அக்காலத்திலே தன் அல்குலைத் தான் பார்ப்பதே தவறென்று கருத்திருந்தது. கன்னியாஸ்திரிகளும்கூட ஆடையோடு தான் குளிக்கவேண்டும் என்பது மதக் கட்டளை. கதவு சாத்தப்பட்ட அறைகளுக்குள்ளும் ஆடை எதற்கு என்று கேட்டால் கடவுள் பார்ப்பாரே என்று பதில் வந்ததாக பெர்ட்ரண்டு ரசல் குறிப்பிடுகிறார். இடைக்கால வரலாற்றில் பெண், தன் உறுப்பு குறித்து அறியாத வளாக வளர்ந்தாள். வளர வளர உடலில் நிகழும் மாற்றத்தால் தன் அல்குலைப் பார்க்கவும் தொட்டு அறியவும் முடிந்தாலும், பூஞ்சை முடிகள் முளைக்கும் தருணத்தில் அச்சம் கூடிப்போனவர்கள் ஆனார்கள். அவர்களது மூத்த பெண்களும், பாட்டிமார்களுமே அவர்களின் அச்சம் களைந்தார்கள். அல்குல் இல்லையெனில் உயிர்ப்பெருக்கம் இல்லை.
Karthick is a well-known Tamil writer by his pen name Karthik Pugazhendhi, who has authored more than ten books, including three volumes of short stories. His works have been featured in other university curricula. Apart from this, he has written columns in many Tamil magazines. Works in the field of journalism. Trained as a Sub-Editor in Writer Ki.Rajanarayanan's KathaiSolli Magazine.
வளமையின் குறியீடாக, செழிப்பின் குறியீடாக, இனப்பெருக்கத்தின் அடையாளமாக, வழிபாட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நீண்ட பட்டியல் போட்டுப் பின், செல்ல முடிகிற ஓர் சம மானுட உயிரின் உடலுறுப்பு எங்கிருந்து எப்படி அழித்தொழிப்பின் அடையாளமாக மாறியது?