Jump to ratings and reviews
Rate this book

KOVERU KAZHUTHAIGAL கோவேறு கழுதைகள் : இமையம்

Rate this book
The first novel of one of the best writers today, Koveru Kazhuthaigal is located in the early 1970s when ritual status and payment in kind were giving way to cash wages. It is a tapestry of despair, courage and a journey both outward and inward and a story of decline and change in a village seen through the eyes of a washerwoman (vannaatti) Arokkyam, who serves a dalit community of agricultural labourers. The mules of the title refers ironically to the vannaan and vannaatti themselves who traditionally carried their washing on donkeys. Although they play an important role in all Hindu rites of passage, it is striking that Arokkyam and Savuri are Catholics. Most importantly, they defer to the authority of the priest at the Church of Saint Antony and seek his blessing on family and community occasions.The novel gives us an extraordinarily detailed picture of a lifestyle that has now passed reclaimed and told with pride. The worst oppression of the caste system, Imayam suggests, is that people are dependent upon it for their living.

376 pages, Kindle Edition

First published July 1, 1994

35 people are currently reading
530 people want to read

About the author

Imaiyam

21 books92 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
98 (46%)
4 stars
81 (38%)
3 stars
24 (11%)
2 stars
4 (1%)
1 star
4 (1%)
Displaying 1 - 30 of 39 reviews
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
July 23, 2021
" கீய்ப்பட்ட சாதிக்கிக் கீய்ப்பட்ட சாதியாய் பொறப்புச்சிப்புட்டியே, அந்தோணியாரே ! " என்ற வாக்கியம், வெறும் வாக்கியமாக் ஆரோக்கியத்தின் மனதில் பதியவில்லை. தனக்கு இதனால் பெரும் மகிழ்வும், அழிவும் உண்டென புரிந்து வெறுமையில் காலம் கழித்தாள். எனக்கும், பழகி விட்டுச் சென்றாள் வெறுமையுணர்வை " எல்லாம் பொக மறஞ்சாப்ல மறஞ்சிதான்போச்சி " என்ற கூற்றின் மூலம்.

நான் எதிர்பார்த்ததைவிட இமையம் அவர்கள் அதிகமாகவே தந்தார் 🙂
அதுவும், அந்த பேச்சு வழக்கு, மொழி நடை 🖤
Profile Image for Bhuvan.
253 reviews43 followers
March 3, 2024
Haunted.

ஐயா உங்க வண்ணாதி மக வந்திருக்கன்...

என்று இந்த கதை முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் ஆரோக்கியம் என்கிற பெண்மணி மனம் முழுவதும் நிறைந்திருக்கிறாள்.

ஆரோக்கியத்தின் வாழ்க்கை, குடும்பம், மன ஓட்டங்கள், அழுகைகள் இவைதான் கோவேறு கழுதைகள்.

இமையத்தின் முதல் நாவல். தமிழ் இலக்கிய படைப்பில் மிக முக்கியமானது. ஒரு வாழ்க்கைப் பதிவு.
99 reviews
June 19, 2019
ஆரோக்கியம் (மனைவி ) மற்றும் சவுரி (கணவன்) குடும்பம் சார்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு இந்த நூல். சாதிய ஏற்ற தாழ்வு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சமுதாய பங்களிப்பு (பிறப்பு முதல் இறப்பு வரை ), ஒரு தாயின் பாசம் , இன்றைக்கு வழக்கில் இல்லாத பல சடங்குகள்/நிகழ்வுகள் என்ன பலவற்றை பதிவு செய்துள்ளது இந்த நூல்.
Profile Image for இரா  ஏழுமலை .
132 reviews9 followers
March 18, 2020
தமிழ் இலக்கிய பரப்பில் மிக முக்கியமான நாவல். படிக்கவேண்டிய ஒன்று..
Profile Image for Prakash Rajendran.
41 reviews1 follower
June 2, 2023
வெகு இலகுவாக இதயத்தில் ஒட்டிக் கொள்ளும் இமையம் போகிற போக்கில் ஒரு பிழி பிழிந்துவிட்டு முடிக்கிறார் ❤️
22 reviews2 followers
June 4, 2021
கோவேறு கழுதைகள் - இமையம்

