Jump to ratings and reviews

பிச்சிப் பூ

மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க - முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும். பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை பயணத்தோடு தொடங்கும் நாவலின் பிற்பாதியில் மூர்த்தியார் - பிச்சிப்பூ வாழ்க்கை இனிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னீலனின் 'மறுபக்கம்' நாவலில் ஒருபகுதியாக வந்துபோன இச்சோடி இக்கதையில் நாயகன்-நாயகியாக தனி அத்தியாயமாக நிற்கின்றனர். பல சுவையான சம்பவங்களோடு தொடரும் இந்நாவலை படிப்பவர்களுக்கு பல நல்ல நினைவுகளோடு, நினைவில் நிற்கும் கதை.

76 pages, Paperback

First published April 1, 2019

Loading...
Loading...

About the author

பொன்னீலன்

8 books4 followers
பொன்னீலன் (1940) தமிழில் நாவல்களும் கதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வை கொண்டவர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். முற்போக்கு இலக்கியம் மற்றும் சோஷலிச யதார்த்தவாதம் சார்ந்த கோட்பாட்டு நூல்களையும் எழுதியிருக்கிறார்.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (66%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Indhu Suresh.
17 reviews4 followers
August 16, 2021
76 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், அக்காலத்து வாழ்க முறை, ஊர் கோவில் திருவிழா, பண்டிகைகள், விளையாட்டுகள், எல்லாம் அதுவும் நாகர்கோவில் பாஷையில எழுதியிருப்பதை வாசிக்கும்போ ,பல நினைவுகளையும் பல உணர்வுகளையும் தூண்டியது.

அது மட்டும் அல்லாமல், சாதி மத வேறுபாடு, தீண்டாமை, பெண்கள் மீதான அடக்குமுறை, மேல் சாதிக்காரர்களின் அட்டூழியங்கள், போன்ற பல அநீதிகளை மையம் கொண்டு இருப்பதன் காரணத்தால் இது ஒரு முக்கியமான நாவலாக இருக்கிறது.

சுவாரசியம்முன்னு பெரிசா இல்லநாலும் 
அதை ஒரு குறையாகச் சொல்ல இயலாது.
யதார்த்தமான ஒரு கதை. யாரும் எளிதாகப் படிக்கலாம். 
Profile Image for Dhanaraj Rajan.
547 reviews373 followers
November 30, 2024
Three and half stars.

74 பக்கங்களே உள்ள சிறிய நாவல் இது.

கதைக்களன்: 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்/இடையில் இருந்த தென் திருவிதாங்கூர் சமஸ்தானம் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்).

கதை:
கதை என்று சொல்வதென்றால் மூன்று சகோதரர்களின் கதை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
1. பெரிய நீலன் கிறிஸ்தவராக மதம் மாறி பேரின்பன் எனப் பெயர் பெற்று பிரிட்டிஷ் அரசு உத்தியோகம் பெற்று முன்னேறுவது.
2. சின்ன நீலன் இறுதி வரை தனது குலசாமியான முத்தாரம்மனுக்கு விசுவாசியாக இருப்பது; இடையில் வைகுண்ட சாமியிடம் அடைக்கலம் அடைவது...
3. மூர்த்தியார் - வீர தீர சூரன்; அனைத்து வர்மமும் வைத்தியமும் தெரிந்தவர்; அநீதியை எதிர்ப்பவர்; நீதியின் பக்கம் நிற்கக் கூடியவர், அதற்காக சண்டையிடவும் தயங்காதவர்.
இதுதான் இந்த மூன்று சகோதரர்கள்.

ஆனால் பொன்னீலன் நாவல் முழுதும் பல சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களையும், பண்பாட்டு தகவல்களையும் தூவிச் சென்றுள்ளார்.

சில வரலாற்றுத் தகவல்கள்:
1. சார்லஸ் மீட் எனும் மிசனரியின் மக்கள் நலன் சார்ந்த பணிகள்;
2. வைகுண்ட சாமி எப்படி அடித்தள சாதிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார் என்பது பற்றிய தகவல்கள்:
3. மார்ஷல் நேசமணி பற்றிய சுவாரசியமான தகவல்கள்;
4. வைக்கம் போராட்டம் பற்றிய செய்திகள்:
5. குமார கோவில் கோவில் நுழைவு போராட்டம் பற்றிய தகவல்கள்.

சில பண்பாட்டுத் தகவல்கள்:
1. அடியோலை எனும் தாழ்ந்தோராக கருதப்பட்ட மக்கள் பயன்படுத்திய மிதியடி;
2. பனந்தந்தி எனும் தகவல் தொடர்பு முறை:
3. அக்காலத்திய கன்னியாகுமரி பகுதி வாழ் மக்களின் உணவு முறைகள், வீர விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்.....

ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.
Displaying 1 - 2 of 2 reviews