Jump to ratings and reviews
Rate this book

இலக்கற்ற பயணி [Ilakkatra Payani]

Rate this book
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்கும்நெடுக்குமாகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். உலகத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலே எனது பயணத்திற்க்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. எனது பணங்களே என்னை உருவாக்கின. அந்த பயண அனுபவங்களில் முக்கியமான சிலவற்றை இதில் பகிர்ந்திருக்கிறேன்.

184 pages, Paperback

First published December 1, 2013

31 people are currently reading
270 people want to read

About the author

S. Ramakrishnan

163 books667 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
48 (40%)
4 stars
58 (48%)
3 stars
13 (10%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 22 of 22 reviews
Profile Image for ABIMANYU C.
11 reviews3 followers
May 14, 2024
நம்மை ஒரு பயணியாக்குவது மட்டுமில்லாமல் அவைகள் யாவற்றையும் ரசிக்கும் ரசிகனாக மாற்றும் வல்லமை படைத்த வரிகள் எஸ்.ரா வின் வரிகள்....
Profile Image for இரா  ஏழுமலை .
138 reviews8 followers
January 7, 2024
எஸ்ரா அவர்கள் ஒரு எழுத்தாளர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் அதே அளவிற்கு தன்னை ஒரு பயணி என்றும் சொல்லிக் கொள்வார். பயண நூல்களை பல எழுதி இருக்கிறார் தேசாந்தரி என்ற பெயரில் பதிப்பகமே நடத்துகிறார். அவரின் வாழ்நாள் எல்லாம் இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கு வரை குறுக்கும் நெடுக்குமாக நடந்து அலைந்து இருக்கிறார் அதில் சில அனுபவங்களை நமக்கு இந்த நூல் வழியாக அளிக்கிறார். ஒரு வரலாற்று இடத்தில் நின்று கொண்டு அந்த காலத்தையும் அந்த காலத்து மனிதர்களையும் நினைவில் கொண்டு வந்து அவர்களின் மூச்சுக்காற்றை சுவாசிப்பது போன்று ஒரு உணர்வில் அங்கு நின்று இருப்பது என்பது ஒரு அலாதியான உணர்வு. கபில குன்றில் நின்று கொண்டு கபிலரை பற்றி நினைப்பதும் பரம்பு மலையில் நின்று கொண்டு பாரியை பற்றி நினைப்பதும் எவ்வளவு அலாதியான ஒரு உணர்வு என்று வரலாற்றை நேசிப்பவர்களுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமே தெரியும். அதே நேரத்தில் ஒவ்வொரு வரலாற்று இடமும் எவ்வாறு இன்று சீரழிந்து கிடக்கிறது என்பதும் , ஒவ்வொரு கல்வெட்டுகளும் எவ்வாறு கறி கோடுகளால் கிறுக்கப்படும் சிதைக்கப்பட்டும் இருக்கிறது என்பது வரலாற்றை உணராத மக்களின் செயலுக்காக நாம் தலைகுனிய வேண்டி இருக்கிறது. பரம்பு மலையின் அரசர் பாரி கொல்லப்பட்ட பின் பாரியின் இரண்டு மகளான அங்கவை சங்கவைகளின் வாழ்வுக்காக கபிலர் பெரிதும் உழைத்திருக்கிறார். இறுதியில் அவர்களை திருக்கோவிலூர் மளையமானுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு தென்பென்னை ஆற்றில் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்கிறார். ஒரு மகத்தான அரசனின் மகள்களை தமிழ் சினிமா எவ்வாறு காட்டியது என்பதை நாம் அனைவரும் அறிவோம் அதற்காக ஒவ்வொரு தமிழனும் சீற்றம் கொண்டிருக்க வேண்டும் மாறாக அவர்களைப் பார்த்து நாம் கேலியாக சிரிக்கிறோம் . நாம் எந்த மாதிரி மக்கள் ?????........
Profile Image for Elankumaran.
141 reviews25 followers
October 6, 2023
இலக்கற்ற பயணி ❤️

எழுத்து, வாசிப்பு வழிப்பயணத்தின் ஒரே பாதை. அப்பாதையில் தான் சென்ற இலக்கற்ற பயணங்களிற்கு எம்மையும் அழைத்துக்கொண்டு செல்கிறார் எஸ்.ரா. ஒவ்வொரு பயணமும் இயற்கை, இலக்கியம், கலை, வரலாறு, மனிதம் என ஒவ்வொரு தளத்தி்ற்கு அழைத்துச்செல்கின்றன. எஸ்.ரா வின் கவிநயம் மிகு எழுத்து காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி தேன் உண்ட வண்டின் கிறக்கத்தைப்போல், பயணிக்கும் வேட்கையை மனதில் தள்ளாடவைக்கிறது.

“உண்டு உறங்கி, சுகித்து, உடல்வளர்ப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்ன? வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது நம் கையில்தானிருக்கிறது. அதற்குப் பயணமே எளிய வழி.”
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
June 26, 2016
பயணத்தின் அருமையையைம், அவசியத்தையும் ரசனையோடு விவரிக்கும் நூல். இயற்கையை,இயற்கையில் உள்ள கல், மண், மலை, கடல், ஏரி, நீர் வீழ்ச்சி என பயணத்தில் கண்டவற்றை, அதன் அழகை அவ்வளவு தத்ரூபமாக ரசித்து ரசித்து வர்ணித்துள்ளார். படிக்கும் போதே நாமும் இவ்விடங்களுக்குப் போக வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. இயற்கைதான் என்றில்லாமல், நெடும்பயணம் மேற்கொண்டு பார்த்த இலக்கிய ஆளுமைகளின் நினைவிடங்கள்மற்றும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள இடங்களையும் மிகச்சிறப்பாக விவரித்துள்ளார்.
Profile Image for Ahmed Yahya Ayyaz.
28 reviews1 follower
July 2, 2021
#இலக்கற்ற_பயணி - புத்தக விமர்சனம் / மதிப்புரை / அறிமுகம் :

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு மனதை கிறங்கடிக்கும் ஆற்றல் உண்டு. எஸ்ரா வின் எழுத்துக்கள் வெறுமென காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்துக்களின் குவியல் அல்ல. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் கோர்க்கப்பட்ட அழகான சரடுகள். அப்படித்தான் இலக்கற்ற பயணி எனும் பயணம் குறித்த எஸ்ரா வின் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். பயணம் குறித்து எல்லோருக்கும் ஓர் கனவு உண்டு, எண்ணங்கள் உண்டு, திட்டங்கள் உண்டு. அவையெல்லாம் பயணங்களே அல்ல என்கிறார் எஸ்ரா. நாடோடிகள் பற்றிய சிந்தனை என் மனதில் அடிக்கடி எழுந்து பின் அடங்கும். சிலபோது நானும் சில தோழர்களிடம் நானும் நாடோடி தானே எனச் சொல்லிக் கொள்வேன். அப்படி ஒரு பிம்பத்தை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர. நாடோடிகளின் வாழ்வை நம்மால் அடையவே முடியாது. அதுபோலத்தான் பயணம் என்பதும் பயணி என்பதும் அதில் திட்டமிடல் இருக்காது / சாப்பாட்டு பொட்டலங்கள் அடங்கிய குவியல் நம்மிடையே இருக்காது., தேர்ந்தெடுக்கப்பட்டு, அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட சிறு எண்ணிக்கையிலான உடைகள் இருக்காது. அன்புத் தோழர் இஸ்மாயில் காக்கா ஒருமுறை தனது சக தோழரிடம் "வீட்டை நோக்கிய பயணம் " என்ற போஸ்ட்டுக்கு "இலக்கு வைத்து பயணித்து அடைதலோ, திரும்புதலோ பயணமே அல்ல" என்பார். அதுபோலத்தான் பயணம் என்பதைப் பற்றி எஸ்ரா குறிப்பிடும்பொழுது

"பயணம் செய்வது வேறு, சுற்றுலா செல்வது வேறு. பயணம் என்பது உலகை அறிந்து கொள்ளும், வழி சுற்றுலா என்பது பொழுதைப் போக்குவதற்கான வழி. பெரும்பான்மை சுற்றுலாக்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களே. பயணி ஒரு போதும் சுற்றுலா செல்ல விரும்புகின்றவனில்லை. அவன் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ, சுடச்சுட எழுதி, அச்சிட்டு இணையத்தில் ஏற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதையோ விரும்பாதவன். வானில் பறந்து செல்லும் பறவையின் நிழல், தண்ணீரில் பட்டுச்செல்வதைப் போல தன்னிருப்பை உலகின் மீது படியவிட்டுப் பறந்து போகிறவனே பயணி." என்று எழுதுகிறார்.

எஸ்ராவின் இப்பயண கட்டுரைகளில் இடம்பெறுபவை என்னவெனில் "ஏறி, கடல், ஓவியம், நூலகம், சிற்பங்கள், பண்டைகால கல்வெட்டுகள், பனி விழும் பிரதேசம், ரயில் பயணம் போன்றவையே. தண்ணீர் குறித்த எஸ்ரா பார்வையும், எழுத்தும் அற்புதமானது. கனடாவின் ஏரிகளை பற்றி எஸ்ரா மிக அற்புதுமாக எழுதியிருக்கிறார். அவை உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்து செல்லும். ஏரிகளை பகலில் பார்ப்பதும் இரவில் பார்ப்பதும் எப்படி வேறு வேறு அனுபவங்களை தருமோ அதுபோலத்தான் நான்கு பருவங்களிலும் ஏரிகளை காண வேண்டும். அதுதான் ஏரிகளை முழுமையாக பார்த்ததாக சொல்ல முடியும் இல்லையேல் ஏரியை ஓரளவு பார்த்ததற்கு சமம் என எஸ்ரா சொல்வார். எஸ்ராவின் இப்புத்தகத்தினை பெரும்பாலும் பயணங்களில்தான் வாசித்தேன். அன்பை மீட்டுகிற ஓர் பயணத்தில் கனடாவின் ஒன்டாரியா ஏரிகளைப் பற்றி படித்தேன். உலகின் மிக நீண்ட 1815 அடி உயரத்தில் உள்ள சிஎன் டவரிலிருந்து ஒன்டாரியா ஏரியை பார்ப்பது எவ்வளவு அலாதியானது என்பதை என்னால��� உணர முடிகிறது. உயரம் என்கிற ஒன்று நம்மை வேறு ஒரு உலகிற்கு கூட்டிச் செல்கிறது. கிட்டதிட்ட பறவை அதீத உயரத்தில் அமர்ந்து கொண்டு பறத்தலுக்கு தயாராகும் மனநிலையை அவை ஏற்படுத்தும்.

தண்ணீர் மீதான காதல் என்பது அலாதியானது. அது ஓடும் ஆறானாலும், கொட்டும் அருவியானாலும், அடித்து ஆடும் கடலானாலும் சரியே. அதில் ஓர் கிறக்கம் இருக்கிறது. நாம் வெறுமையை உணரத் துவங்கும்போது , அவமானங்களால் விக்கித்து நிற்கும்போது , தனிமை நம்மை விழுங்கத் துவங்கும்போது இப்பிரம்மாண்டமான நீருக்குள் நம்மை புதைத்துக் கொள்ள வேண்டும். அது நமது வெறுமையை , அவமானங்களை, தனிமையை கழுவி நம்மை சுத்தப்படுத்தும். எழுத்தாளர் பிரபஞ்சன் குளியலை பற்றி எழுதும்போது " பூட்டப்பட்ட அறைகளில் , தண்ணீர் ஊற்றிக் கொள்வதற்கு பெயர் குளியல் அல்ல அது உடலைக் கழுவிக் கொள்வது " என்பார். அப்படியான குளியலைப் போன்று அல்ல ஏரிகளும், கடலும் , ஆறும் நமக்கு தருவது. நீரின் ஆன்மாக்களோடு உரையாடுவதும் பதிலுக்கு நீர் நமது உடலை வருடுவதும் தான் குளியல்.

எஸ்ரா இப்புத்தகத்தில் இரண்டு இடங்களில் ஒரே போலச் செயல்படுவார். ஒன்று கனடாவின் சிம்கோ ஏரியின் முன்பு சிறிய கல்லை எறிந்துவிட்டு இந்த கல் தரையை வந்தடைய இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ, அத்தனை வருடம் என் நினைவுகள் இதில் இருக்கட்டும் என்று எழுதுவார். அதுபோலவே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு முன்பு தனது சட்டைப் பையில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து அருவியை நோக்கி வீசிவிட்டு
" என் கரம் தொட முடியாத அருவியை நாணயம் தொட்டு உணரட்டும். அருவியின் உள்ளே மனிதக்கரங்கள் தீண்ட முடியாமல் அந்த நாணயம் பயன்பாடு என்ற உலகில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளட்டும். எனது வருகை அந்த நாணயத்தின் பெயரால் உறுதி செய்யப்படட்டும். அருவியைப் போல வாழ்க்கை எனக்கு தீராச் சந்தோஷத்தை வாரி வழங்கட்டும் " என நினைத்து கொண்டதாக எழுதுகிறார். எவ்வளவு அற்புதமான வரிகள் இவை. எழுத்தாளன் பிற மனிதனர்களின் ரசனைகளில் இருந்தும், சொற்களில் இருந்தும் வேறுபடும் இடம் இதுதான்.

கடலைப் பற்றி எஸ்ரா இரண்டு இடங்களில் எழுதுகிறார். ஒன்று தனுஷ்கொடி மற்றொன்று கொற்கை. இரண்டுமே தற்போது அழிவுச் சின்னங்களாக காட்சி தருகின்றன. தனுஷ்கொடியில் கட்டிடங்களைத் தவிர எந்த எச்சங்களும் இல்லை அதுபோலவே கொற்கையில் கடல்கூட இல்லாத நிலையில் பல கிலோமீட்டர்கள் பின்வாங்கிய கடலின் எச்சங்களை பற்றி தகவல்களை எஸ்ரா தருகிறார். கடலுக்கு எப்போதுமே ஒரு வசீகரம் இருக்கிறது. சலிப்பற்ற , அலுப்பு தராத ஓர் காட்சிதான் கடல். கடலை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாக நம்மால் காணமுடியும் . கும்மிருட்டில் சிறு பிறை வெளிச்சத்தில், நட்சத்திரங்கள் சூழ காத்திரமாக அடித்து அடித்து அடங்கும் அலைகளை கொண்ட கடலில் முன்பு நம்மை ஒப்புக் கொடுத்து தனிமையை, வெறுமையை அதனிடம் தந்துவிட வேண்டும். அது மனதினை மயிலிறகால் தீண்டும் ஓர் உன்னதத்தை நமக்கு தரும். கடலின் பிரம்மாண்டம் மட்டுமே நமக்கு தெரியும். அதன் அமைதியை சாந்தத்தை யார் அறிவார்..? அறியப் போகிறார். ? கடலிடம் சென்று வெறுமென கால்களை நனைத்துக் கொண்டு ஜோடிகளாக படங்களின் பட்டியல்களை நிரப்புவதில் எனக்கு துளியளவும் உடன்பாடில்லை. அதன் அருகே அமர்ந்து முடிந்தமட்டும் தின்று கழித்து பொழுதை பாழாக்குவது அருவருப்பான ஒன்று. கடலைப் பற்றி மாலுமியின் குறிப்பொன்றை எஸ்ரா தருகிறார் " கடலோடு பேசவும், கடலை நேசிக்கவும் தெரியாதவனை கடல் ஒருபோதும் தன்னுள் அனுமதிப்பதில்லை " .ஒரு முறை ஒரே ஒருமுறை கடலின் முன் நின்று ஓர் கால் மணிநேரம் எதுவுமே பேசாமல் உங்களை நீங்களை கடலிடம் ஒப்புக்கொடுத்துவிடுங்கள். பேரமைதி உங்களைத் தழுவிக் கொள்ளும்.

அடுத்ததாக பின்னிரவைப் பற்றி எஸ்ரா எழுதுகிறார். எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் நேரமது. இரவும் மனிதர்களை மிக நேர்த்தியாக உறங்க வைக்கும் நேரமது. பின்னிரவு எப்படிபட்டது.? எல்லோரும் விழித்திருக்க நீங்கள் மட்டும் விழித்திருக்கிறீர்கள் எனும் போது யாரிடம் அதைச் சொல்லப் போகிறீர்கள்.? யாரைப் பற்றிய நினைவுகளை அந்த பின்னிரவுகளில் அசைபோடப் போகிறீர்கள்.? எஸ்ரா ஓர் இரயில் பயணத்தில் , ஓர் மலை நகரத்தில், ஓர் பனிப் பிரதேசத்தில் பின்னிரவைப் பற்றி மிக நுட்பமாக எழுதுகிறார். பின்னிரவின் இரயில் பயணத்தில் விழித்துக் கொண்டு காற்றோடு கதைக்கிறார். மலைப் பிரதேசத்து பின்னிரவில் தூரத்தில் மலை உச்சியில் எங்கோ வரையப்பட்ட ஓவியம் போல காட்சி தரும் ஒற்றை மரத்திடம் பேசுகிறார். பனி கொட்டும் பின்னிரவில் சூரியனை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

நானும் நிறைய பின்னிரவுகளில் விழித்திருந்திருக்கிறேன். ஓர் இரயில் பயணத்தில், ஓர் பதற்றமான கலவரச் சூழலில், மரணித்த சிறுவனின் சடலத்தை பெற்றுக் கொண்ட பின்னிரவு, அனாதையாய் தொழுகை விரிப்புகளில் கண்ணீர் சிந்தி கையேந்தி நிற்கும் பின்னிரவு என பின்னிரவின் இரகசியம் எனக்குத் தெரியும். அது ஓர் சாந்தத்தை, என்ன வாழ்க்கை வாழுகிறாய் என்று ஓங்கி விடும் அறையை, பெரும் குற்ற உணர்ச்சியை, தாங்குவதற்கு கரங்கலற்ற தருணத்தில் கண்ணீரை படைத்தவனிடம் ஒப்படைத்தலை என நிறைய பின்னிரவுகள் என்னிடம் உண்டு. அதனால் தான் நான் அடிக்கடி " இரவு என்பது வெறுமென உறங்குவதற்கானது மட்டுமல்ல. தலையணை தலைசாய்ப்பதற்கு மட்டுமானதல்ல என்பதைப் போல " என்று எழுதி வைக்கிறேன்.

இந்த மொத்த புத்தகத்திலும் நான் மிக ரசித்த ஓர் பயணக் கட்டுரை ஒன்று இருக்கிறது அதுதான் "கூட்ஸ் பயணம் " . நிறைய நேரம் இரயில் நிலையங்களில் இரயிலுக்காக காந்திருந்த போதெல்லாம் எனை கடந்து ஏராளமான கூட்ஸ் இரயில் போயிருக்கிறது. அதனைப் பார்ப்பதற்கு கொஞ்சம் அலுப்பாக இருந்த போதிலும் கூட்ஸ் பெட்டியின் கடைசி பெட்டியில் திறந்த வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த இரயில்வே ஊழியரை விடாமல் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றியான கட்டுரை தான் கூட்ஸ் பயணம்.

உடலை வருத்திக் கொள்ளாத உழைப்புகளிலெல்லாம், பெரும்பாலும் நேரத்தை எனதாக்கி புத்தகங்களை வாசிப்பதும், கதைகளை கேட்பதும் உண்டு. அலுப்பையும் , சலிப்பையும் தரும் கூட்ஸ் வண்டியில் எப்படி ஒரு ஊழியரால் நீண்ட தூரம் பயணிக்க முடிகிறது. எல்லா அதிவிரைவு வண்டிகளுக்கும் வழி விட்டு ஆமை நடைபோடும் கூட்ஸ் வண்டிகளில் அந்த ஊழியர் ஒற்றை மனிதராய் அப்படி என்ன பொழுதை கழிப்பார். எஸ்ராவிற்கு அந்த கூட்ஸில் பயணிக்க வேண்டுமெனவும் அதில் மார்கஸிம் கார்க்கியின் இரயில் கதைகளை வாசிக்க வேண்டுமென தோன்றி அந்த ஊழியரின் அனுமதியோடு கூட்ஸில் பயணிக்க துவங்குகிறார். பயணத்தின் முடிவில் அலுப்பும், உடலை அப்பிக் கொள்ளும் அழுக்கும்,தூசியும், இரைச்சலும் தான் மிச்சமானது. அவரால் அந்த சூழலில் அப்புத்தகத்தை வாசிக்கவே முடியவில்லை. ஆனாலும் " இன்றும் எங்காவது கூட்ஸ் ரயில் போவதைப் பார்க்கும்போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன. ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை." என்று எஸ்ரா எழுதுகிறார்.