தொடக்கத்திலிருந்தே புது விதமான அனுபவங்களை குறைவில்லாமல் கொடுத்து கொண்டேயிருந்தது நாவல்.
வண்ணார் மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. நாம் பார்த்திராத கேட்டிராத வண்ணார் மக்களின் வாழ்வியல் அனுபவத்தை வாசிப்பு உணர்வு மூலம் பெற நாவல் உதவி செய்கிறது. கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றும் இயல்பான ஆசையை நிறைவேற்ற நூறு குடும்பங்களின் அனுமதி தேவையாகிறது இதேபோல் எல்லாவற்றுக்கும் ஊரைச் சார்ந்தே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய ஓர் குடும்பமாக ஆரோக்கியத்தின் குடும்பம் காட்டபடுகிறது. ஆரோக்கியம் குடும்பத்தை மட்டும் தாங்காமல் நாவலையும் தாங்குகிறால்!! கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல் இமையத்தின் கோவேறு கழுதைகள்!
Profile Image for CK.
26 reviews4 followers
November 22, 2022
Very disappointed. The book started of well. I struggled reading thru the first 30-50 pages. The language of the people different from colloquial thamizh, made it even more difficult for me. Reading my 2nd thamizh book ever!!
But it was the story and the tell that was disappointing. After setting a stage, the author quickly finished the book. If the first many chapters set the stage slowly, including the aging of the people etc. Towards the last 20-30 pages, he quickly aged them, and wrapped up their story.
I know a bit about a sub-culture of a populace, but i really dont know what the author was trying to convey beyond that.
Profile Image for Jackson Cyril.
836 reviews91 followers
December 2, 2017
I think there's a translation of this into English, and I'd be curious to see how Imaiyam's use of rural Tamil is translated into English. This follows a family of dalit Christians in Tamil Nadu as they encounter prejudice and hardship and struggle to survive under the hypocrisy of a society built on both caste and wealth. His Tamil is a bit difficult, and I'd argue that it is meant to be hard. These characters do not live a smooth life, and the language too pricks and cuts us, reminding us to stay alert to their pains.
Profile Image for Priya Kumar.
19 reviews4 followers
April 13, 2023
Books are the excellent source of feelings.. I'd never come across that community being talked about in this book, personally.. but through this book I got the chance to live as them for a while
Profile Image for Uday Singh.
Author 3 books15 followers
August 30, 2019
The translated novels from Niyogi Publications always leave me delighted and this book was no exception. Written by the Tamil author Imayam, Beasts of Burden is translated to English by Lakshmi Holmstrom. Let’s go to the book directly.

The book’s cover would be like a dream coming true for any art lover with some really creative choice of a historical painting. And the book’s plot itself doesn’t fail to leave a long lasting impression on your mind as well.

The incidents in the story take place in the India of 1970s but the similarities you’ll see with our current world is shaming and scary. We get to see the depths of society to its dirtiest. What really is interesting is how we get to explore the environment and culture as well along with the characters. The author of the book has a great literature history and this book truly expresses his maturity and experience.

