சயந்தனின் கதைகளில் அவர் வாழ்ந்த காலங்களின் நினைவுகள் தெரிகின்றன. வாழ்வதற்கான கனவுகள் தெரிகின்றன. வதைபட்ட காலத்தை, அந்தக் காலத்தின் செய்திகளை வெளியே சொல்லும் அவா தெரிகின்றது. சம்பவக் கோர்வைகளை மண்வாசனைக் கதைகளெனக் கட்ட முற்படாது மன உணர்வுகள் பேசுகின்ற, துடிக்கின்ற கதைகளினூடாக சிறுகதை இலக்கியத்தை அடுத்த நகர்விற்குக் கொண்டுசெல்பவராக சயந்தன் உருவாகியிருக்கிறார்.