ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகளாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான, சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
இந்த புத்தகத்தை படித்து முடிக்கும்போது, நான் எஸ். ராமகிருஷ்ணன்னாக இருக்ககூடாதா என்று எண்ண தோன்றுகிறது. தனக்கு பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்ப்பதும். தான் வாசித்த ஊரையும், இடத்தையும் நேரில் சென்று பார்ப்பதும், (இன்றுவரை பொன்னியின் செல்வனில் வரும் வீரநாராயண ஏரி மட்டும் சென்று பார்த்திருக்கிறேன்)தங்கும் இடம், உன்ன உணவும் எதையும் பற்றி கவலைப்படுவதுமில்லை. நினைத்துப்போல் வாழ்ந்திருக்கிறார் மனிதர்.
புத்தகத்தை பற்றி சொல்லவேண்டுமானால், எழுத்தாளர்களின் புத்தகத்தை அறிந்த நாம், எழுத்தாளர்களை அறிய உதவுகிறது இந்த புத்தகம். அந்த வழியில் இது வாசகருக்கான புத்தகம்.
S R share his experience with the authors he meet starting from college days ... Informative book. Able to know about unknown yet most important books.