பெய்ஜிங் மக்கள் பதிப்பகத்தாரால் 1979 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட ‘டாக்டர் கோட்னிஸ்’ என்ற நூலின் சுருக்கத்தை அளித்துள்ளோம். இந்நூலிற்கான விவரங்கள் சிறப்பாசிரியர் குழு ஒன்றால் தயாரிக்கப்பட்டன. பெய்ஜிங் ராணுவத் தலைமையகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஷென் சியான் காங் என்பவரால் இந்நூல் எழுதப்பட்டது. இதன் தயாரிப்பில் நார்மன் பெத்யூன் சர்வதேச அமைதி மருத்துவமனையைச் சேர்ந்த லு ஜிஷான், ழாங் சாங் மன் ஆகியோர் பங்கு பெற்றனர். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மொழிகள் துறையில் பகுதி நேரமாக சீன மொழியை பயிற்றுவித்து வரும் திருமதி ஷீலா மூர்த்தியினால் சீன மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கில ஆக்கத்தின் தமிழ் வடிவம் இந்த நூல்.