Jump to ratings and reviews
Rate this book

சூடிய பூ சூடற்க

Rate this book
நாஞ்சில் அவர்கள் சமீபத்தில் எழுதிய சிறகதைகளின் தொகுப்பு இந்நூல், தமிழ் மரபில் திளைக்கும் மொழிவளம் அனுபவங்களால் கனிந்த மனித நேயம் சூழலின் மீதான கூரிய அங்கதம் ​கொண்ட கதைகள்

160 pages, Paperback

First published January 1, 2005

46 people are currently reading
478 people want to read

About the author

Nanjil Nadan

43 books80 followers
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
76 (36%)
4 stars
84 (40%)
3 stars
40 (19%)
2 stars
6 (2%)
1 star
4 (1%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for MJV.
92 reviews39 followers
January 24, 2021
மீண்டும் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள். சில கதைகள் சென்ற வருடம் படித்த புத்தகத்தில் இருந்ததே இருப்பினும், மீண்டும் மீண்டும் கும்பமுனி சிறுகதைகள் மீது மிகுந்த காதலையும், கும்பமுனியின் வழி நாஞ்சில் நாடன் நடத்தும் பகடிகள், அவர் எழுத்தின் மீது மிகுந்த காதலையும் திணித்து போயிருக்கின்றன. மும்பையின் வாழ்க்கையையும், நாஞ்சில் நாட்டின் வழக்குகளையும் மெல்ல மெல்ல நம் மனதின் ஆழத்தில் விதைக்கிறார் நாஞ்சில் நாடன் அவர்கள்.

இந்த புத்தகத்தில் மொத்தம் 15 கதைகள் இடம்பெற்று இருக்கின்றன. பகடியில் அரசியல் கேள்விகளை முன் வைக்கும் நாஞ்சில் நாடன், உயிர்ப்புள்ள உணர்வுகளின் சந்திப்புகளையும் தவற விடுவதில்லை. வலைகள் எலிகளுக்கானவை என்ற கதையில், அப்படியான உயிர்ப்புள்ள உணர்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யும் மக்களின் கதை அது. அவர்களின் பாடுகளையும், இடம் மாறி மாறி செல்லும் தொடர் வண்டியில் அவர்களுக்கென எழுதி வைக்கப்பட்ட அவமானங்கள் எவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதையும், அப்படியான மனிதர்களை இன்று வரை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம் என்பதனையும் அவரின் கதையின் வரிகள் சொல்லுகின்றன.

பொதுவாகவே தொடர்வண்டியில் உள்ள பொது பெட்டியில் பயணிக்கும் மனிதர்களின் கதை. வாழ்வின் அடித்தட்டென நாமே நம்மில் பலர் முடிவு செய்து பார்க்கக்கூடிய மனிதர்களின் கதை. அவர்களும் நம்மில் ஒருவர் என்ற படிப்பினையை கொடுத்து வளர்க்கவில்லை இந்த சமூகமும் ஏன் சில நேரங்களில் வீடும் கூடத்தான். விவசாயிகளின் தொடர் வண்டி பயணத்தின் ஏற்படும் சங்கடங்களின் ஊடே பிரயாணப்படுகிறது கதை. தமிழ்நாட்டில் விரட்டி அடிக்கப்படும் இடங்களை தொட்டு துளையிட்டு நோக்கிய கணங்களை கதையில் சொல்லி இருக்கிறார்.

"காய் சாப்... அமி லோக் பிக்காரி ஹை கா? அம்சக்டே டிக்கிட் நை கா? அமி லோக் கூஸ் காத்தூஸ்கா?"

திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தனர் - நாங்கள் பிச்சைக்காரர்களா? நாங்கள் டிக்கட் வாங்கவில்லையா? நாங்கள் மலம் தின்கிறோமா?

"ஏ காய் சாப்? காய் கலத்தி கேலா அமி? துமி சாங்கனா... "

நேதா கையில் மொத்தப் பயணிகளுக்குமான வட்டச் சுற்றுச் சலுகை பயணச் சீட்டு இருந்தது.

