இன்றைய பங்குச் சந்தையானது எந்த திசையில் நகரப்போகிறது என்று எளிதில் கணிக்க முடியாத இடமாகும். சந்தை நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக அறியமுடியாது. இந்த சூழ்நிலையில், சந்தை நடத்தை தெரியாமல் எவரேனும் முதலீடு செய்தால், அவர்களின் பணத்தை இழந்து விடக்கூடும். அதனால் அவர்களின் கனவுகள் கலையக்கூடும். சந்தையை பற்றிய குறைவான புரிதல் உள்ளவர்களால், அளவுக்கதிகமான தகவலை பகுப்பாய்வு செய்வதென்பது கடினம். சராசரி முதலீட்டாளர்கள் எதாவது ஒரு தொழில் அல்லது வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சத்தில், அவரால் பங்கு சந்தையில் அதிக நேரம் செலவிடுவது முடியாத காரியம். பெரும்பாலும் அவரின் தொழில் தொடர்பான வேலையே அவரின் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
Author of the book, "How We Did It : 100 entrepreneurs share the story of their struggles and life experiences". Buy it on Amazon here: http://www.amazon.com/How-Did-entrepr...
பங்கு சந்தை குறித்து அடிப்படை மற்றும் அதன் நிகழ்வுகள் தெரிந்தவர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். அடிப்படை பகுப்பாய்வு மற்றும் விகிதாச்சாரம் ஆகியவற்றில் கவனத்துடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை எடுத்துக்காட்டுகளுடன் பட்டியலிட்டுள்ளார். வருடாந்திர அறிக்கைகள் பற்றியும் விவரித்துள்ளார். அதன் படங்கள் வாசிக்க தெளிவற்று உள்ளன. மேலும் கம்பெனிகளில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் திவால் நிலைகள் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக எழுதி புத்தகம் ஆக்கியுள்ள இந்நூல் சரியான வரிசைப்படி தொகுத்தப்படாமல் ஒவ்வொரு தலைப்பும்தொடர்பின்றி உள்ளது. ஆனந்த் சீனிவாசனின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும் அச்சுப்பிழைகள் மற்றும் வார்த்தை பிழைகள் படிப்பினை மிகவும் தொய்வுறச் செய்தது. இணையாக ஆங்கில நூலினை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.