இந்தக் கதை முற்றிலும் domestic violence என்னும் புகுந்த வீட்டுக் கொடுமைகளைச் சார்ந்தது. படித்து முடித்த பிறகு மிகவும் அருவருப்பாக இருந்தது. ஏனெனில், இது ரமணி சந்திரன் பாணியில் அல்லாமல் தரம் தாழ்ந்த விதத்தில், தரம் குறைந்த மொழியில் எழுதி இருந்தது.
கதாநாயகன் கதாநாயகியை மிகக் கோரமாக அடிக்கிறான். ஆனால் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவளாகவே அவனை மன்னித்து அவனைத் தேடிச் செல்கிறாள். அதற்கு பின்பே அவன் மன்னிப்பு கோருகிறான். இல்லையெனில், அவனுக்கு மன்னிப்புக் கோரும் எண்ணமே இருப்பதாகவே தெரியவில்லை! இறுதியில் ஓர் இடத்தில், அவள் கூறுகிறாள் "அடித்தது தப்பு தான் ஆனால் காரணங்களை கேட்ட பிறகு அது பெரிய தப்பில்லை!"..
விவகாரத்து தான் இதற்குத் தீர்வு என்று நான் கூறவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஆனால், குறைந்தபட்சமாக மன்னிப்புக் கோரும் பகுதியை திருப்திகரமாக கையாண்டு இருக்கலாம்!
இந்த எழுத்தாளரை எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரின் கதைகளை நான் என் சிறு வயதில் இருந்து படித்து வருகிறேன். என்றாலும், இவரது எழுத்தில் சில கதைகள் முகம் சுழிக்கும் படியும் இருந்திருக்கின்றன.
உதா:
ஒரு கல்யாணத்தின் கதை!
என் கண்ணின் பாவையன்றோ!
கண்ணே கண்மணியே!
இன்னும் நிறைய இதுபோல்! கடந்த 10 ஆண்டு காலமாக இவரின் கதைகள் மிகவும் அறுவையாக, சலிப்பாக இருக்கின்றன!