தமிழ் திரையுலகின் முதன்மை நட்சத்திரமான ருத்ரனுக்கு தொடர்ந்து மூன்று தோல்விகள் வர, நல்ல கதை தேடி அலைகிறான். அவனோடு முன் பின் பழக்கமில்லா கதாசிரியை சாத்விகா தன் கதையை தர முற்றிலுமாய் மறுக்க, இயல்பிலேயே முன் கோபம் கொண்ட ருத்ரன் உக்கிரம் கொள்கிறான். சாத்விகாவிற்கு அவன் வேறு விதத்தில் நெருக்கடி கொடுக்க, மூன்று நாட்கள் பயணக் கெடு எனும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கிறாள் அவள். கதையை அடையும் முயற்சியாய் நம் கடுவன் பூனை அவளோடு மூன்று நாட்கள் பயணப்படுகிறது. காதலும் ஊடலுமான பயணத்தின் முடிவில் வென்றது நாயகனா நாயகியா என்றறிய கதையைக் காணுங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி