Jump to ratings and reviews
Rate this book

பாண்டியன் பவனி

Rate this book
பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே பல விநாடிகள் அசைவற்று நின்றான். மணவறையில் முதல் நாளன்றுகூட மனையாட்டியை உறவு கொள்ள அனுமதிக்காத அரசகுல வாழ்வை அந்தச் சில விநாடிகள் பெரிதும் வெறுத்தான் பராந்தகன். ‘வீண் படாடோபம். அர்த்தமற்ற அதிகாரம். இதுதான் அரச வாழ்வு’ என்று மனத்துக்குள் வெறுத்தவண்ணம் நின்றிருந்த பராந்தகனை, பஞ்சணை முகப்பிலிருந்த மல்லிகைச்சரத் திரையை லேசாக விலக்கித் தலை நீட்டிய வானவன்மகாதேவி, “என்ன விசேஷம்? அரசர் எதற்காக அவசரமாக வந்தார்?” என்று கவலை பாய்ந்த குரலில் வினவினாள்.

162 pages, Kindle Edition

First published September 1, 2010

6 people are currently reading
139 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (19%)
4 stars
14 (25%)
3 stars
24 (42%)
2 stars
4 (7%)
1 star
3 (5%)
Displaying 1 - 4 of 4 reviews
2,121 reviews1,110 followers
July 7, 2018
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம்.

பராந்தகனால் தோற்கடிக்கப்பட்டதைத் தாங்க முடியாத ரகுநாதபாண்டியன் தற்கொலை செய்து கொள்ள அப்பழி இவனின் மீது விழுந்து அவனின் தம்பியான முல்லைவேந்தன் தன் மகள் முல்லையுடன் சேர்ந்து பாண்டிய அரசாங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த புரட்சியில் ஈடுபடுகிறான்.அப்புரட்சியை ஒடுக்க மன்னன் பராந்தகனையே அனுப்பி வைக்கிறார்.

முல்லையின் புரட்சியை ஒடுக்க வந்தவன் அவளின் அழகிடமே வீழ்ந்து போனாலும் தன்னுடைய இலக்கை எட்ட அவளையே உபயோகித்துக் கொள்கிறான்.

முல்லையின் வாழ்வில் துன்பத்தையே வழங்கி வந்த குடிகார தந்தையைத் தன் சாதுரீயத்தால் வெற்றி பெற்று அவளுடன் சில நாட்கள் காதலில் திளைத்து விட்டு வெற்றி செய்தியுடன் மன்னவனைச் சந்தித்த பிறகு தன் மனைவியைத் தேடி செல்கிறான் பராந்தகன்.
ஆண் பெண் ஈர்ப்புகளும் அதனுடனான உணர்ச்சி விளையாட்டுகளும் கதையின் மையமாகிறது.
Profile Image for Mohan Karthikeyan.
13 reviews
January 29, 2022
Very short book this not even me a day to finish
I will categories this book under romanctic fiction however romance has palyed an major role here
Profile Image for Aargee.
165 reviews1 follower
July 21, 2024
A very short novel that could be easily finished in a day. As usual, சாண்டில்யன் Sir's twists & thrills are filled in this with usual விறுவிறுப்பு
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.