Jump to ratings and reviews
Rate this book

Chidambara ragasiyam

Rate this book
spiritual thriller

541 pages, Paperback

First published January 1, 2018

Loading...
Loading...

About the author

Indra Soundar Rajan

372 books400 followers
Indra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
179 (39%)
4 stars
131 (29%)
3 stars
93 (20%)
2 stars
28 (6%)
1 star
19 (4%)
Displaying 1 - 21 of 21 reviews
255 reviews38 followers
January 13, 2024
புத்தகம்: சிதம்பர ரகசியம்
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம்: திருமகள் நிலையம்
பக்கங்கள்: 256
நூலங்காடி: ஈரோடு புத்தகக் கண்காட்சி 2022
விலை: 228

💫 90 களில் பிறந்த நாம் பல இனிமையான மாற்றங்களையும் மாறுதல்களையும் பார்த்துள்ளோம். Coin phone தொடங்கி face time வரை. ஆனால் நம் தசாப்தத்தோடு முடிந்து போன ஒன்று நல்ல சீரியல்கள். இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் புத்தகங்களை தழுவி எடுக்கப்பட்ட சீரியல்கள் பல மர்ம தேசம், சிதம்பர ரகசியம், சிவமயம், மாயா

💫
ராஜேந்திரன் தன் சொந்த ஊருக்கு 13 ஆண்டுகள் கழித்து வருகிறார். அவரைச் சுற்றி பல குழப்பங்கள். வீட்டுக்குள் இருக்கும் ஐந்து தலை நாகம் வெளியே உலாவும் சித்தர்கள் என பல மர்மங்கள். இறுதியாக என ஆனது என்பதே சிதம்பர ரகசியம்.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .


சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Girish.
1,238 reviews263 followers
May 10, 2025
Chidambara Ragasiyam by Indira Soundarrajan is a fascinating blend mysticism and philosophy wrapped in a modern investigative narrative. The story revolves around a rational city family who gets drawn into a web of secrets surrounding including alchemy, ashtasiddhis— secrets that touch upon the lives and practices of the Sithargal (sages) and Agoris.

What I found compelling is the way it bridges the esoteric and the everyday. The mystical elements are explained but you are left to disbelieve as do the characters. The characters — grounded in reality — are the audience’s entry point into these otherworldly domains. This contrast enhances the intrigue and makes it sound plausible.

The world of the Sithargal is particularly evocative — their wisdom, meditative power, and near-supernatural insights are presented with reverence. The Agoris, too, are shown not merely as exotic or extreme but as carriers of a deeper, misunderstood spiritual truth. Soundarrajan manages to keep the tone balanced: respectful of tradition, curious about the mystical, yet always tethered to human emotion and reason.

I couldn't help but wonder, by the end of the novel, whether we’ve lost touch with a vast reservoir of ancient knowledge by embracing the English "norm". The story leaves you thinking not just about what’s hidden within ancient writings.

A gripping, thought-provoking read that manages to be both entertaining and fascinating.
Profile Image for Ishwarya.
15 reviews
July 18, 2024
சிதம்பர ரகசியம் - நான் படித்த முதல் spiritual thriller புத்தகம். வாழ்க்கையில எப்போதுமே நாம எதிர்பார்க்காத நேரத்துல, எதிர்பார்க்காத இடங்கள்ல இப்படிலாம் நடக்குமானு யோசிக்குற அளவுக்கு எல்லாரோட வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம், நாம விரும்பாததாகவும் இருக்கலாம்.

அப்படி ராஜேந்திரன் பல வருடங்களுக்குப் பிறகு தன்னோட சொந்த ஊருக்குத் திரும்பும் போது அங்க நடக்குற அமானுஷ்யங்களும், அதன் காரணங்கள் தான் சிதம்பர ரகசியம்.

சித்தர்கள், ஐந்து தலை நாகம், ஏடுகள், ரசவாதம்னு இந்த காலத்துல நம்ப முடியாத பல விஷயங்களை உள்ளடக்கியது. நான் சித்தர்கள் பற்றி முன்னாடியே படிச்சாலும், எனக்கு இதுல நம்பிக்கை உண்டுங்குறதால எனக்கு இது ஒரு நல்ல அனுபவம்.

