கைமாறு பார்க்காது நாம் ஒருவருக்கு செய்யும் உதவி என்பது கூட அன்பின் வெளிபாடு தான். பிள்ளைகளே! நாமும் ஒருவருக்கொருவர் அன்புடனும், நட்புடனும் வாழ வேண்டும். இந்த உலகில் விலை மதிப்பில்லாததும், மிகச் சிறந்ததும் அன்பு என்னும் “ஆயுதம்” மட்டுமே இந்த பூமியை வெல்லக்கூடிய “பொன் சாவியும்” அன்பு மட்டுமே “ கல்வியே அழியாச் செல்வம்”----- அதாவது ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு சொத்து, பணம்,வீடு, நகை என எதைச் சேர்த்து வைத்தாலும் அது திருடு போகலாம். ஆனால் கல்வியை தந்தால் அதை யாராலும் திருட முடியாது.அது தண்ணீரில் கரையாது.நெருப்பில் எரியாது அதனால், தான் நம் முன்னோர்கள் “கல்வியே அழியாத செல்வம்” என்றனர்.