நான் வசிக்கும் பழங்குடி கிராமத்திற்கு அருகே 50 கிலோ மீட்டருக்குள்ளே தான் ஒரிசாவின் பழங்குடி கிராமங்கள் தொடங்குகின்றன. கிட்டதட்ட இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ளவர்களும் ஒரிய மொழியை பேசக்கூடியவர்களே. எஸ்ரா இப்பழங்குடியினர் குறித்து தனது பயணக் கட்டுரைகளில் எழுதுகிறார். அவர்களது வாழ்வியல், அவர்களது அன்றாட வாழ்க்கை, அவர்கள் ���ன்றுகூடும் வாரச் சந்தை என எஸ்ராவின் குறிப்புகளை நேரடியாக கண்டிருக்கிறேன். பழங்குடி மக்களை கவருவதற்கு ஒவ்வொரு வாரச் சந்தையிலும் நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மலிவு விலை பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகிறது. அது குறித்து எஸ்ரா சொல்லும்போது "நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லா பொருட்களும் டூப்ளிகேட், அதே நேரம் பழங்குடி மக்கள் விற்பனைக்காக வைத்திருப்பவை அத்தனையும் இயற்கையாக விளைந்தவை. தங்களின் உழைப்பால் உருவான அந்தப் பொருட்களை விற்று டூப்ளிகேட் பொருள்களைப் பழங்குடிகள் வாங்கிப்போகின்ற காட்சியைப��� பார்த்துக்கொண்டேயிருந்தேன்.மலிவான பிளாஸ்டிக் கலாச்சாரத்தைப் பழங்குடிவரை கொண்டு சேர்த்திருப்பது வருத்தமாக இருந்தது." என்று எழுதுவார்.

ஒருமுறை வாரச் சந்தைக்காக சந்தை நடக்கும் பகுதிக்கு ஆடும் , கோழிகளும் ஏற்றப்பட்ட ஆட்டோவில் சென்றேன். சந்தையில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். சில பொருட்களை வாங்கியிருக்கிறேன். சிலவற்றை விற்றிருக்கிறேன். ஓர் பழங்குடிக் கிழவர் தான் வளர்த்த நாட்டுக் கோழிகளையும், சேவல்களையும் கால்களை கட்டி சந்தையில் கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தார். நாட்டுக் கோழிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. சந்தை முடிகின்ற நேரம் அக்கிழவரை பார்த்தேன். ஓர் இறைச்சி கடையில் பிராய்லர் கோழி இறைச்சி 1/2 கிலோ , சில சாராய பொட்டலங்களை, காய்கறிகள், மளிகை பொருட்கள் என தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு தனது ஊரை நோக்கி புறம்படத் துவங்கினார். பிராய்லர் கோழிகள், மேகி நூடுல்ஸ்கள், தலைக்கு அடிக்கும் சாயங்கள், நச்சு மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்கள் என நகரத்து அரக்கர்களின் கரங்கள் எப்போதோ அவர்களை அரவணைக்க தொடங்கிவிட்டன.

பயணங்களைப் பற்றிய எழுத்துக்களை ஓர் பயணியால் தான் சொல்ல முடியும். ஓர் பயணியும், தேர்ந்த எழுத்தாளனுமாகிய எஸ்ராவின் எழுத்துப் பணிகள் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்கட்டுமாக என வாழ்த்துகிறேன். எஸ்ரா சமகால எழுத்துலகின் சிற்பி என்றால் அது மிகையல்ல.!

புத்தகம் : இலக்கற்ற பயணி
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 184
விலை :₹175
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்
Profile Image for Yadhu Nandhan.
260 reviews
March 11, 2021
எஸ்ரா அவர்களின் கட்டுரைகளை படிப்பதே ஒரு அலாதி இன்பம் தான். வாழ்வை அணுஅணுவாய் எப்படி ரசிப்பது என்பது அவற்றின் மூலம் புரியும். எஸ்ராவின் "துணையெழுத்து" ஐ படித்தபோது அவரின் அனுபவங்களை கண்டு எனக்கு பொறாமை ஏற்பட்டது அதே உணர்வு இந்த புத்தகத்தை படிக்கும்போதும் ஏற்படிகிறது. புத்தகத்தை படித்து முடித்தபின் இதனுள் இருக்கும் எழுத்துக்கள் நம்மை இருந்த இடத்திலிருந்தே கனடா, டொராண்டோ, சிங்கப்பூர்,ஹம்பி, லூதியானா, விழுப்புரம்,மதுரை,பறம்பு மலை என உலகையே சுற்றிககாட்டுகிறதே என வியக்க வைக்கிறது. அப்படி இருக்கும் சுற்றுலா இலக்கியம் ஓவியம் சிற்பம் நாடகம் என கலைகளையும் தழுவி வருகிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் மகத்துவத்தையும் அழகையும் எடுத்துரைக்கிறது. வாழ்வில் அனைத்தையும் ரசிக்கக் கத்துக் கொடுக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
Profile Image for Rohith.
31 reviews4 followers
June 15, 2023
Journeying alongside the words of S.Ra, I embarked on a transcendent odyssey, traversing the enchanting landscapes of Canada, the United States, Singapore, Hampi, and countless other captivating destinations. Through the pages of his book, a symphony of simplicity unfolded, revealing a writing style that eludes the grasp of many. What resonated deeply within me was the profound truth that traveling transcends mere physical presence; it demands an immersion in the rich tapestry of a place's history and background.

With the finesse of a seasoned sage, S.Ra delicately weaves his experiences, guiding me through a labyrinth of destinations that seemingly converge upon a central theme. Time and again, he gracefully returns to the very heart of his narrative, adding depth and nuance to each tale shared. Each word, a brushstroke upon the canvas of my imagination, brought to life the vivid colors and textures of the places he explored.

As I journeyed alongside S.Ra's lyrical prose, a transformative magic unfolded. I stood in awe of the profound wisdom he imparted, akin to that of a sage who has seen the passage of years and carries the echoes of time in his words. Each step, each encounter, was a poignant reminder that the true essence of travel lies not only in traversing new horizons but in weaving the threads of knowledge, history, and heritage into the fabric of our experience.

Through the captivating pages of his book, S.Ra beckoned me to embark on an inward expedition, where each destination became a gateway to self-discovery. I marveled at the way he effortlessly intertwined the narratives of kindred places, skillfully drawing connections that illuminated the hidden interplay between cultures and landscapes.
Profile Image for Sruthi.
24 reviews
March 30, 2024
✨ இலக்கற்ற பயணி – எஸ். ராமகிருஷ்ணன்

✨ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பயண கட்டுரைகளை வாசிக்கும்போது உடனடியாக எங்காவது பயணம் செல்லவேண்டும் போல் தோன்றுகிறது.

"வானில் பறந்து செல்லும் பறவையின் நிழல், தண்ணீரில் பட்டுச்செல்வதைப் போல தன்னிருப்பை உலகின் மீது படியவிட்டுப் பறந்து போகிறவனே பயணி."

✨ கனடா ஏரிகளின் அழகு முதல் ஹம்பியின் நிழல்கள் வரை எத்தனை எத்தனை பயணங்கள். கபிலர் முதல் போர்ஹே வரை அவர் வாசித்த எழுத்துலகம் மிகப் பெரியது.

✨ நாம் நம் நாட்டிலுள்ள வரலாறு சின்னங்களை பாதுகாக்க தவறுவதை நவ கண்டம் போன்ற கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். அதே சமயம் பிற நாட்டவர்கள் அவர்களின் வரலாறு சின்னங்களை பாதுகாப்பதை ரிவேரா ஓவியங்கள் போன்ற கட்டுரைகளில் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

✨ கண்ணகி சென்ற வழித்தடங்கள் என்ற பயணம் என்னை ஈர்த்தது. நெட் கெல்லி பற்றி அறிந்தது, சிங்கப்பூர் பற்றிய கட்டுரை என நிறைய விஷயங்களை இந்த புத்தகம் வாயிலாக தெரிந்துகொண்டேன். கூட்ஸ் ரயில் பயணம் ஆசை படாத குழந்தை மனங்கள் உண்டோ?

✨ அன்றாட தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்கவே போராடிக் கொண்டிருக்கும் கிராமங்களையும், நயாகரா அருவியையும் ஒப்பிட்டு ஆசிரியர் எழுதியிருக்கும் கட்டுரையின் ஆழம் நம்மால் உணர முடிகிறது. இப்படியாக நிறைய பயணங்கள், நிறைய அனுபவங்கள் என இந்த புத்தகம் வாசகர்களுக்கு ஒரு சிறந்த பயண வழிகாட்டி.
7 reviews2 followers
June 23, 2020
He has written his own experience that travelling gave him. He focuses on travelling with an objective. Book gives us various knowledge in the form of geographical where sometimes simile is used to describe the place in relation to the works of other artists.
Worth Reading ❤️
9 reviews
December 13, 2018
இலககறற பயணி இனிய பயணம். எஸ் ரா வுடன் இணைந்து பயணித்தது போல அனுபவம்.
Profile Image for Anitha Ponraj.
277 reviews45 followers
February 16, 2022
புத்தகம் : இலக்கற்ற பயணி
ஆசிரியர் :எஸ். ராமகிருஷ்ணன்
பக்கங்கள் :184
விலை :175
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

எஸ். ரா உடனான மூன்றாவது பயணம். புத்தகங்களின் பக்கங்களினூடே பயணிப்பதும், பயணப் புத்தகங்கள் வாசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. எனவே எஸ். ராவின் புத்தகங்கள் எனக்கு விருப்பமானவையாக இருப்பதில் வியப்பில்லை.

அந்த வகையில் மீண்டும் ஓர் பயணம். 27 தலைப்புகளில் 27 இடங்களுக்கு பயணிக்கிறோம் எஸ். ராவின் எளிமையான கவிக்கண்ணோட்டத்துடனான எழுத்துநடையில்.

பொதுவாக பயணப்புத்தகங்களில் அந்தந்த இடங்களின் புகைப்படங்களோ, கோட்டு ஒவியங்களோ இருப்பது வழக்கம், ஆனால் எஸ். ராவின் வார்த்தைகள் அந்த இடங்களை நம் மனக்கண் முன் நிறுத்தும், அவர்கண்ட காட்சிகளின் பிம்பங்களை வார்த்தைதூரிகையால் நம் விழித்திரையில் வண்ணம் தீட்டுவார். இரயில் பயணங்கள் பற்றி அவர் விவரிக்க நம் மனமோ தண்டவாளத்தில் ஓடும் ரயிலாகும், நயாகராவை அவர் விவரிக்க அதன் சாரல் பக்கங்களினூடே நம்மீது தெறிக்கும்.

ஒவ்வொரு புத்தகங்களும் நமக்கு ஒவ்வொரு விசயங்களை ��ற்றுத்தரும் என நான் நம்புகிறேன். எஸ். ராவின் புத்தகங்களில் உள்ள எழுத்துநடை நம் வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் சின்ன சின்ன விஷயங்களையும் நின்று, கூர்ந்து கவனித்து, ரசித்து,வியந்து உணர்ந்து வாழவேண்டும் எனத் தூண்டும்.
Profile Image for Suba Mohan.
105 reviews3 followers
December 13, 2025
ஆசிரியரின் எழுத்து பலமுறை கடல் கடந்து அவர் குறிப்பிட்ட இடத்திற்கே நேரில் சென்று பார்த்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது. மனதிற்கு இதமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. 

இந்தப் புத்தகத்தை வாசிக்க பிறகு என்னுடைய travel லிஸ்ட்டில் பல இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கோனார்க் சூரியன் கோவில், கழுகு மலை, ஹரித்துவார், கொடும்பாளூர், கொற்கை, ஒரிசாவில் உள்ள தௌலி, ஶ்ரீரங்கத்தில் உள்ள விஜய கோபாலசுவாமி கோவில், நயாகரா மற்றும் சிங்கப்பூர். கூட்சு வண்டிப் பயணம் மற்றும் ரயில் பயணத்தைப் பற்றிய தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தது. 

இந்தப் புத்தகத்தில் இருந்து நான் புதிதாக தெரிந்துகொண்டது நவகண்டம் என்னும் சொல். முந்தைய நாட்களில் தன் தலையைத் தானே அறுத்து பலியிடும் முறைக்கு பெயர் தான் நவகண்டம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. குடும்ப நன்மை, தீரா நோய், வேண்டுதலாக இருக்கலாம் அல்லது தண்டனையாகவும் இருக்கலாம். தன் தலைவனுக்காக ஒரு பெண் தன் தலையைத் துண்டித்துக்கொள்வது ஆவிப்பலி என்பதாகும். பண்டையகால மக்களின் நம்பிக்கையே இது. நவகண்டம் பற்றி படிக்கும்போது இதை செய்வதற்கு எந்த அளவிற்கு துணிவும் தைரியமும் வேண்டும் என்றே தோன்றியது. Mind blowing. நான் முற்றிலுமாக ரசித்து வாசித்த புத்தகம். கட்டாயம் நீங்களும் வாசிக்க வேண்டிய ஒன்று.
Profile Image for Raavanan.
7 reviews
February 2, 2022
இலக்கற்ற பயணி

பயணங்கள் ஓய்வதில்லை அவை அளிக்கும் அனுபவங்களோ குறைவதில்லை!

ஒவ்வொரு பயணங்களும் மறக்கமுடியாத ஏதோ ஒன்றை கொடுத்துவிடுகின்றன. இந்த நூல் திரு எஸ்.ராமகிருஷ்ணனின் அவர்கள் தன் வாழ்நாளில் செய்த பயணங்களின் தொகுப்பு. எழுத்துகளின் தேர்வும் அது கோர்க்கப்பட்ட நயமும் இந்த நூலில் மற்றொரு சிறப்பு.


"பயணம் செய்வது வேறு, சுற்றுலா செல்வது வேறு. பயணம் என்பது உலகை அறிந்து கொள்ளும், வழி சுற்றுலா என்பது பொழுதைப் போக்குவதற்கான வழி. இலக்கு வைத்து பயணித்து அடைதலோ, திரும்புதலோ பயணமே அல்ல" என்ற வாசகத்தை தலையாய் கொண்டு நூல் தன் பயணத்தை துவங்குகிறது. ஒவ்வொரு பயணங்களும் மறக்கமுடியாத ஏதோ ஒன்றை கற்று தர கூடியது. பயணங்களில் வழியெ தான் நாம் இந்த உலகை, மனிதர்களை, கலை இலக்கியங்களின் முக்கியதுவைத்தை, வாழ்க்கையின் அழகியலை உணர முடியும்.

