ஊருக்குள் வேண்டாத்தனங்கள் காட்டி, போக்கிரித்தனங்களைச் செய்து எல்லாராலும் வெறுக்கப்பட்ட ஆவரான் என்றொரு இளைஞனை டிரைவர் விசா என்று சொல்லி ஆடு மேய்க்கும் விசாவில் அரேபியாவுக்கு அனுப்பி வைக்கிறது அவனது குடும்பம். அரேபியாவில் போய் கொடும் பாலைவனத்தில் கிடந்து வெந்து நொந்து சீரழியும் கதை.
தமிழில் நான் முதல் முதலில் வாசித்த நகைச்சுவை கலந்த வாழ்வியல் கதை. வட்டார வழக்கு, அரசியல் என அனைத்தையும் சிறப்பாக செதுக்கி இருக்கிறார் பிரபு தர்மராஜ் அவர்கள். ஆவரான் என்ற பெயரின் காரணம், ஆவரானின் சேட்டைகள், ஆவரானின் பாட்டி, வல்சம்மா, நாகராஜ், இஸ்மாயில் என அனைத்து கதாப்பாத்திரங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. 96 பக்கங்களில் இவ்வளவு சிரிப்பையும், தத்துவங்களையும், வாழ்வியலையும் சொல்வது மிக ஆச்சரியமே! முக்கியமாக அரேபியாவில் நாகராஜனின் டைரியில் வாசித்த சம்பவம், ஊரில் பாஸ்டர் மாத்துக்குட்டிக்கு செய்த சம்பவம் என மொத்தத்தில் பிரபு தர்மராஜ் அவர்கள் மிகச் சிறப்பாக சம்பவம் செய்துள்ளார்.