கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் வெவ்வேறு வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் வீட்டுக்கடன் பிரிவில் பணியாற்றியுள்ளேன். அதில் சரிபாதிக் காலம் நேரடியாகவும், மறுபாதிக்காலம் மறைமுகமாகவும் வசூல் துறையில் (COLLECTION DEPARTMENT) பணியாற்றியுள்ளேன். அதில் நான் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், வசூல் வேலை செய்யும் பணியாளர்களின் உண்மை நிலவரங்கள் குறித்த நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இதில் வரும் அத்தனை சம்பவங்களும் உண்மை. இதனையெல்லாம் படிப்பதால் என்ன பயன் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஒரு உண்மையான வெற்றியாளன் என்பவன், அடுத்தவன் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்பவனே. தீ சுடும் என்று நாம் தொட்டுப் பார்த்துக் கற்றுக்கொள்ளவில்லை.
தனது சொந்த வாழ்வில் பணி நிமித்தமாய் சந்தித்த மனிதர்களை பற்றி வெகு சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். தனது அனுபவங்களை அழகாக தொகுத்து தலைப்பிட்டு வழங்கியிருக்கிறார். வாழ்த்துகள் சகோ