங்க தனிப்பட்ட வாழ்வும் கூட வருது..அப்போ என்ன ஆகும்..அதான் தமயந்தி நளபாகம்.. கதையில் இருந்து சிறு துளிகள்..