The story really touches you at a great personal level and I’ll save the experience for you. It’s a short read but stays with you long after you are done with it.
Profile Image for சலூன் கடைக்காரன் .
42 reviews2 followers
March 22, 2019
இந்தக் கதையில் வரும் கிராமம் அதில் வாழும் மனிதர்கள் அனைத்தும் மிகைபுபடுத்தாமல் மிகவும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.அங்கே உள்ள சாதி அமைப்பு நான் நினைத்துக் கொண்டிருந்ததை விட வேறுபட்டிருந்து.கிராமங்கள் நகர் மயங்களாக ஆகும் பொழுது சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவற்றை சொல்கிறது.இன்னும் பல ஆரோக்கியங்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டுதான்.இருக்கிறார்கள்.
46 reviews3 followers
November 1, 2021
A heartbreaking story which brings you to notice of things which are present in plain sight but missed. Its about of a washerwoman and her family, who after being socially disadvantaged to begin with, realizes by the end that she hasn't had the economic agency as well all along. It gets a bit repetitive at the end, but was worth the read
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
November 20, 2019
நம்ம ஊர்ல ஒரு நாப்பது (அ) அம்பது வருசத்துக்கு முன்னாடி பண்டமாற்றுப் பொருளாதரம் தான் அதிகம், அதாவது ஒருத்தன் பூமியில வெதச்சு அறுவடை முடிச்சவுடன் விளைஞ்ச தானியத்த தான் தங்களுக்காக ஊழியம் செய்தவங்களுக்கு ஊதியமா கொடுப்பான். தானியத்த கொடுத்து தான் தனக்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்குவான். ஊர்ல இருக்க ஓரே வண்ணான் குடும்பம் சவுரி-ஆரோக்கியம் இவங்கதான் ஊராரின் துணிய தெவச்சு கொடுப்பாங்க, கண்ணால வூடு, சாவு வூடு, கோயில் திருவிழா, தெரட்டி சுத்தறது என எல்லா சடங்கும் இங்க இல்லாம நடக்காது. இவங்க சாப்பாட்டுக்கு சோத்து குண்டான எடுத்துக்கிட்டு ஊர்ல எல்லா வூடுக்கும் போயி சாமி வண்ணாத்தி வந்திருக்கன்னு சொன்னா அவங்க வூட்டுல ஆக்குன சோத்தையும், கொழம்பையும் கொண்டுவந்து குண்டானுல போடுவாங்க அது தான் அவங்களுக்கு சாப்பாடு. கால சக்கரத்தின் இடப்பெயர்வு ஊர்ல பல நவ நகாரிக மாற்றத்த கொண்டு வந்தது பண்டமாற்றம் என இருந்த நிலைய மாறி பணத்த சுத்தி பொருளாதாரம் நடைபெற ஆரோக்கியம் தன் வருங்காலத்தை எப்படி நகர்த்தினார் என்பதே கோவேறு கழுதைகள் புத்தகத்தின் மையக் கதை. -கலைச்செல்வன் செல்வராஜ்


கோவேறு கழுதகளின் கண்ணீர் துளிகளில் சில,

‘புள்ளென்னு பிண்டமாத் தரெயில விழுந்ததிலிருந்து நாளது தேதிவரெக்கும் எனக்கு வவுறே சாமியாப் போச்சி.”
“வவுறு வளக்கறதுதான் தொயிலாப் போச்சி.”
“கயிதெமாரி பொதி பொதியாத் துணியெச் சொமந்தன்.”
“ராவு, பவலு சட்டியத் தூக்கிக்கிட்டு ஊடுஊடா நின்னன்.”
“நான் பட்ட அவச்சொல்லும் இழிச்சொல்லும்...”
“எல்லாம் வவுத்துக்குத்தான்.”
“வவுறு என்ன சமுத்தரமா?”
“ரவ வவுறு நெறய மாட்டங்குது.”
“என் ஆயுள் பூரா உயச்சாலும் அது நெறயாது.”
“நான் பாடுபட்டதொல்லாம் வவுறு நெறப்பத்தான்.”
“வவுறு நெறயல.”
“அம்பது வருசமாத் தொரப்பாட்டுக்கும் காலனித் தெருவுக்குமா நடந்து இந்த வவுத்த வளத்தன்.”
“நான் இருக்க மட்டும் அது நெறயாது.”
“நாங்கறதே வவுறுதான்.”
“உலகங்கறதும் வவுறுதான்.”
“அந்தோணியாரே.”

“இந்த ஊருல யாருடைய அழுக்க நான் சுத்தம் செய்யல?”
“மாருல பாலுக் கட்டிக்காதவ உண்டா? எந்தப் பொம்மனாட்டியோட தொப்புள் கொடிய அறுத்துப் பொதைக்கல?”
“ஊருல இருக்குற எல்லாக் குரலுக்குமே நான்தான், பதில் சொன்னன்; வேலெ செஞ்சன்.”
“எல்லாருடைய பீ, மூத்திரம், உதிரம் எல்லாம் அள்ளியிருக்கன். துணியெ அலசியிருக்கன்.”
“மாருல சொமந்திருக்கன்.”
“நாயா எல்லா வீட்டு முன்னாலும் காவல்காத்து வேலை செஞ்சேன்.”
“குச்சி வச்சிக்காதவ எவ?”
“எனக்கு ராத்திரி பகல் இருந்ததில்ல.”
“மணப்பந்தலுக்கு துணி கட்டலயா?”
“பாடெதான் கட்டலயா? வவுத்துல சொமக்கல.”
“எலிக்கி வளெயும், பாம்புக்குப் புத்துங்கற கதயாப்போச்சி.”
“கம்மம் கொல்லக்கிக்
காவக் காக்கப் போன பொண்ணு
காவாகி நின்ன பொண்ணு.”

