Jump to ratings and reviews
Rate this book

Puratchiyalar Che Guevara

Rate this book

144 pages, Paperback

First published January 1, 2014

Loading...
Loading...

About the author

siddharthan

4 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Hemanaathan Ramu.
19 reviews
September 14, 2026
சே குவேராவின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவருடைய அரசியல் பயணத்தையும் இன்னும் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. ஏற்கனவே சே குவேரா தொடர்பான சில நூல்களை வாசித்திருக்கிறேன். ஆனால், அவற்றில் பெரும்பாலும் அவருடைய அரசியல் நிலைப்பாடுகள், சிந்தனைகள் மற்றும் அவை தொடர்பான விமர்சனங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததே தவிர, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த வகையில், சித்தார்த்தன் எழுதிய ‘புரட்சியாளர் சே குவேரா’ எனது ஆர்வத்திற்கு மிகவும் பொருத்தமான நூலாக அமைந்தது. சே குவேராவின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பயணம், புரட்சிகர சிந்தனைகள் என அனைத்தையும் ஒருசேர அறிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது.

குறிப்பாக, அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களையும், புரட்சிப் பயணத்தையும் காலவரிசைப்படி தொகுத்திருக்கும் விதம் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. சில இடங்களில் நூலின் விவரிப்பும், நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் விதமும் உண்மையிலேயே வாசிப்பவருக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நூலில் குறிப்பிட வேண்டிய பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றையும் பட்டியலிடுவது தேவையற்றதாகவே தோன்றுகிறது. ஏனெனில், இந்த நூலை வாசித்த அனுபவமும், சே குவேரா போன்ற ஒரு புரட்சிகர ஆளுமையை என் தாய்மொழியான தமிழில் இவ்வளவு விரிவாக அறிந்துகொண்ட திருப்தியும் தனித்துவமானது.

குறிப்பாக, ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சே குவேரா எழுதிய பிரியாவிடைக் கடிதத்தின் பிரதியையும் நூலில் இணைத்திருப்பது மிகவும் சிறந்த முயற்சி. அது வாசிப்பவரை வெறும் விவரிப்புகளுக்குள் மட்டும் நிறுத்தாமல், உண்மையான வரலாற்று ஆதாரத்துடன் அந்த நிகழ்வை அணுகச் செய்கிறது. இப்படியான உண்மைச் சான்றுகளை வழங்குவது வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் தொடர்ந்து தக்கவைக்கிறது.

எனினும், எனது தனிப்பட்ட பார்வையில், சில பகுதிகள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றின. அதே நேரத்தில், தமிழ் மொழியின் அழகே அதன் உருவகத்தன்மையிலும், ஒரு விஷயத்தை அழகாக உயர்த்தி விவரிக்கும் தன்மையிலும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். எனவே, இது நூலின் மீதான பெரிய குறையாக அல்லாமல், என்னுடைய தனிப்பட்ட ரசனை சார்ந்த கருத்தாகவே பார்க்கிறேன்.

அதைத் தவிர, ‘புரட்சியாளர் சே குவேரா’ ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம். சே குவேரா பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கும், அவருடைய வாழ்க்கையையும் புரட்சிகரப் பயணத்தையும் விரிவாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நூலை நிச்சயமாக பரிந்துரைக்கிறேன்.
Displaying 1 - 1 of 1 review