கள்ளர்களைப் பற்றி 1817-ல் டி.டர்ன்புல் எனும் ஆங்கிலேயர் எழுதியுள்ள குறிப்புகளை இக்கட்டுரையில் விரிவாகத் தர முயன்றுள்ளேன். இவற்றில் சில குறிப்புகள் நேரடியாக கள்ளரின மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது. கூடவே, பல இடித்துரைகளும் இடம்பெற்றுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இருப்பினும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்ட சமூக வாழ்வில் கள்ளர்களின் வாழ்வியலை அறிந்துணர டர்ன்புல்லின் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன.