சூர்யாவின் கண்கள் பிரகாசித்தன.. அவன் மனதிலிருந்த காயம் ஆறி விட்டதை புரிந்து கொண்ட காமாட்சி மருமகளின் புத்திசாலித்தனத்தை மெச்சிப் போனாள்.. மகனையும் மருமகளையும் சேர்ந்து நிற்க வைத்து தாராவை ஆரத்தி எடுக்கச் சொல்லி வீட்டுக்குள் அழைத்தாள். அவன் சுட்டெரிக்கும் சூரியன்தான்.. அதே சமயம் குளிர் அன்பைப் பொழியும் காதலன்.. அடைக்கலம் கொடுப்பவன்..