"நாங்க ஏழைங்க சாப்... கற்சிரோசி விவசாயிங்க... வித்தவுட் பிச்சைக்காரங்க இல்லே... போன வருஷம் காசி போனோம். அதுக்கு முந்தி காளிகட் போனோம்... கன்னியாகுமரி வந்து நாங்க ரத்தாகி கோறையோட போறோம்... ஏ பராபர் ஹை கா? துமி சாங்கா! "

பசியின் வலியினை உள் வைத்து, நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையினை ஒரு போதும் நம்மில் வெகு பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் நன்றாக விவசாயம் செய்து சட்டென்று ஒன்றும் இல்லையென மூளைக்கு சொல்லவும் முடியாமல், மூலையில் அமரவும் முடியாமல் போன சபிக்கப்பட்டவர்கள். அதிலும் அனைத்தையும் இழப்பதிலும் கொடிது, மனைவி, பிள்ளை, மருமகள், பெயரன் பெயர்த்திகள் இப்படி அனைவரையும் இழந்த பின் வாழும் வாழ்க்கை. கொடிதுனும் கொடிது. தான் இருக்கவோ, இறக்கவோ யாருமற்ற மனிதனின் உலகம் கொடுமையிலும் கொடுமையின் உச்சம். அதுதான் மனிதத்தின் உச்சபச்ச கொடுமையென நினைக்கத்தூண்டும் நாத்ரேயின் கதை - யாம் உண்பேம்

"பூட்ட என்ன இருக்கிறது வீட்டில்? யாருக்கு எதை விட்டுச் செல்ல? புலவர் பாடாது ஒழியும் நிலவறையா? எங்கு செத்து வீழ்ந்தாலென்ன? மாற்றுடை இல்லாத, பத்துக் காசு சில்லறை கூட கைவசம் இல்லாத, அடுத்த வேளை உணவு பற்றிய ஆதாரம் இல்லாத, மறுபடியும் இனி காணவே முடியாத மண்ணைப் பற்றிய போதம் இல்லாத புறப்பாடு.

ஆவிகள் ஆவலாதியோடு அலைந்து திரியும் பூமி.

கும்பி என்பது தூராத கிணறு, அவியாத நெருப்பு, ஆறாத புண், தன்னையே தான் தின்னும் வெறியான மிருகம், உள் ஒளிந்து கிடைக்கும் உருவம் இல்லா அணங்கு...

எங்கு கொண்டுபோய்த் தொலைப்பது நிழலை. பெற்று வளர்த்த மகனின், பேணிய மருமகளின், குங்குமம் அப்பி குளிர் சாந்தம் அட்டித்து மங்கல வீதி வலஞ்செய்து மணநீர் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டா பேத்திகளின் நினைவை எங்கு கொண்டுபோய்த் தொலைப்பது?

ஹிங்கன்காட்டில் கிடந்த குளமொன்றில், கோவணம் கட்டிக் கொண்டு, அரை வேட்டியையும் தலை வேட்டியையும் வெறும் தண்ணீரில் நனைத்துக் குமுக்கிக் குத்தி, உலர வைத்து மறுபடியும் அணிந்து கொண்டு...

எந்தத் திசையானால் என்ன? திசையற்றவனுக்கு போகும் திசை எல்லாம் சொந்தத் திசை. "

படுவப் பத்து என்ற கதையில் ஐந்து வெவ்வேறு முடிவுகள் இருக்கின்றன கதைக்கு. படிக்கும் மனதிற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் எழுதியுள்ளார். அல்லது இவ்வாறான முடிவுகள் மட்டுமே சாத்தியம் என்கிற தொனியில் எழுதி இருக்கிறார். கதை எளியவர்களுக்கும் பெரியவர்கள் என்று பெயரிடப்பட்டிருப்பவர்களுக்குமான பொது இடம் என்ன என்பதை சொல்லும்படியான கதை. பள்ளமான வயற்காட்டின் கதை என்பதால் படுவத் பத்து என்பது தலைப்பாகி போனதை சுட்டி காட்டியுள்ளார் நாஞ்சில் நாடன். பத்து என்பது வயற்காட்டையும், படுவம் என்பது சற்றே தாழ்ந்த நிலத்தையும் குறிக்கிறது.

வயல் வேலை செய்யும் பரமனின் கையில் கிடைக்கிறது ஒரு கிரீடம். இது நடப்பது சங்கராசுப்பையரின் படுவத்தினை உழும் தருணத்தில். பரமனும் முப்படாதியும் எப்படி இதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும், 5 முடிவுகளுடன் கூடிய கதை.