“எல்லாம் பொக மறஞ்சாப்ல மறஞ்சிதான்போச்சி.”
-இமயம்
197 reviews7 followers
February 18, 2022
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் மனக்குமுறலை, தான் வாழ்ந்த ஊரையே வீடாகவும் உறவாகவும் பார்க்கும் தன்மை என அவர்களின் வாழ்வியலை மிக அழகாக நம் கண்முன்னே காட்டுகிறது.

ஆரோக்கியம் நம் முன்னே மிகசிறந்த மனுஷியாக மிளிர்கிறாள்.. ஒப்பாரி வைத்து அழும் போது, மிக சாதாரண மாக் தெரிந்தவள், தன் வீட்டிற்கு ஊருக்கு செய்யும் போது அவள் இல்லாமல் ஒர் அணுவும் அசையாது என்ற கடவுளின் நிலை அடைகிறாள்.

The life of washerman(dhobi) is depicted in a very surreal way.. We find it so difficult to get half day leave from the bosses in the corporate world( just permission from one person).. Arokiyam's family has to get confirmation and permission from around 100 families before taking a day off to go their family temple.. If it's a festive month, they have to complete all the washing and other duties before they go out of the village..

How the life style of such people have changed with the advent of technology.. They have been an integral part in other life, be it giving birth, puberty, marriage or death

When she does not get the required quantity of millets for her duty during a temple function, she question them by asking will it be ok if she does the washing only during the festivals??.

Arokiyam's 50 years life is shown how she was able to work without any rest and how her life gets slowed After things change in village..

Even when her husband atlast asks her to move to another village where her son and daughter is living, she doesn't want to leave her village, that's when her husband says "Do we have any house or land here for us to hold on to this place? We were like nomads only.. That's when Arokiyam feels that the people have forgotten her forever..

So much more to say, only through such books we will be able to see and understand the life of different kinds of people..
20 reviews1 follower
January 6, 2022
கோவேறு கழுதைகள் - இமையம்

சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமயம் அவர்கள். இவருடைய முதலும் மிகச்சிறந்த நூல் கோவேறு கழுதைகள். இது கழுதைகளை பற்றிய கதை அல்ல. சின்ன கவுண்டர் மற்றும் மதராசபட்டினம் போன்ற படங்களில் நாம் பார்த்த வண்ணான்களை பற்றிய எதார்த்தமான நாவல். அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை முறையையும் அவர்கள் சந்திக்கும் துயரத்தையும் பற்றி எழுதியுள்ளார் இமையம். இந்த நாவலை அவர் எழுதிய போது அவருக்கு வயது 19 என்று படித்தேன். அந்த வயதில் இப்படிப்பட்ட முதிர்ச்சியான கதையை எழுதி இருப்பது மிகவும் வியப்படைய வைக்கிறது.

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” ஒவ்வொரு முறை கதையின் நாயகி ஆரோக்கியம் இதை சொல்லும் போது என் நெஞ்சில் ஒரு அழுத்தமும் பாரமும் அதிகரித்தது. கதை தொடங்கி மூன்று பக்கங்களுக்குள் நம்மையும் ஆரோக்கியம், சவுரி, சகாயம், மேரி, ஜோசப், மற்றும் பீட்டரோடு வாழ வைத்து விடுகிறார் எழுத்தாளர். பிள்ளைப்பேறு, காதுகுத்து, சடங்கு, இறப்பு என்று அனைத்திலும் வண்ணார்களின் பங்கை இந்த படைப்பின் வாயிலாக அறிய முடிகிறது. தன் உடம்பு சுருங்கியதை போலவே தன் குடும்பமும் சுருங்கியதை கண்டு நிலைகுலையும் ஆரோக்கியத்தின் வலியை வரிகளில் கொண்டு வந்த எழுத்தாளருக்கு பாராட்டுகள்.

