ஒருநாள் சூசையும், சகமாணவன் கோபுவும் சுற்றித் திரிந்தபோது ஓரிடத்தில் இரண்டு நாய்கள் அருகருகே காணப்பட்டன. சுமார் ஒரு மணிநேரம் அதனருகே காத்துக் கிடந்தார்கள். அவைகள் காதல் வயப்பட்டது போலத் தெரியவில்லை. தாங்கள் இங்கு இருப்பதால்தான் அந்த ஜோடிக்கு மூட் வரவில்லை என்று கோபு சொல்லவே, ‘சரி ஒரு டீ குடித்து விட்டு வரலாம்!’ என்று கடைக்குப் போனார்கள். ‘என்ன ஒரு ஆச்சரியம்?’ டீ குடித்துவிட்டு அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, அந்த இளம் நாய்ஜோடி ஒன்றுக்கொன்று சேர்ந்து எதிர்த்திசையில் திரும்பி நின்று கொண்டிருந்தன. சூசை கத்தினான். “அசாத்தியம்! கோபா! எடுடே கேமராவ! ரோலிங்!!! ஆக்...ஷன்!” அப்போது ஒரு கிழவியின் குரல், “எலேய் காவக்கார காவடிப் பயக்களா! எதஎத போட்டோ புடிக்கணும்’&