எனக்குக் கதையை விட ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட அந்த 2 வரிகள் தான் புத்தகத்தைக் கீழே வச்சிட்டு யோசிக்க வைத்தது.

'உருவம் இல்லா அருவம் நான்
உலகின் இரண்டு துருவமும் நான்'
இது எளிதாகவே புரியுறது தான்.

'ஜீவர்களுக்குள்ளே ஜீவன் நான்.
மூவர்களுக்குள்ளே முடிவும் நான்.'

-இதில் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் ஜீவன் நான்னு எழுதியிருக்காரு. மனிதனுக்குள்ளனு எழுதல. ஜீவன்னு எழுதியிருக்காரு. அப்போ கடவுள்ங்குறவரு மனிதனுக்குள் மட்டுமல்ல, எல்லா உயிருக்குள்ளும் இருக்காரு. So we are part of God aka god is a part of us.
-இதிலேயே மூவர்களுக்குள்ளே முடிவும் நான் என்பது சிவன், பிரம்மா, விஷ்ணுவைக் குறிக்கிறதா எனக்குத் தோணுச்சு. இப்படி இந்த கடவுள், அந்த கடவுள்னு பிரிக்காம, எல்லாமே ஒன்னு தான்னு சொல்றது போல எனக்குத் தோணுச்சு.


இன்னொரு முக்கியமான வரி,
'ஓதுவார் மேனியில் சாம்பலும் நான்
ஒன்பது வாசல் மேனியின் சகலமும் நான்'

ஒன்பது வாசல் மேனி என்பது மனிதர்கள் தான். அந்த மனிதருக்குள் இருக்கும் எல்லாமே நான் தான் என்னும் வரி எல்லாம் விளக்கவே முடியாது.

'வேதியர் வாழ்வில் வேதமும் நான்,
அரவாணியர் மேனியில் பேதமும் நான்'
-எல்லாமே நான் தான்டா. அந்த பேதம் இந்த பேதம்னு சொல்லி அவங்கள கஷ்டப்படுத்தாம, வாழுங்கடானு கடவுளே வந்து அறையுற மாதிரி இருக்குல்ல?

ஏன்னு தெரியல. ஆனா, இந்த வரிகள்ல தான் நான் ரொம்ப நேரம் உக்காந்துருந்தேன். இப்போ கடவுளே இல்லனு சொன்னாலும் அத சொல்ல வைக்குறதும் கடவுள் தானானு.

கடைசியா ஒரு favorite வரி.
'தன்னையறியாமல் என்னை அறியவே முடியாது.
என்னை அறியாமல் தன்னை அறியவே முடியாது.'
Profile Image for Praveen (பிரவீண்) KR.
243 reviews34 followers
June 7, 2024
Check out the review in my blog - https://kalaikoodam.blogspot.com/2024...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சித்தர்கள் ஆன்மிகம் என்ற எழுத்தாளரின் பழக்கப்பட்ட பாணியில் கதை நகர்கின்றது. அடிப்படை கருத்துக்கள் இவைகள் என்றாலும் வித்தியாசமான கதைக்களம் வாசிப்பை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. 250 பக்கங்கள் கிட்ட வரும் இந்த புத்தகம் சற்றும் சலிப்பு தராமல் நகர்கின்றது. ராஜேந்திரனின் மக்களில் தெரியும் மாற்றங்கள் அதிகமாக கதையின் சுவாரஸ்யாவும் அதிகரிக்கிறது. இரண்டு மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஆரம்பிக்கும் கதையில் திடீரென்று ஏகப்பட்ட பாத்திரங்கள் வந்து போகின்றன. இருந்தும் கதையின் வேகத்தை எந்த அளவிலும் இது பாதிக்கவில்லை. ஒரு படம் பார்க்கின்ற போல் எண்ணம். இருந்தும் கதை சற்று அவசரப்படுத்தியது போல் தோன்றியது. சில கேள்விகளுக்கு பதில் தெரியாமலே போனது போல் ஓர் உணர்வு,

விறுவிறுப்பாக நகரும் கதைகளை வசிப்பவர்களுக்கு இந்த புதினம் ஒரு நல்ல வாசிப்பாக அமையும். அனைவராலும் வேகமாக ஒரு முறை வாசிக்க தகுந்த ஒரு புத்தகம்.
43 reviews1 follower
September 6, 2026
புத்தகம்: சிதம்பர ரகசியம்
ஆசிரியர் : இந்திரா சௌந்தர்ராஜன்
வகை : ஆன்மீகம்
பதிப்பகம்: திருமகள் நிலையம்
பக்கங்கள்: 256

இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய புத்தகங்களில், நான் வாசிக்கும் முதல் புத்தகம் இது தான். ஆன்மீகம் சம்பந்தப்பட்டு நிறைய எழுதக்கூடிய எழுத்தாளர் என்று இந்திரா சௌந்தர்ராஜன் எனக்கு முன்னமே அறிமுகமாயிருந்தார். அவர் எழுதிய அனுமன் வரலாறு புத்தகத்தை, சிறு வயதாக இருக்கும் போது, வீட்டில் அடம்பிடித்து வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் இன்னும் அதை முழுதாக வாசித்தபாடில்லை.

எனது கல்லூரி நூலகத்தில் இருந்து, இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்துத் தான் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்‌. புத்தகத்தின் தலைப்பு தான் என்னை முதலில் வசீகரித்தது என்றே சொல்லலாம். நல்ல புதிராகவும் சுவாரஸ்யமாகவும் திகிலாகவும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு வாசிக்கத் தொடங்கினேன்‌. ஆனால் அதே எண்ணம் எனக்கு, இப்போது வாசித்து முடித்த பின்னர் இல்லை.

நல்ல தலைப்பு. அதில் குறையொன்றும் இல்லை. ஆனால் கதைக்களமும் அதனைப் புனைந்து எழுதிய விதமும் நன்றாக இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லை. விருவிருப்பு இல்லை. பக்கத்திற்குப் பக்கம் திகிலாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்ற எண்ணம் நொடிந்தே போய் விட்டது.

144 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் புஷ்கரணி என்னும் நிகழ்வை கதைக்களம் மையமாகக் கொண்டிருக்கிறது. ராஜேந்திரன், மனைவி தெய்வானை, மகள் ஆஷா, நண்பன் குமரேசன், வேலையாட்கள் கந்தசாமி, அங்கம்மாள், ஆச்சாரி, ஆச்சாரி மகன், பல சாமியார்கள் என்று பல கதாபாத்திரங்கள். இன்னும் வந்து போகும் கதாப்பாத்திரங்கள் நிறையவே.

சாமியார்கள் யார் யார் எந்தக் காட்சிகளில் வருகிறார் என்று இன்னும் சரியாகப் புலப்படவில்லை. குறிப்பாக, ஆசிரியரிடமே தெளிவின்மை இருப்பது போல் தெரிகிறது. முதலில் மண்ணைப் பொன்னாக்கும் சித்தர், கடைசியில் ஆச்சாரி மகனுடன் கூட்டு சேர்பவர் அவரா...இல்லை...வேறொரு சித்தரா...என்று தெளிவாகத் தெரியவில்லை. சாமியார் கதாபாத்திரங்களைச் சொல்லும் போது பெயர்/காரணப் பெயர் வைத்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்தப் புத்தகத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். புத்தகத்தின் இறுதியில், வாழ்க்கைப் பாடங்கள் சிலவற்றைச் சுட்டி எழுத்தியிருக்கிறார் ஆசிரியர். நன்று...
கதையும் நன்றாக இல்லை. கதை சொல்லும் விதமும் நன்றாக இல்லை...
கதையின் எந்தவொரு இடத்திலும் சுவாரஸ்யமோ, திகிலோ, விறுவிறுப்போ இல்லை. படித்து முடிக்க வேண்டுமே என்று நினைத்துத் தான் வாசித்து முடித்திருக்கிறேன். கதையின் இறுதியிலாவது புதிர் விடுபடும்...இல்லை ஆச்சரியம் படும்படியாக ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் பொய்த்துப் போனது.
Profile Image for Boje Bhojan.
31 reviews
August 7, 2022
சிதம்பர ரகசியம் - இந்திரா பார்த்தசாரதி -அமேசான் கிண்டல் - அமானுஷ்ய மர்ம நாவல்-பக்கங்கள்- 256- முதல் பதிப்பு -ஜனவரி 2018

சிதம்பர ரகசியம் - விறுவிறுப்பான ஆன்மிக அமானுஷ்ய நாவல்

புத்தகம் பற்றி

மொத்தம் 256 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஒரு ஆன்மீக அமானுஷ்ய நாவல் சென்னையில் வசிக்கும் மருத்துவரான ராஜேந்திரன் தனது மனைவி தெய்வானை மற்றும் மகள் ஆஷாவுடன் சொந்த காரணங்களுக்காக. தனது சொந்த ஊரான மகேந்திர மங்கலத்திற்கு வருகிறார். அவர் வரும் அதே சமயம் ஊரில் 144 ஆண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் காவேரி புஷ்கரம் நடப்பதால் அங்கு ஏரளமான சாதுக்கள் வருகின்றன . தனது பூர்விக வீட்டிற்கு வரும் ராஜேந்திரன் வீட்டில் பழமையான ஏடுகள் அமைந்த ஒரு பெட்டி இருக்கிறது அதை எடுக்கும் பொது சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது .அதே நேரம் ரசவாத கலையை கற்கும் ஆசையில் ராமையா ஆசாரியின் மகன் திருவேங்கடம் ஒரு சித்தரின் உதவியை நாடுகிறார்.இதற்கு இடையில் ராஜேந்திரன் வீட்டில் இருக்கும் ஓலைச்சுவடிகளை அபகரிக்க ஒரு அகோரி வருகிறார். அவர் வீட்டில் உள்ள சுவடிகள் மட்டும் இல்லாமல் ராஜேந்திரன் அவர்களின் மகளையும் கொண்டு சென்று விடுகிறார் . ராஜேந்திரன் தனது நண்பரான இன்ஸ்பெக்டர் குமரேசன் அவர்களின் உதவியை நாடுகிறார் . இறுதியாக மகள் மற்றும் ஓலை சுவடிகள் கிடைத்ததா. திருவேங்கடதிற்கு ரசவாத ரகசியம் கற்றுக்கொண்டாரா சிதம்பர ரகசியம் என்றால் என்ன அதற்கும் இந்த மஹேந்திர மங்கலத்திற்கும் சம்பந்தம் என்ன. என்பதை விறுவிப்பான நடையில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

விறுவிறுப்பான நடையில் எழுத பட்ட அருமையான அமானுஷ்ய நாவல் இது.
Profile Image for Amudhu.
22 reviews
June 15, 2026
புத்தகம்: சிதம்பர ரகசியம்.
ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்.
வகை: நாவல்.

சிதம்பர ரகசியம் நான் வாசித்த இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் இரண்டாவது புத்தகம். முதல் புத்தகமாக இறையுதிர் காடு (1 & 2) படித்தேன் என்பதாலும், சித்தர்கள் பற்றிய அம்சங்கள் இதில் இருந்ததாலும், இதுவும் அதே மாதிரியான அனுபவம் தரும் என நினைத்தேன்...

இந்த நாவல் விறுவிறுப்பான எழுத்து நடை மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தை கொண்டுள்ளது...கதையின் தொடக்கத்தில் டாக்டர் ராஜேந்திரன், அவரது மனைவி தெய்வானை மற்றும் மகள் ஆஷா ஆகியோர் மகேந்திர மங்கலம் என்ற ஊருக்கு வீடு மற்றும் நிலத்தை விற்கும் நோக்கில் வருகிறார்கள்...
அதேபோல், 144 வருடத்திற்கு ஒரு முறை வரும் புஷ்பகர நீராடலுக்காக பல சித்தர்கள் அந்த ஊருக்கு வருகிறார்கள்...

ராஜேந்திரன் வீட்டில் 5 தலை நாகம் படம் பொறித்த பெட்டியை பார்க்கிறார்... பெட்டிக்குள் என்ன இருந்தது? அப்பெட்டி எப்படி அவன் வீட்டில் இத்தனை வருடம் இருந்தது? அதன்பின் நடக்கும் பல மர்ம சம்பவங்கள் என்ன? என கதை நீள்கிறது...

சிதம்பர ரகசியம் என எதை சொல்கிறார்கள்?
சிதம்பர கோவில் எப்படி மனித உடற்கூறோடு பொருந்துகிறது?
இவை எல்லாவற்றுக்கும் பதிலோடு கதை முடிகிறது...