இப்படி எல்லாக் கதைகளும் ஒவ்வொரு முறையில் நம்மை வந்தடைகின்றன. கற்பனையா? அல்லது அசப்பில் வாழ்ந்தவரா? என்பதைத் தாண்டி நாஞ்சில் நாடன் கதைகளில் வரும் எழுத்தாளர் கும்பமுனியும், அவரின் உதவியாளர் தவசிப்பிள்ளையும் நெஞ்சில் நிற்கும் பாத்திரங்கள். அப்படி பகடி செய்திருப்பார்கள். அறுந்து அந்தரத்தில் தொங்கும் பாங்கு கொண்ட சமூகத்தின் மீதான கோபமும், பெருங்கசப்பும் அச்சு அசலாய் கும்பமுனியின் மூலம் வெளிப்படுகிறது.

எத்தனை முறை வாசிப்பினும் கதை எழுதுவதன் கதை, கும்பமுனி முறித்த குடைக்காம்பு, தேர்தல் ஆணையத்துக்கு திறந்தவெளிக் கடிதம், மணமானவருக்கு மட்டும் போன்ற கதைகளில் ஓர் எழுத்தாளர் படும் பாடு, அதைத் தாண்டி அவர் இந்த சமூகத்தை பார்க்கும் விதம், அரசின் மீதான கோபம், தான் ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை அல்லது வேறு யாரும் ஒன்றையும் முறித்திட விரும்பவில்லை என்பதனையும், கும்பமுனி சொல்லும் வார்த்தைகளில், கேட்கும் கேள்விகளில் நிறைவாய்த் தெரிவதை தவிர்த்து கடந்து போக முடியாத எழுத்துகள். தவசிப்பிள்ளை இல்லாத கும்பமுனியை நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு ஆழமாய் நிற்கிறார் தவசிப்பிள்ளை. அந்த அளவுக்கு உரக்க பேசும் கும்பமுனியைக் கூட கட்டிப்போடும் எதிர் வினையாளர் தவசிப்பிள்ளை. எழுத்தின் மீதும் மனிதர்கள் மீதும், அவர்களின் வாழ்க்கை மீது தீரா காதலும், கசப்பும் கொண்ட ஒருவரினால் மட்டுமே படைக்க படக்கூடிய பாத்திரங்கள் இவை என்று நினைக்கிறேன் நான்.

இப்படி கும்பமுனி குமுறுகிறார் "கும்பமுனி முறித்த குடைக்காம்பு" கதையில்!
"இந்தப் பழைய பித்தளை வெத்திலைச் செல்லத்தை மாத்தீட்டு எவர்சில்வர்லே வாங்கணும்... இது ரொம்ப நெளிஞ்சு களிம்பேறிக் கெடக்கு... - தவசிப்பிள்ளை.

தங்கத்தில செய்வோம் ஓய். வக்காளி தியாகராஜ பாகவதர் போல தங்கத் தாம்பாளத்திலே சாப்பிடலாம்லே... தமிழ் எழுத்தாளன் எவனும் தங்கத் தட்டத்திலே சாப���பிட்டிருக்கனாலே இதுவரைக்கும்? நாம சாப்பிடலாம்... நீரும் சாப்பிடும்...

சாகித்ய அகாடெமி பிரைஸ் குடிக்கச்சிலே ஒரு தங்கத் தட்டம் குடுப்பாளாமே!

தங்கத்தட்டம் மயிறு குடுப்பான்... குடுத்தாலும் அதுல சாப்பிட எவனுக்காம் மனசு வருமாலே... அவனவன் பொண்டாட்டி தாலியை அடமானம் வச்சு செலவாக்கி பிரைஸ் வாங்கீருக்கான். மொதல்ல அதைத் திருபாண்டாமாலே... பின்னே எழுதப்பட்ட கைக்கு ரெண்டு காப்பு நல்லாக்கிப் போடேண்டாமா? "

அற்புதமான சிறுகதைகள். படித்துப் பாருங்கள்...
May 16, 2020
நான் முதலில் வாசித்த சிறுகதை தொகுப்பு எழுத்தாளர் ஜெயகாந்தனுடையது. அதற்க்கு பின் வாசித்தது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடைய சூடிய பூ சூடற்க.

ஒரு பயணக்கட்டுரை வாயிலாக நம்மை அவருடைய உலகுக்கு கடத்திச் சென்று பின்பு அந்த தளத்தில் ஒரு கதை சொல்கிறார். ஏ .கே. செட்டியார் அவர்களின் பயண கட்டுரைகளை விரும்பி வாசித்ததாலோ என்னவோ சூடிய பூ சூடற்க வாசிப்பதில் இருந்த ஆர்வம் கூடியிருந்தது.
பல கதைகள் இருந்தாலும், நான் மிகவும் இசைந்தது அவரது சொந்த அனுபவங்களிலிருந்து எழுதிய தன்ராம் சிங்க் மற்றும் திராவிட கட்சிகளின் தீவிர முற்போக்கு சிந்தனை எதுவரை போகக்கூடும் என்ற ஒரு கற்பனை கதையான மனமானவர்களுக்கு மட்டும்

தன்ராம் சிங் ஒரு நேபாளி கூர்காவை பற்றிய கதை. நான் நெய்வேலி டவுன்ஷிப்பில் வாழ்ந்தபோது அங்கே இரவு நேர காவலுக்காக கூர்க்காக்கள் இருப்பார்கள். மாதம் ஒரு முறை அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை எல்லோருடைய வீட்டிற்கும் சென்று ஒரு சிரிப்போடு ( உன் ஆதரவில் என் வாழ்க்கை என நாஞ்சில் நாடன் இந்த சிரிப்புக்கு ஒரு அர்த்தம் கற்பித்திருக்கிறார் ) வேலைப்பார்த்ததற்கான பணம் வாங்கி செல்வதுண்டு. என் அம்மா அந்த பணியாளர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்திக்கிருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர் ஏன் இங்கு வந்து வேலைப்பார்க்க வேண்டும், வேலைநேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்வார்கள், அவர்களின் குடும்பம் எங்கே ? என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது, அதை பற்றி கவலைப்பட்டதும் இல்லை. உள்ளூர் மற்றும் வெளியூரில் அகதிகளாக வாழும் மனிதர்களை பற்றிய ஒரு சில கதைகளை திரைப்படங்களின் வாயிலாக பார்த்ததுண்டு. உதாரணத்திற்கு மலையாளத்தில் கருத்தபக்ஷிகள் , பத்தேமாரி, டேக் ஆஃப் என சொல்லிகொண்டே போகலாம். மாதக்கணக்கில் தன் சொந்தங்களை பிரிந்து வாழும் ராணுவ வீரர்களும் கிட்ட தட்ட இந்த பிரிவை சேர்ந்தவர்கள் தான். தன்ராம் சிங் வாசித்த பின் எனது நினைவடுக்குகளிலிருந்து எனது பால்ய காலம் வந்து சென்றது. அந்த கூர்க்காவை பற்றிய நினைவடுக்களில் எஞ்சியது நான் அவர் முகத்தில் கண்ட அந்த சிரிப்பு தான். ( உன் ஆதரவில் என் வாழ்க்கை)
நான் நெகிழ்ந்த கதைகளில் இந்த கதையும் ஒன்று,

மனமானவர்க்கு மட்டும் என்ற கதை கிட்டத்தட்ட ஒரு விரும்பத்தகாத ஒரு சமூகத்தை காண்பித்ததுபோல் உணர்கிறேன், இதன் உச்சத்தில் இருக்கும் சமூகத்தை dystopian society என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. 2015இல் வெளிவந்த The Lobster என்ற படத்தில் இது போல் ஒரு சமூகத்தை நான் பார்த்திருக்கிறேன், இவ்வளவு ஏன் பேரிடர் காலமான இந்த கொரோனா ஊரடங்கும் கிட்டத்தட்ட இந்த மாதிரியான ஒரு சூழல் தான், தமிழ் கதைகளில் என்னை இது போன்று ஒரு உலகத்தை கடத்தியது சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா என்ற நெடுங்கதை , மனமானவர்க்கு மட்டும் என்ற கதை திராவிட கட்சிகளின் முற்போக்கு சிந்தனையின் நீட்சியாகவும் மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கமாகவும் அதை பகடியாகவும் சித்தரித்தது போலவும் நான் உணர்கிறேன் , அவரது வெளிப்படையான மொழிநடையும், கூடிய விரைவில் இது நடக்கும் என ஏதோ தீர்க்கதரிசி போல் எண்ணி இதை எழுதியிருக்கிறார் எனவும் தோன்றுகிறது. அடுத்த புத்தக கணக்காட்சியில் அவரது புத்தங்களை வாங்க காத்திருக்கிறேன்.

