காதலடி நீயெனக்கு!! அன்பான வாசகர் தோழமைகளே!!! எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன். எனது முந்தைய கதைகளான உன்னை விடமாட்டேன்...என்னுயிரே, அழகான ராட்சசியே வரிசையில் அடுத்ததாய் ஒரு கலகலப்பான, ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை இது. கதையை பற்றி: கோபம்!!! மானிடர்களிடையே இருக்க வேண்டிய தலை சிறந்த பண்புகளில் ஒன்று கோபம் கொள்ளாமை. எத்தகைய சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது கோபம் கொள்ளாமல், தன் கட்டுப்பாட்டை இழந்து விடாமல் ஒருவன் தன்னை கட்டுபடுத்தி கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்றால் அவனே மிகப்பெரிய மகான் ஆவான். அதே போல ஒருவன் சினம் கொண்டு வெகுண்டு எழுந்துவிட்டால், அந்த சினம் சுனாமியை போல, மற்றவர்களை தாக்குவதோடு தன்னையும் அது தாக்க