வண்ணார்கள் மட்டும் இல்லாமல் பூம்பூம் மாட்டுக்காரர்கள், குறவர்கள், ஜோசியர்கள் மற்றும் பல நாடோடி சமூகத்தினர்களை பற்றி நினைக்க வைக்கிறார் எழுத்தாளர். தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த அடிமை வாழ்வு வேண்டாம் என்று ஆரோக்கியத்தின் குழந்தைகள் எடுத்த முடிவு நமக்கு ஒரு வித நிம்மதியை தந்தாலும், ஊரையும் செய்யும் தொழிலையும் விட்டுவிட்டு போகாத ஆரோக்கியமும் சவுரியும் நெஞ்சை பிசைகிறார்கள். Beasts of Burden என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இந்த நாவல். சாதிய கட்டமைப்பின் கோரமுகத்தையும் எளிய மனிதர்களின் வலி நிறைந்த வாழ்வையும் வெளிச்சமாக்கும் இந்த நாவல் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
September 24, 2019
”மாணத்துலயிருந்து மழை பேஞ்சாலும் தண்ணி தரயில தான ஓடனும்” கோவேறு கழுதைகள் – இமையம்
இமையம் அவர்கள் எழுதிய நாவலில் முக்கியமானது கோவேறு கழுதைகள். அவர் எழுத்தின் பலமாக நான் கருதுவது, நீண்ட நாட்களுக்கு இந்த கதையை நான் மறக்க முடியாது. மேலும் இந்த கதையின் அனைத்து பிரதான கதாப்பாத்திரங்களும் முதல் இரண்டு பக்கத்தில் இடம்பெறுகிறார்கள், ஆனால் அவர்களுக்கிடையேயான உறவுகளை புரிந்து கொள்ள 30 பக்கங்கள் கடக்க வேண்டும் ( This is an interesting hook to get into the story). ஆரோக்கியம் என்ற சலவைத் தொழில் செய்யும் பெண் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் காக்க எவ்வாரெல்லாம் பாடுபடுகிறார் என்பதை அன்றைய சமூக பின்னனியில் சொல்லியுள்ளார். கதையில் வரும் ஏரி, மரம், வயல் போன்ற அனைத்தும் 90-களின் வடாற்காடு மாவட்டத்தை குறிப்பதாக உள்ளது. எந்த ஒரு முற்போக்கு சிந்தனையும் இல்லாமல், ஜாதி ரீதியான ஒடுக்குமுறை பற்றி கேள்வி எழுப்பாமல் , விளிம்பு நிலை மனிதர்கள் மீதான ஒடுக்குமுறை எப்படி இருந்தது என்பதை எதார்த்தமாக பேசுகிறது. 90-களில் நான் பார்த்து உணர முடியாத பல வலியை இந்நாவல் உணர்த்துகிறது. உணவிற்காகவும், தானியங்களுக்காகவும் ஒரு குடும்பமே தலைமுறை தலைமுறையாக விவசாயக் கூலியாக இருந்த்ததையும் பின்னாளில் தொழில்நுட்பத்தின் வருகை, பணப்பயிரின் அதிகரிப்பு விவசாய கூலிகளை நகரம் நோக்கி நகர்த்தியதையும் புரிந்து கொள்ள முடிகிறது. உணவு என்பது ஒரு பிரதான கதாபாத்திரமாகவே நாவல் முழுக்க வருகிறது. கதையின் முடிவு தான் கதைத்தனமாக உள்ளது, இவ்வளவு சோகமாக முடித்திருக்க வேண்டுமானு தோன்றியது.
21 reviews1 follower
March 24, 2023
பழமை கொடுமையாய் இருந்தால் நாகரிகத்தை நோக்கிப் பயணிக்கலாம். ஆனால் பழமையாலும் நசுக்கப்பட்டு நவீனத்தாலும் புறக்கணிக்கப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கதைதான் கோவேறு கழுதை.