நன்றி
அன்புக்குமரன்
56 reviews5 followers
August 4, 2024
அருமையான சிறுகதைகள். ஒவொன்றும் பொக்கிஷம். சிறிதும் அலுப்பு வராத யதார்த்த கதைகள். நாஞ்சில் நாடனின் வாழ்க்கை அனுபவங்கள் அவர் பேனா மையின் மூலம் களிப்பு நடனம் ஆடியிருக்கின்றன.
“யாம் உண்பேம்”, “கடவுளின் கால்”, “செம்பொருள் அங்கதம்” மற்றும் “சங்கிலி பூதத்தன்” மிக சிறப்பானவை.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
April 29, 2024
#266
Book 27 of 2024- சூடிய பூ சூடற்க
Author- நாஞ்சில் நாடன்

“தெரிந்தவை, அறிந்தவை, அனுபவப்பட்டவை எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு, காலியானதொரு பாத்திரமாக ஆகிவிட வேண்டும் என்பது எனது ஆசை. கம்பன் சொல்வது போல் 'பின்னை நின்று எண்ணுதல் பிழை.’ “

இதுவரை படித்திடாத எழுத்தாளர்களை இந்த ஆண்டு வாசிக்க வேண்டும் என முடிவெடுத்து நான் படித்த புத்தகம் தான் “தலைகீழ் விகிதங்கள்”. பின் அவருடைய சிறுகதைத் தொகுப்பான இந்த புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இதில் 15 சிறுகதைகள் உள்ளன.

நாஞ்சில் நாடனுக்கே உண்டான வட்டார மொழிவழக்கு, எதார்த்தம்,கேலி,இயற்கை,அரசியல்,சமூகத்தின் அவலம்,என எல்லாமும் இதிலும் இருக்கிறது. ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக, நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது, நம்மை உணர்ச்சிக் கடலில் மூழ்கவும் செய்கிறது. இது சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம். மனித வாழ்வு வலிகள் நிறைந்தது, அதை இலக்கியத்தின் மூலம் வாசிக்கையில் இன்னும் சக மனிதர்களின் மனதை புரிந்துக் கொள்ள முடிகிறது. அப்படியான ஒரு படைப்பாகத் தான் நான் இதை பார்க்கிறேன்.

My rating- ⭐️⭐️⭐️
Available on- Amazon
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
86 reviews2 followers
June 28, 2021
ஒவ்வொரு கதையின் தொடக்கம் சற்று வித்தியாசமாக இருந்தது அதன் முடிவு வரும் போது. கும்பமுனி மற்றும் சிரிக்க வைத்தார் மிதம் உள்ள எல்லா சிறுகதைகளில் ஏதோ ஒரு சோகம், வறட்சி, வருமை. சில கதைகள்....

பெரும்பாலான கதைகளில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சு....

வளைகள் எலிகளுக்கானவை, யாம் உண்பேம், படுவத்து பத்து, பரிசில் வாழ்க்கை, தன்ராம் சிங் இவை என்னை மிகவும் கவர்ந்தது....
Profile Image for Karthick Subramanian.
17 reviews21 followers
December 30, 2012
சமூகத்தின் மீதான நாஞ்சிலின் பார்வை, அதை அவர் சாடும் விதத்திற்காகவே படிக்க வேண்டிய ஒன்று , குறிப்பாக "பரிசில் வாழ்க்கை ", "கடவுளின் கால் " படிக்கிறபோது அழுதே விட்டேன் , ஒரு கனத்த சோகத்தை நம்முள் விதைத்து செல்கிற கதைகள் இவை.
Profile Image for Avinash Sankar.
76 reviews11 followers
October 21, 2013
not the every short story's are good. some story's good, some story's o.k. I was like gurkha story(Nepal) when compare to soodiya poo soodarka(Sahitya Akademi Award) it was a good narration and how we treat a gurkha... nice to read
8 reviews
December 12, 2011
what to say!!!
nanjil at his best....
"Yaam UnBem" is the best story in the whole lot.
Mix of sanga thamizh words and the comtempororoy and the marathi thrown here and there...
Brilliant indeed!!
53 reviews8 followers
October 31, 2024
#4thBook #31jan2024 #Madhu_ReadingChallenge2024

இந்த வருட கொள்கையாக, சாகித்ய அகாடமி விருது வாங்கிய அனைத்து நூல்களும் முக்கியமாக நாவல்களும், சிறுகதைகளும் படித்து முடிக்க வேண்டும் என்று திட்டம். அதன் படி தேர்வு செய்யப்பட்ட புத்தகம் தான் அய்யா. நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு சூடிய பூ சூடற்க.

