" இந்த ஓர் இரவு ஒரு வேளை லீலாவின் குனாதிசயத்தை மாற்றலாம்....இல்லையேல் இப்பொழுது வாழ்வது போலவே அவளது வாழ்வை அவள் தன்னை வெறுத்துக்கொண்டே வாழ்ந்து விடலாம்...ஆனால் இந்த இரவின் வெறுட்டலோ அவளது சாவின் விளிம்பு வரை அவளைத்தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...." தன் தாய் தந்தை தம்பியை மட்டுமே தன் உலகமாக வைத்துக்கொண்டு கனவுலகில் தனக்கான நிஜ வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு நிஜத்தில் தனக்கான உணர்வினைக்கூட வெளிப்படுத்த தயங்கும் சராசரிப்பெண் ... லீலாவதி ஆதிநாராயணன். அவளது பதினெட்டாம் வயதில் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை அறிய முற்படும் முன் அதன் சாதிய பார்வையில் சிக்குண்டு தன் வாழ்வினைத்தொலைத்த அவளின் ஓர் இன்றியமையாத இரவு தான் இந்த ஓர் இரவு.....