கண்ணீரின் சுவை கரிப்பல்ல; இனிப்பு என்று செல்வம் அருளானந்தம் அறிவித்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர் சொற்களின் ரசவாதி. தரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை, புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பவை மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள். குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள்.
’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (ஜூன் 30, 1953) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
செல்வம் யாழ்ப்பாணம் சில்லாலையில் ஜூன் 30, 1953-ல் சவரிமுத்து - திரேசம்மாவுக்கு பிறந்தார். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் புனித ஹென்றி கல்லூரி (St. Henry’s College) இளவாலையில் பட்டப்படிப்பையும் புனித அகஸ்டின் பிரெஞ்சு மொழி பள்ளியில் (St. Augustine French Language School Paris, France) ல் பிரெஞ்சு மொழியும் மருத்துவத் தாதிக்கான பட்டயப்படிப்பு (Diploma from St. Daniel College Toronto) கனடாவிலும் முடித்தார்.
செல்வம் 1975-ல் நான் என்னும் இதழில் தன் முதல் கவிதையை எழுதினார். ஜெயகாந்தன், எஸ். பொன்னுத்துரை, சுந்தர ராமசாமி, ஜானகிராமன் ஆகியோரை இலக்கிய முன்னோடிகளாக கருதுகிறார். செல்வம் தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் ஏதும் எழுதவில்லை. அவருடைய அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதிய எழுதித்தீரா பக்கங்கள் என்னும் நூல் அதன் இயல்பான நகைச்சுவையால் புகழ்பெற்றது. தொடர்ந்து அதன் அடுத்த பகுதியான சொற்களில் சுழலும் உலகம் நூலையும் எழுதினார்.
புலம்பெயர் வாழ்க்கையில் இரண்டு சிற்றிதழ்களை நடத்தினார். குமார் மூர்த்தி என்னும் நண்பருடன் இணைந்து அவர் தொடங்கிய காலம் சிற்றிதழ் முப்பதாண்டுகளாக கனடா டொரொண்டோ நகரில் இருந்து வெளிவருகிறது. ஈழத்து இலக்கியவாதிகளுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் காலம் வெளியிட்ட சிறப்பிதழ்கள் இலக்கிய ஆவணங்களாகும்.
பார்வை சஞ்சிகை (1987-1989) (ஆசிரியர்) (Montreal, Canada) காலம் சஞ்சிகை (1990 - Present) (Toronto)
இந்த புத்தகத்தில் "மண் கடன்" என்று ஒரு பகுதி உள்ளது, அதனை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மிகவும் முதன்மையான பதிவு அது. நாயகத்தின் கதை என்னுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நூலின் கடைசிக்கு முந்தைய பக்கத்தில் நான் தேம்பி அழுதுவிட்டேன்.
In spite of being from TN, didn't have any idea about srilankan tamil issue. Wouldn't say that i know anything now, this book made me realize that i don't know anything.
இந்நூல் செல்வம் அருளானந்தம் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு. தம்முடைய வாழ்வில் பார்த்த நபர்களுடைய கதைகளும், அந்த நபர்கள் வாயிலாக அறிந்த நபர்களின் வாழ்க்கையையும், தாம் பட்ட கதைகளும். என அவர் தம்முடைய புலன்களால் உணர்ந்த கதைகளும், செவியால் அறிந்த கதைகளும், அனுபவித்த கதைகளும்(இங்கு நான் கூறும் கதைகள் என்பது வாழ்க்கையை தான் குறிக்கிறது) நம்முடைய எழுத்தில் மிகவும் நகைச்சுவையாக இத்தொகுப்பை உருவாக்கி இருக்கிறார். ஆனால் அந்த நகைச்சுவைகளுக்கு அப்பால் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள வலிகளையும் நாம் உணரும்படியாக கடத்தியிருப்பார். இதுவே இந்நூல் செய்த அற்புதமாகத்தான் நான் பார்த்தேன்.
இதில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை எல்லாம் பல்வேறு விதமான மக்களின் வாழ்வியலை கொண்டது. ஈழப்போருக்கு முன்பே அந்நாட்டை துறந்து வாழ்ந்தவனின் வாழ்க்கை காலப்போக்கில் எப்படி இருக்கிறது, அகதியாக வாழ்பவன் எப்படி வாழ்கிறான், நாட்டை துறந்து வந்தாலும் நம் மக்களிடையே இருக்கும் ஜாதி மத வேறுபாடுகள் என்ன செய்கின்றன, போரில் சிக்கி மீண்ட அவர்களின் வாழ்வியல் என்ன பல்வேறு துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை காலப்போக்கில் அந்த துயரங்கள் எல்லாம் எப்படி காண்பிக்கப்படுகிறது என்று உணரக்கூடும்.
மனித வாழ்வின் அபத்தத்தை பல இடங்களில் உணரக்கூடும். மொழி இனம் இடம் என பல்வேறு வகையான சொற்களின் ஊடாக மனிதனை எப்படி எல்லாம் மாற்றி அமைக்க முடியும் என்று என்றும். இதற்கு பெரும்பாலும் இருக்கக்கூடியது அவர்கள் உள்ளில் இருக்கும் அபத்தம் தான் என்றால் என என்னால் உணர முடிகிறது. ஈழத் தமிழில் இருந்த இத்தொகுப்பு ஆரம்பத்தில் வாசிக்கும் போது சற்று கடினமாகவே இருந்தது ஆனால் போக போக அந்த சொற்களும் அதனின் அழுகும் என்னை ஈர்த்து மேலும் வாசித்துக் கொண்டே இருக்கலாம் என்று உணர்வைத் தந்தது. பல இடங்களில் புன்னகைத்தேன், அதேபோல பல இடங்களில் கண்ணீர் சிந்தினேன்.