எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. உண்மையில் கிளியோபாட்ரா - ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர். பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது. கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அ&#
அரசியல் சூழ்ச்சிக்கும் சொந்த உடன்பிறந்த உறவுகளின் பகைகளுக்கு நடுவில் உலகெங்கும் பிரபலமாக ஆட்சி செய்த கிளியோபட்ரா வின் சரித்திரம். அவள் ஒரு சர்வாதிகாரி, ஆணவக்காரி, ஆடம்பரகாரி என்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான கிளியோபட்ரா வின் வாழ்க்கை முழுவதும் ரகசியங்களையும் மர்மங்களையும் கொண்டது. அதனைத்தொடர்ந்து கிளியோபட்ரா மரணமும் யாரும் கண்டறிய முடியா மர்மமே. தந்தையின் ஆசைப்படி கிடைத்த பதவி அதற்காக தனக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லாத திருமணம், உரிமையுள்ள ராஜ்ஜியத்தை விட்டு உயிருக்கு பயந்து ஒடும் நிலை என்று எப்போதும் பட்டாம்பூச்சி யாக சுற்றித் திரிந்த கிளியோபாட்ரா மனத்தில் அகங்காரம், வெறுப்பு, கோபம், கர்வம், சுயநலம், பழிவாங்கும் உணர்வு வந்ததின் மூலகாரணம் என்ன? எப்படி உலகமே போற்றிய 2 படை தளபதிகளை தன் காதல் வசத்தில் கட்டுபாட்டில் வைத்து இருந்தாள். பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளான கிளியோபட்ரா வை ஏன் எகிப்து மக்கள் தெய்வமாக வழிபட்டனர் என்ற தகவல்களை கொண்ட விறுவிறுப்பான சரித்திர எழுத்து.
Like to read this in starting it's read to difficult and after some more chapters it's interesting to read in this tha anitiny love oh her is true and I like it
ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு. என்ன அட்டகாசமான எழுத்து. சீசரும் ஆண்டனியும் கிளியோபட்ராவின் அழகில் சொக்கிப் போனது போல நான் முகிலின் எழுத்தில் சொக்கிப் போய்விட்டேன்
இப்புத்தகம் மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. எளிதாக நினைவில் வைத்திருக்கும்படி எழுதியிருக்கிறார் திரு. முகில். அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது