இந்த கதையின் நாயகன் இன்பரசு நாயகி ஈஸ்வரி இருவரின் காதலும், புரிதலும், அவர்கள் வாழ்வில் எதிர்பாராமல் வந்த சிக்கலை அவர்கள் எதிர்கொண்ட விதமும் அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுமே கதை. படித்து உங்கள் உணர்வுகளை சொல்லுங்கள்.கதையிலிருந்து சில வரிகள்:“ஈஸுமா இது போல சின்ன சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையில மிகப்பெரிய சந்தோஷங்களை நமக்கு தரும்டா. இந்த மாதிரி விஷயங்களை எப்பவுமே தவறவிட்டுட கூடாது. காரு, பங்களா, பணம், வசதி எதுவுமே இந்த மாதிரி சந்தோஷங்களை தந்துடாது. நமக்கு வாழறதுக்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கறது இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள்தான். இதெல்லாம் பொக்கிஷம் மாதிரி. நிறைய சேர்த்து வெச்சுக்கணும்.