2010இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
160 பக்கங்களும் 15 சிறுகதைகளும் கொண்டது. சில கதைகள் கட்டுரை வடிவிலும், சில கதைகள் சுயசரிதை/பயணக் கட்டுரை மாதிரியும் உள்ளது.
இக்கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் எங்கோ சந்தித்த சந்தித்து கொண்டு இருக்கும் ஒரு நபராக தான் இருப்பார்கள்.
ரயில் பயணத்தின் போது வடக்கில் இருந்து வருபவரை நடத்தும் விதம், பாசங்சர் ரயில்வேயில் பயணிகளுக்கு உள்ள வசதி, ஈசன் கடையில் கிடைக்கும் மலிவான உணவுப்பொருட்களின் நிலைமை, பஞ்சத்தினால் ஏற்படும் கொடுமை, எழுத்தாளர்களின் நிலைமை, கூர்க்கா வின் வாழ்க்கை முறை, நாட்டில் உள்ள லஞ்சம், நா‌ட்டி‌ன் விலைவாசி உயர்வும் சாமானிய மனிதனின் சம்பள உயர்வு, மணப்பெண் மணமகன் exchange entru சமூகத்தில் நடக்கின்ற, நடக்க சாத்தியம் உள்ள சமூக அவலத்தின் குமுறல்களே இச்சிறுகதை தொகுப்பு.

* சூடு ஒரு ருசி, சிவப்பு ஒரு அழகு என்பதெல்லாம் குடுத்து வைத்தவர்களுக்கு
* pasanger பயணிகளை ரயில்வே நிர்வாகம் மனிதர்களாக கருதுவதில்லை
* அவரவர் நியாயங்கள் தனித்தனி. எனது நியாயம் உனக்கும், உனது நியாயம் அவனுக்கும் கட்டுப்படி ஆகாது. முகம் மட்டும் அல்ல, சிந்தனையும் நூறு கோடி.
* எ‌ந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் கண்டதில்லை. முகம் ஏறிட்டுப் பார்த்தவுடன் மலரும் சிரிப்பு. "உன் ஆதரவில் என் வாழ்க்கை" என்பதுப்போல்
* நிர்வாகத்தின் முதல் நிபந்தனையே, அதிகாரத்திற்குப் பணித்தல் தானே

#madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge
#readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders
Profile Image for Sivaramakkrishnan.S.K.
84 reviews1 follower
May 24, 2022
Loved the Book. But Some stories were didnt impress me. But overall a worthy read. This is my first book of Nanjil Nadan sir. His depth of Knowledge on the subjects is well exhibited in his writings. He has great sense of Humor & Sarcasm as well. Bought this book as it won Sakithya Akademi award for Tamil & Felt worth for it.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
March 31, 2023
நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடன் படைப்பாகும். நாஞ்சில் நாடன் அவர்களின் உரையாடலைப் போன்ற எழுதும் பாணி என்னை மிகவும் கவர்ந்தது. அன்பையும் நேசத்தையும் போதிக்கும் கதைகள் இவை.

குறிப்பாக சூடிய பூ சூடற்க எனும் சிறுகதை மிக்க வலிமை உடையதாகும்.
Profile Image for Ponnusamy K.
26 reviews2 followers
December 13, 2018
This is not a classical story , the author narrated some real world experience of his event. The way he use to wrote the stories are we can easily visualize them.
107 reviews1 follower
May 27, 2024
"சட்டத்திற்கு ஒற்றை கண் எனில் ஓட்டைகளுக்கு ஆயிரம் கண்கள். சட்டத்தின் பாதுகாப்பில் ஓட்டைகளில் உயிர் வாழும் தேசம் இது"
Displaying 1 - 16 of 16 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.