இந்த கதை முழுவதும் கற்பனைதான். இதில் குறிப்பிட்ட யாரும் உண்மையில் வாழ்ந்தவர்கள் அல்ல. பெயர்களும் கற்பனையே இறந்து போனரையோ அல்லது இருப்பவரையோ இங்கே கதாபாத்திரமாக்கவில்ல்லை. சம்பவங்கள் நடக்க்கூடியவைதான், ஆநால் கற்பனையே தவிர வேறே இல்லை. நான் சென்ற ஜெனவரி மாத இறுதியில் மாறடைப்பால் ஆஸ்பத்திரியில் அநுமதிக்கப்பட்டேன், பதினைந்து நாட் சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினேன். மார்ச் பத்தாம் தேதி கிண்டில் புத்தகம் பரிசு நாவலுக்கு கடைசி நாள். நான் முழுவதும் உடல் நலம் தேறாமல் இருந்த போதும், எப்படியாவது இந்த நாவலை எழுதி போஸ்ட் செய்ய வேண்டும் என்று ஆனவரை முயற்சி செய்தேன். ஆனால் இன்றுதான் 17ம் தேதி மார்ச் மாதம்தான் அதை எழுதி முடித்தேன்.