மனம் விரும்பிய இருவர் வாழ்வில் இணைய பொதுவாக வரும் எதிர்ப்பு குரல், மங்கைக்கும் அவளது காதலனுக்கும் கூட 'நான் வந்தே தீருவேன்' என வந்து விடுகிறது.அக்குரலை எங்கனம் வென்று மங்கை தான் விரும்பியவனை கரம் பிடித்தாள் எனக் கதையில் காண்போம் என்பதாக கதை சுருக்கம் கூற மூளை வெகுவாக ஆட்சேபம் தெரிவிக்கவே, மங்கையின் காதல் கைக்கூடியதா அல்லது அவளது பெற்றோரின் மிஷன் மிரட்டல் கைக்கூடியதா என்பதாக மாறிவிட்டது.அதனுடன் இது முக்கோண காதல் கதையா, நாற்கோணமா, ஐங்கோண கதையா என்பதையும் இந்த முதல் பாகத்தில் காண்போம்.