வழக்கமான புரட்சி தலித் cinematic வாழ்வியலில் இருந்து வெகுகாறும் வேறுபட்டு நிற்கிறது இக்கதை.‌ ஊரின் வண்ணான் குடியான சவுரி பீட்டர் ஆரோக்கியம் மேரி கால மாற்றத்துக்கு எப்படி தன்னை ��ப்புக் கொடுக்கிறார்கள் என்பது மிகவும் பாதிக்கச் செய்கிறது.

ஊரின் இழவில் தொடங்கி பிள்ளை பிறக்க வைப்பது வரை ஆரோக்கியத்தின் தேவை இருக்கிறது. அப்போது மட்டும் ஊர் அரவணைத்துக் கொள்கிறது. ஆனால் ஒரு படி அரிசி அதுவும் உணவுக்காக கேட்கும்போது கூட இடித்துரைத்துத் துரத்துகிறது.‌

முந்தைய காலங்களில் ஊருக்குள் தொழில் வேறுபாடுகள் மட்டுமே இருந்த காலத்தில் ஊரே வாரிக் கொடுத்து ஒவ்வொரு குடியையும் வாழ்த்தி இருக்கிறது.‌பின் அதே ஊருக்குள் பொருள் பேதம் நுழையும் போது சுரண்டல் தொடங்குகிறது.

தேள் கொட்டின காரணத்துக்காக விரலை யாரும் வெட்டுவதில்லை. தடவிக் கொடுத்து மருந்து போடுவது போல தன் உழைப்பு சுரண்டப்பட்டாலும் ஆரோக்கியமும் பொறுத்துப் போகிறாள். எனினும் காலம் மாறினாலும் விடியல் வராதது போல வாழ்நாள் இறுதி வரை ஆரோக்கியத்தின் வாழ்க்கை வறுமையிலேயே முடிகிறது.‌

இக்கதை மிகுந்த விமர்சனங்கள் எழுந்தது.‌எனினும் படித்துப் பார்க்கும் போது இருக்கும் நிலையை அப்படியே காட்டுவதாகவும் Socio economic hierarchy யின் நீட்சி விளிம்பு நிலை மக்களை மிச்சமின்றி உறிஞ்சுவதில் தான் முடிகிறது என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
Profile Image for Varun19.
23 reviews8 followers
May 30, 2025
நவீன தமிழெழுத்துலகில் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுநாவல் இது.
---
இப்போதும் சின்னப் பிள்ளைகள் கூட "வண்ணாத்தி மவள" என்றுதான் கூப்பிடுகிறார்கள். சிரித்துக்கொண்டே ஆரோக்கியம், "என்ன விசயம்?" என்பாள். 'இந்தக் காலத்துல எல்லாத்துக்குமே கோவப்படுதுங்க. நாம்ப சின்ன சாதி. கோவம் படச்சி என்ன பண்றது?" என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வாள். உடனே அதை மறந்தும்விடுவாள். மறந்துதான் தீர வேண்டும். மறக்க முடியவில்லை என்றால் பைத்தியம். மறந்தால்தான் காலம்தள்ள முடியும்.

"யாரு வூட்டுல! வண்ணாத்தி வந்திருக்கன், துணி போடுங்க!"

"அம்மோவ் துணி போடுங்க. வண்ணாத்தி மவ வந்திருக்கன்."

"இந்த வண்ணாத்தி மகள மறந்திடாதீங்க சாமி"
----

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் குரலை பொதுவாக நகரவாசிகளும், இன்றைய இளஞ்சமுதாயமும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. சாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பல்வேறு புத்தகங்கள், திரைப்படங்கள் வாயிலாக மட்டுமே நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

ஆனால் இவ்வளவு நுணுக்கமாக, யதார்த்தத்துடன் அருகில் நின்று பார்த்தது போன்றதொரு உணர்வெழுவது அரிது. இமையம் அவர்களின் இப்புத்தகம் நம்மை ஆரோக்கியம், சவுரி குடும்பத்துடன், அவர்களது வீட்டில், ஒருசில நாட்கள் தங்கி வாழ்ந்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்திச் சென்றது. அவர்களுடன் நாமும் தொரப்பாட்டுக் கரையில் துணிகளைத் துவைத்துக் காய வைத்து, இராச்சோறு கேட்டு நின்றிருந்தோம்.