மர்மம்,ஆன்மீகம், அகோரிகள்,சித்தர்கள்,
மீது ஆர்வம் உள்ளவர்கள் ஒரு முறை வாசிக்கலாம்...
Profile Image for Balaji Srinivasan.
151 reviews10 followers
August 29, 2023
சிதம்பர ரகசியம்

அமானுஷ்யம், மர்மம் கலந்த ஒரு நாவல். சித்தர்கள் தங்கள் கற்றறிந்ததை ஓலைச்சுவடிகளில் எழுதி ஒரு பெட்டியில் அடைத்து வைத்து ஒரு வீட்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஓலைச்சுவடிகள் இருக்கும் விபரம் அறியாமல் வீட்டின் தற்போதைய உரிமையாளர் ராஜேந்திரன் சென்னையில் இருந்து இந்த வீட்டையும் சில நிலபுலன்களையும் விற்க வருகிறார். வீட்டில் சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. வீட்டில் அறிய ஓலைகள் நிறைந்த பேட்டி இருப்பதை அறிந்து சில நபர்கள் அதை அபகரிக்க முயல்கிறார்கள்.

ராஜேந்திரன் வீட்டை விற்றாரா, ஓலை சுவடிகள் என்னவாயின என்பதை சில மர்மங்கள், அமானுஷ்யங்கள், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் என்று சுவாரசியமாக கூற முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். ஆரம்பம் தடதடக்கும் வேகத்தில் சென்றாலும் போக போக ஒரு தேக்கம் இருக்கிறது. கதை இப்போது முடிய போகிறது அப்போது முடிய போகிறது என்று கண்ணாமூச்சி ஆடுகிறது. ஒகே வகை என்று சொல்லலாம்.
16 reviews
March 17, 2026
Review for novel

மிக அருமையான கதை. ஆசிரியர் எல்லா நாவல்களையும் போல் விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் அருமை. சித்தர்களையும் அவர்கள் பற்றிய விவரமும் இவரை விட தெளிவாக கூற எவரும் இல்லை. உண்மையிலேயே ஆசிரியர் நம்மிடையே இல்லாதது நாவல் உலகுக்கே பெரிய இழப்பு.
Profile Image for Abhy.
35 reviews6 followers
September 7, 2026
2.5 stars.

My previous read was Pasitha Maanidam, and it was heavily about asceticism and spirituality. Immediately reading this after that made this book's impact a bit blunt, I should say. A breezy entertaining read nevertheless.
8 reviews
July 29, 2020
Mostly a boring one

Have been an avid reader of Indra Sounderrajan..this book is a mostly dragging one without proper story..unlike the சிவமயம் or Rudra Veenai
69 reviews1 follower
September 30, 2020
A wonderful Novel.

This is one of the interesting Novel in Tamil by the Author.

He frequently write about something interesting in Sidhaa s.

This is also such a great work.

Profile Image for Poovizhi M P.
Author 4 books18 followers
January 28, 2022
Nice story but I felt some lines were repeating through out the story other than that it was a good read
Profile Image for Bhuvan.
284 reviews44 followers
March 24, 2024
Interesting story.

Good plot.

Listened it as audio book. Was well paced.

This is the first book from the author and this will not be the last book.
2 reviews
August 4, 2025
Must read Story

This book remember my hometown memories and those good old days. its a boon for 90s kids those w grown up in village
39 reviews1 follower
March 3, 2026
A usual Indira Soundar Rajan's novel about sithhar, sivam and a modern group who doesn't agree to it. an ok read..
Profile Image for Harini Kaliyamoorthy .
24 reviews
June 14, 2026
உள்ளார்ந்த தத்துவமான பல விஷயங்களை புரிய வைத்த புதினம்...அருமை👌
2 reviews
January 30, 2021
Thriller

Informative things expressed in a effective intresting story. The way that the author expressed this story as detective manner was super
1 review
January 13, 2022
"புரியலையா... அப்ப சரி!"

"என்ன... அப்ப சரி? குழப்பு குழப்புன்னு குழப்பி விட்டுட்டு, 'புரியலையா... சரி'ன்னா என்னய்யா அர்த்தம்?"

This quote towards the end of this book pretty much sums up my reading experience. Too many supernatural elements at play and characters in the book who seek logical answers are given divergent answers, "Sonna puriyathu, anubavikkanum". In the end, I'm left with a lot 'Whys'!

If you are a believer in the supernatural, this may be an interesting read.
Displaying 1 - 21 of 21 reviews