ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை.
தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர்.
குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார்.
ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம்.
சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்Ī