இதுபோன்று விளிம்புநிலை மக்கள், கீழ்ச்சாதி சமூகமென்றுப் பிரித்து வைக்கப்பட்டிருந்தவர்களின் துயர்மிகு வாழ்வையும், தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகளையும் காகிதத்தில் மட்டுமே கண்டிருப்போம். பாகுபாடுகளும், அவலங்களும் மட்டுமே நிறைந்த அவர்களின் அன்றாட வாழ்க்கை அவ்வளவு கனமானது, கடினமானது, அதை ஓரளவாவது புரிந்துகொள்ள இப்புத்தகம் நிச்சயம் உதவும்.

ஊர்ப்புரங்களில் ஒவ்வொரு வீட்டின் நல்லதிலும் கெட்டதிலும், பிறப்பிலிருந்து இறப்புவரை ஊழியம் செய்து வந்த சமூக அமைப்பினரின் பங்காற்றலும், உழைப்பும் மறுக்க முடியாதவொன்று. தொரப்பாட்டு, இராச்சோறு, விரிப்புத் துணி, கோயில் திருவிழா, தெரட்டி சுற்றுதல், இழவு வீட்டுச்சீர், பண்டிகை கால பணிச்சுமைகள் இப்படி சமூகத்தில் நிலவிய பல்வேறு சடங்குகள் பற்றி அறியும் போது மனம் கனமாகிப் போனது.

கையில் அழுக்கும், மனதில் வலியும் நிறைந்து நிற்கும் இதுபோன்ற ஆரோக்கியங்கள் நம்முடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
Profile Image for Titus Manoj Kumar.
20 reviews
October 19, 2021
நான் வாசித்த முதல் இமையத்தின் புத்தகம். ஆரம்பத்தில் சற்று தயங்கினேன் இது சரியான தேர்வா என்று. பின் வாசிக்க வாசிக்க இமையம் என்னை அந்த காலணிக்குள் ஆரோக்யமுடனும் சவுரியுடனும் மேரியுடனும் பீட்டர் உடனும் அழகாக, அழுத்தமாக, வலியுடனும் பயணிக்க செய்தார்.

இமையத்தின் உண்டாட்டு விழாவில் ஜெயமோகன் அவர்களது பேச்சை கேட்டேன். அவர் கூறியது இந்த நாவல் ஓரு இருத்தலியல் வகையை சார்ந்தது என்று. சுந்தர ராமசாமியும் இதையே தான் உணர்ந்திருந்தாராம் .

ஆனால் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின், குடும்பத்தின் வலியை, பயணத்தை எப்படி இருத்தலியல் ரகம் என்று சொல்ல முடியும்.

உண்மையில் ஓரு Existentialist க்கு பசி இருக்காது. போதுமான வசதிகள் இருக்கும். இதையும் தாண்டி அவன் அல்லது அவள் இந்த பிரபஞ்சத்தை, அதிலுள்ள மனிதர்களின் உளவியலை ஆராய்வதே இருத்தலியல் ஆகும். ஆரோக்கியத்தின் வாழ்வியலை ஓரு இருத்தியலாய் கருத முடியவில்லை.

இறுதியில் ஆரோக்கியம் பாடுகின்ற அந்த ஒப்பாறி "சாகும் வயதில்லை நீ சாய்ந்திருக்க நாளுமில்ல..." நெஞ்சை பிசைகிறது. அருமையான படைப்பு

இமையம் சொன்னது போல இந்த நாவல் இலக்கியத்தை வளர்ப்பதை விட இந்த சமூகத்தை வளர்க்கும், மேம்பட செய்யும்.
Profile Image for Kousthuban.
5 reviews
August 13, 2020
🎫சுதந்திர இந்தியாவில் ஒதுக்கப்பட்டவர்களுக்குள்ளும் ஒதுக்கப்பட்ட வண்ணான் குடி மக்களின் வாழ்வையும், இன்னல், இடர்பாடுகள் பற்றிய குறியேடு இந்த கோவேறு கழுதைகள் நாவல். ஆரோக்கியம் என்னும் கதாபாத்திரத்தினூடே கதை நகர்கிறது ஊர் மக்களுக்காக உழைத்து அவர்களின் வசவுகளை பொருட்படுத்தாமல் தன் குடும்பத்துக்காக அயராது பாடுபடுகிறாள்.