இந்த புத்தகம் நம்மை இருந்த இடத்திலிருந்தே கனடா, டொராண்டோ, சிங்கப்பூர்,ஹம்பி, விழுப்புரம்,மதுரை, ஹரித்துவாா் என உலகையே சுற்றி வர செய்யும்.

நிட்சயமாக ஒரு முறையாவது வாசிக்க வேண்டிய ஓர் படைப்பு.🖤
Profile Image for Arun.
154 reviews
May 19, 2023
முதலில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு என்னை ஈர்த்தது.
"இலக்கற்ற பயணி" - நன்றாக இருக்கிறதே!

கட்டுரைத் தொகுப்பு நூலில் என்ன அனுபவம் கிடைத்துவிடும் என்றெண்ணி தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆசிரியரின் பயண அனுபவன்குளுக்கு மேல், அவர் அந்த இடங்களின் சிறப்புகள் பற்றியும் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் கூறியது புத்துணர்ச்சி அளித்தது.

இயற்கை இடங்கள் பற்றிய அவருடைய எழுத்துக்கள் என்னுள் சில ஆண்டுகளாய் உறங்கிப் போய் இருந்த இயற்கைக் கவிஞனை எழுப்பிவிட்டது.

ஒரு தமிழ் எழுத்தாளர், எப்படி இத்தனை ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டார் என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. நான் இன்னும் ஒரு நாட்டிற்குக் கூடப் போனதில்லை. ஆனால், நிறைய வரலாறு, கதைகள் எல்லாம் படித்து ஆர்வம் கொண்டிருக்கிறேன். செல்ல வாய்ப்பும் பணமும் நேரமும் அமைய வேண்டும்.

----------------------

A surprisingly good read. More than that, this book is giving such unknown vibes and a fresh feel inside - like rekindling the poet inside me for travel and history and nature. The author is really good with words and Tamil eloquence is laudable.
Profile Image for Karthikeyan B.
4 reviews
January 1, 2026
#எஸ்ராமகிருஷ்ணன் எழுதிய #இலக்கற்றபயணி இந்நூல், வெறும் பயணக் குறிப்புகள் மட்டுமல்லாமல், பயணத்தின் மூலம் ஒருவரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பாகும்.

25 ஆண்டுகளுக்கும் மேலான இவரது பயண அனுபவங்கள், உலகைப் புரிந்துகொள்ளும் தேடலாக மாறி, ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமாக உருவானது என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

(பயணம்செல்வதுவேறுசுற்றுலா செல்வதுவேறுபயணம்என்பதுஉலகைஅறிந்துக்கொள்ளும்ஒருவழிசுற்றுலா என்பதுபொழுதைபோக்குவதற்காகன வழி 😌🙌🏻💯)
15 reviews
October 8, 2023
பயணம் பற்றி நான் படித்த சிறந்த புத்தகம். s.ra என்னுள் இருந்த பயண ஆர்வத்தை தட்டி எழுப்பினார். இந்தியா-கோனார்க், ஹரித்வார், சமணர் இடங்கள், கொடைக்கானல் ஏரி, ஸ்ரீரங்கப்பட்டணா, ஹம்பி மற்றும் பல இடங்களை பயணிக்க வேண்டும்.
பின்னர் இந்தியாவிற்கு வெளியேவும் பயணிப்பேன்- ஒன்டோரியோ ஏரி, சிம்கோ ஏரி, நயாகரா நீர்வீழ்ச்சி, சிங்கப்பூர்
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
December 2, 2020
எஸ்.ரா வை வாசிப்பதின் ஊடே நாம் இந்த உலகை, மனிதர்களை, கலை இலக்கியங்களின் முக்கியதுவைத்தை, வாழ்க்கையின் அழகியலை, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துளியென்றும் உணர முடியும்...இவரின் எழுத்து ஒருவகை போதை..🖤
Profile Image for Harish Karthik.
10 reviews1 follower
February 2, 2023
Hop on to this beautiful train that takes you around the world. It contains essays about the places the author has visited. The author re-lived those moments here. A must-read for those who seek adventures.
5 reviews
May 30, 2023
Travels are a collection of various emotions, it is not always fruitful or enjoyable. But Travel itself has its own ways of life. This book make you travel in the various aspects of our emotions and conveys the joy of travel across our nation. As usual SRA sir is great!
Profile Image for Rajkumar N.
5 reviews
Read
December 6, 2022
எப்போதும் எஸ். ராவின் எழுத்தும் அவர் எழுதும் பயணம் பற்றி புத்தகமும் விளக்கம் சொல்ல முடியாது மகிழ்ச்சி தர��பவை... இலக்கற்ற பயணியை வாசிக்கும் போது அவருடன் தேசாந்த்ரியாய் பயணிப்பது போலவே இருக்கிறது ..
Displaying 1 - 22 of 22 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.