அவர் பெயர் முல்லைவேந்தன். வயது நாற்பதாகிவிட்டது என்றாலும் திருமணமாகவில்லை. முல்லையின் தகப்பர் முடிசூடியபெருமாள் அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பானமோற்சவர். உற்சாக பானம் அவரைப் பாடையில் தூக்கி செல்லவில்லை என்றாலும்கூட அவர் பாடையில் போகும் காலம் வரையிலும் தன் மனைவியை விட அதிகமாக பானத்தை நேசித்து தழுவிக் கொண்ட ஒரு மிகப்பெரிய குடியாண்டவர். ஆகையால் முல்லைக்கு பெண் கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது.''தகப்பனைப் போல பிள்ளை, குப்பியைப் போல குவளை''என்று சொல்லி முல்லைக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லை. ‘தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தானே மேல்!’ என்று பானத்தைத் தழுவத் தொடங்கினார் முல்லை.ஒரு பெரிய கோடாலியை எடுத்து மரத்தைப் பிளப்பது தொடங்கி, ஒரு சிறĬ