🎫போக போக கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் தங்கள் வரவை நசுக்குகிறது, குடும்பத்தில் நிகழும் மாற்றங்கள் மனதை வருத்துகிறது, உடல் வருத்தி உழைத்தும் சம்பளமாக வரும் நெல் மற்றும் பிற தானியங்களை கை ஏந்தியே அழுது போராடி வாங்கும் நிலைமை.

🎫தேவைக்கேற்ப நிறம் மாறும் காலனி வாசிகள், வண்ணானை தேடி நல்லது, கெட்டது என எல்லாத்துக்கும் உதவி கேட்டு பிரியமாக வருபவர்கள் கொடுப்பதெனறாள் முகம் சுளிக்க துவங்கினர்.

🎫எல்லாம் மாறியும், அனைவரும் விலகியும், பண்புகள் மறைந்தாலும் ஆரோக்கியத்தின் மனதில் பற்று தீராமல் கிராமத்தில் வேரூன்றி நிலையில் நிற்கிறது.
22 reviews
Read
February 22, 2024
After finishing Imaiyam's Sellatha panam, with high expectations I started to read this novel. It is his first novel, and it itself has a very strong signature of his style. I always wonder how he writes something very political, but without taking any stand on either side and just showing the situation and circumstances of the characters and it is the lifestyle of a spectator zone. their monday-ing activity, etc. I am a co-traveler with the main characters, and the family whether they go to the home, the street, the temple, or the puddle I am with them. this trait is in SP(Sellatha Panam) as well as in Koveru Kazhuthaigal. His writing has a very good flow in it nothing high dramatic events that suddenly hit us, it flows very well. throughout the novel and by the end now I am even more eager to read his other works also.
27 reviews
March 28, 2024
Shows how the caste system and the power associated with it works in an intricate, practical ways in a Village through the life of the Lead character and people associated with her. The Nature of Oppression , Exploitation of Labour and the Irony around that is haunting.
Ambedkar's understanding of Caste as a "Graded Inequality" is lively in this story.Superb!!
Profile Image for Saravanakumar S K.
60 reviews5 followers
December 5, 2021
தலித்துகளே சில சமூகத்தினரை தலித்துகளாக நடத்துகிறார்கள் என்று அம்பேத்கர் சொல்லி இருப்பார். அது போன்ற ஒரு குடும்பத்தின் கதைதான் இது. ஆரோக்கியம் உங்கள் மனதில் பல நாள்கள் இருப்பாள். சில நாட்களுக்கு முன்பு வந்த மாடத்தி என்ற படம் இதே சமூகத்தின் பிரச்சனையைதான் சொல்லி இருந்தது.
Profile Image for Prachi.
25 reviews
February 12, 2022
Enjoyed reading, but..

Maybe because it was lost in translation, I didn't feel the emotions overwhelming even though the story gets real and devastating. You can already expect the note on which it would end.
Profile Image for Sathish Amuthanathan.
6 reviews1 follower
September 21, 2017
Life doesn't always have an happy ending. Some person's life are full of miseries. This book is just an example for that.
12 reviews1 follower
February 7, 2019
வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதைகளில் ஆக சிறந்த கதை...நடுநாட்டு வாழ்க்கை யை இதை விட சிறப்பாக சித்தரிக்க முடியாது... படிக்கும் வாசகனுக்கு சுகானுபவம்...
7 reviews
May 11, 2020
மிக அருமையான சித்தரிப்பு..இது போன்ற ஒரு சாதி மக்கள் நடத்தப்பட்டதையும் காலம் மாற மாற அது. மறைவதாகவும் சொல்லப்பட்டது மிகவும் பொருத்தமானது.
5 reviews
May 23, 2021
Very good characterization. Felt the world of those characters. Flow was so goodd..
Displaying 1 - 30 of 39 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.