Jump to ratings and reviews
Rate this book

மலை அரசி

Rate this book
விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வார் இளவரசனை நோக்கிய ஜோகி, “விளக்கை நன்றாக உற்றுப்பார். கவனத்தை வேறு எங்கும் திருப்பாதே” என்று நிதானமாகக் கூறினார். “மலைஅரசி! பந்தத்தை அணைத்துவிடு” என்று அந்தப் பெண்ணுக்கும் உத்தரவிட்டார். அடுத்த விநாடி அவள் பந்தத்தை பக்கத்துப் பாறையில் தீய்த்து அணைத்துவிடவே, தீபத்தின் ஜோதி ஒன்றே குகையின் உட்புறத்தை ஆட்கொண்டது. “மார்வார் ராஜபுத்திரனே! இப்பொழுது பார் ஜோதியை” என்றார் ஜோகி சாந்தமான குரலில். ராவ்ஜோடா அகல்விளக்கின் ஆடாமல் நின்ற சுடரை நோக்கி&

252 pages, Kindle Edition

Published March 3, 2021

11 people are currently reading
114 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (19%)
4 stars
14 (24%)
3 stars
21 (36%)
2 stars
8 (14%)
1 star
3 (5%)
Displaying 1 - 3 of 3 reviews
15 reviews
March 3, 2024
சாண்டில்யன் கதைகளில் எப்போதும் ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கும் இந்த கதையில் அது மிகவும் குறைவாக இருக்கிறது அது மிகுந்த கதைக்கு பின்னடைவாக உள்ளது....

இந்த கதையில் நிறைய சரித்திர பத்திரங்கள் இருக்கிறது கற்பனை பாத்திரம் மலை அரசி ஒருவள் தான். மலை அரசி கற்பனை பத்திரமாக இருந்தாலும் கதையை படிக்கும் போது அவளும் சரித்திரத்தில் ஒரு அங்கமாக மாறி விடுகிறாள் மாவார் மன்னன் ராவ் ஜோடா தன் தந்தை செய்த பிழையால் பட்சிகளின் சரணாலயம் என்ற இடத்தில் சரணடைகிறான் அங்கு ஜோகிர் அவனுக்கு அருள் புரிந்து சரித்திரத்தில் பெரிய வீரர் என பிரசித்தி பெற்ற ஹர்பா சங்க்லா என்ற ஒருவரை ராவ் ஜோடாவிற்கு துனையாக ஏற்படுத்துகிறார் ஆனால் அவர் இவன் என்னிடம் தானகாக வரும் காலம் அன்று இவனுக்கு நான் உதவி புரிகிறேன் என்று கூறு சென்று விடுகிறார் பின்னர் மலை அரசியும் ராவ் ஜோடாவும் மாவார் செல்கிறார்கள் அங்கு நடந்த யுத்தத்தில் படைத்தலைவன் செய்த பிழையால் மீண்டும் ராவ் ஜோடா ஜோகிர் இருக்கும் மலைக்கு வருகிறான் அப்போது வருகிறார் ஹர்பா சங்க்லா. இது முதல் பதிமூன்று அத்தியாயங்களின் கதை சுருக்கம் இதன் பின்னர் ராவ் ஜோடா மலை அரசி மற்றும் ஹர்பா சாலா உடன் இனைந்து எப்படி நாட்டை மீட்கிறார்ன் என்பதை விறுவிறுப்போடு கதையாக எழுதி இருக்கிறார்

இந்த கதையில் குறைகள் நிறைய இருக்கிறது முதன்மையாக ஜோடா மலை அரசி உடன் இனைந்து செய்யும் வீர சாகசங்கள் குறைவு காம சாகசங்கள் அதிகம் போல தோன்றுகிறது இது எனக்கு மட்டும் தானா இரண்டாவதாக போர் வர்ணனைகள் அவ்வளவாக இல்லாதது அதுமட்டுமின்றி கதையின் இறுதியில் உப்பு சப்பு இல்லாத ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார் இதற்கு அலை அரசி கூட தேவலாம் அந்த கதையில் கூட கொஞ்சமாவது ட்விட்ஸ் இருக்கும். ஆனாலும் முதல் முறை படிக்கும் போது விறுவிறுப்பு உடன் தான் படித்தேன் முடிவு சற்று ஏமாற்றம் அளிக்கலாம் அதே போல் எப்போதும் சாண்டில்யன் ஹீரோக்களை நிறைய புகழுவார் வில்லன்களை தூற்றுவார் ஆனால் இதில் ஹீரோக்களுக்கு இனையாக வருகிறான் வில்லன். கதை ஒரே இடத்தில் நிறக்காமல் பட இடத்திற்கு பயணிக்கிறது அதுவே கதையின் ஒரு சிறிய பலமாக இருக்கிறது பொழுது போக்காக படிக்கலாம்
2 reviews
November 18, 2023
சாண்டில்யன் கதைகளில் நான் படித்த முதல் கதை மலை அரசி அதனாலோ என்னவோ இந்த கதையே மிகவும் பிரம்மாண்டமாக தோன்றியது ஆனால் கடல் புறா யவன ராணி கதைகளை படித்த பின்னர் மலை அரசி கதையை திரும்பி படிக்கும் போது முன்பு படித்த விறுவிறுப்புகள் பெரியதாக தெரியவில்லை ஆனால் பொழுதுபோக்காக படிக்கலாம் போர் வர்ணனைகள் கூட அவ்வளவாக இல்லை 👌👌
Profile Image for Dineshsanth S.
193 reviews42 followers
September 22, 2016
சாண்டில்யனின் வழமையான நூல்களில் காணப்படும் சுவாரசியமும் விறுவிறுப்பும் மலை அரசியில் பெரிதாக காணப்படவில்லை.சாண்டில்யனின் ஸ்பெஷலான போர் வர்ணனை கூட வழமையான பாணியில் இல்லை.கற்பனை அதீதமாக இருப்பதால் கதையுடன் மனம் ஒன்றிக்க மறுக்கின்றது.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.